Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 15 - பூர்ணிமா செண்பகமூர்த்தி - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 15 - பூர்ணிமா செண்பகமூர்த்தி

Idho oru kadhal kathai

முதனுக்குக் கதையை விட்டுவிட மனமில்லை, தொடர்ந்து அடுத்த பகுதியை வாசிக்க ஆரம்பித்தான்.

வெள்ளைத்தாமரை இதழ்-14     இதோ ஒரு காதல் கதை  பகுதி-14

" லோ சத்யாவா? "                      

"அம்மா! சத்யா தான்பேசுறேன்! சொல்லுங்க என்னம்மா ? ”. 

“ஒண்ணுமில்லமா.  ரம்யா உன்கிட்ட பேசிட்டு வச்சிருப்பா போல. நான் அவங்கப்பா நம்பர்னு  நினைச்சு தெரியாமல் ரீ டயல் பண்ணிட்டேன்.!” 

“அப்படியாம்மா வேற விஷயமில்லையே?”

“இல்லமா சத்யா, போனை வைச்சிடுறேன்!” என்று அம்மா போனை வைத்ததும், சத்யா நம்பரை டயல் பண்ணி வச்சது நல்லதாப் போச்சு !அப்பாடி தப்பிச்சேன்! என்று பெருமூச்சு விட்டாள் ரம்யா .

கார்த்திக்கும் தினேஷும்  மரத்தடியில் உக்கார்ந்து இருந்தனர். 

“தினேஷ், இன்னிக்கு ராபின் லீவு எடுத்தது எதுக்கோ தெரியாது. ஆனால்  கண்மணி என்கிட்டே சொன்னது எல்லாத்தையும் உன்கிட்ட சொல்றதுக்கு இப்போ ஒரு நேரம் கிடைச்சது. ராபின் நம்மோட இருக்கிறப்ப ரம்யாவைப் பத்தி ஒன்னும் பேச முடியாது. ரம்யா சரியாவே  சாப்பிடறது இல்லையாம். அப்புறம் எப்பப்  பார்த்தாலும் போன் வருதான்னு பார்த்துட்டே இருக்காளாம். பஸ்ல ஜன்னல்கிட்ட உக்கார்ந்து எட்டிஎட்டிப் பார்க்கிறாளாம். ஆனால் உன்னைப் பத்திக் கேட்டால் வாயே தொறக்கமாட்டேங்கறாளாம். தினமும் இந்த மரத்தடியில் இருந்து கொஞ்ச நேரம் மாடி வராந்தாவைப் பார்க்கிறாளாம். எதுக்கும் காரணம் புரியலன்னு சொன்னா! “.

“எனக்குப் புரிஞ்சிருச்சு. எனக்குப் புரிஞ்சிருச்சு.  இன்னும் ரெண்டே நாள் தான் கிளாஸ் இருக்கு. அதுக்குள்ள எப்படியாவது அவகிட்ட சொல்லப் போறேன்!”. தினேஷ் எழுந்து நின்று குதித்தான். 

கீதா  சொன்னா  “ரம்யாவுக்கு  பசங்க கிட்ட பேசுறது கூட பிடிக்காதுனு சொல்றா. நீ அவகிட்ட பேசிக்கக்கூட முடியாதுன்னு . ஒரு போன் நம்பர் வாங்கி தர்றதுக்கு அவகிட்ட கெஞ்சிக் கூட பார்த்தேன். சொல்லவே முடியாதுன்னா. காலில் விழாத குறைதான் ரம்யா நம்பர் தரதுக்கு. இப்ப நானே ரம்யாவை என் வழிக்குக் கொண்டு வந்திட்டேன் பார்த்தியா?”

நீ நல்லா யோசிச்சுட்டியா தினேஷ். நானே ஏன்டா இப்படி இதில் சிக்கிட்டோம்னு பலநாள் யோசிச்சிருக்கேன். வீட்டுலயும் பிரச்சனைதான்!  எல்லாம் நல்லபடியா நடக்குமா?

நடக்கும்டா! நடக்கும்! எல்லாம் நல்லபடியா நடக்கும்.   இத்தனை வருஷம் அவ யாருனே எனக்குத் தெரியாது. என்னிக்கு காலேஜ்   என்ட்ரன்ஸ் எக்ஸாம் ரிவிஷன் செஷன்ல அவளைப் பார்த்தேனோ அன்னிக்குல  இருந்து  அவ தாண்டா என் மனசுல இருக்கா.

“அடப்பாவி நீ அவளை இங்கே வந்து தான் முதலில் பார்த்தேன்னு நினைச்சேன். !” கார்த்திக் ஆச்சரியமாகக் கேட்கவும்,

இல்ல கார்த்திக், நான் இன்ஜினியரிங் என்ட்ரன்ஸ் கோச்சிங் ரெகுலராப் போகல. போஅப்படிப் போயிருந்தால் எப்பவோ அவளைப் பார்த்திருப்பேன்.  நானே சில போர்ஷன்ஸ்  படிச்சேன். ஒரு நாள் மேத்ஸ் ரிவிஷன் செஷன்ல கிளாஸ் கண்டுபிடிச்சு போக கொஞ்சம் லேட்டாகிடுச்சு. அவள் உக்கார்ந்து இருந்த பெஞ்ச் பின்னாடி மட்டும் தான் காலியா இருந்தது. உனக்குத் தான் என் மறதி பத்தி தெரியுமே. லாக் புக் எடுக்க மறந்துட்டேன். சார் சொல்லவும், எல்லாரும்  லாக் புக் பாக்கிறாங்க, என் பக்கத்துலையும் யாரும் இல்லையா.ஒரு செகண்ட் தான், டக்னு லாக்புக்கை நீட்டிட்டுத் திரும்பிட்டா. அந்த நொடியோட எல்லாம் மாறிப்போச்சு. அந்த நிமிஷமே  அவளை எனக்குப் புடிச்சுப் போச்சுடா.   அங்கே கிளாஸ் முடியவும் பொண்ணுங்களை முதலில் போக சொல்லிட்டுத் தானே பசங்களை வெளிய விடுவாங்க. அதே போல லாக் புக்கை டெஸ்க்ல இருந்து எடுத்துட்டு வேகமாக போயிட்டா. திரும்ப அவளை எப்போ பார்ப்பேன்னு தவிச்சிட்டு இருந்தேன்டா. என்னோட அதிர்ஷ்டம், நம்ம காலேஜ் தான் ரெண்டு பேருக்குமே, எக்ஸாம் சென்டர். என்ட்ரன்ஸ் எக்ஸாம் அன்னிக்கு ஒரு லைட் எல்லோ க்ரே மிக்ஸ்ல  ஒரு சுரிதார் போட்டு வந்திருந்தா. எனக்கு செம்ம சந்தோஷமா இருந்தது. அவ இந்த காலேஜ்ல தான் படிப்பான்னு அவ பிரெண்ட்ஸ் கூட பேசுறதை வச்சுப் புரிஞ்சிகிட்டு தான் இங்கே சேர்ந்தேன்.என் அண்ணன் பல தடவை கூப்பிட்டும் சென்னைக்குப் போகலடா. 

தினேஷ், உனக்குள்ள இவ்ளோ இருக்குனு  எனக்குத் தெரியாதுடா. சரி உன்னை அவள் புரிஞ்சுப்பானு நினைக்கிறேன்.  ரெண்டு நாளுக்குள்ள சொல்லிரு. ரம்யா அதுவுமில்லாம உன்னைப் பத்திக் கண்மணி கேட்டால் பிடிகொடுத்தே பேசல. வேற எவனாவது உள்ள புகுந்துறப் போறான். ஏற்கனவே அந்த பாபு அவகிட்ட உதவி என்ற பேர்ல எதாச்சும் பேசிட்டு இருப்பான். 

ச்சே! ச்சே!அவ அப்படிலாம் அவன் கிட்ட பழகல. 

உன்கிட்டயும் தான் பழகவே இல்ல.  

சீக்கிரம் சொல்லனும்டா. இது ஒரு வலியா இருக்குது . 

சரி சரி, வா அவ வந்துட்டு இருக்கா. நாம இடத்தைக் காலி பண்ணுவோம். 

இரு இரு நாம  பக்கத்தில் வேற எங்கேயாவது  நின்னுக்குவோம். அவள்  மாடில

 •  Start 
 •  Prev 
 •  1  2 
 •  Next 
 •  End 

About the Author

Poornima ShenbagaMoorthy

Latest Books published in Chillzee KiMo

 • AndrilAndril
 • I MyselfI Myself
 • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
 • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
 • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
 • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
 • Un nesam en suvasamUn nesam en suvasam
 • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 15 - பூர்ணிமா செண்பகமூர்த்திநன்றி! 2019-06-27 12:38
:thnkx: for the comment friend!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 15 - பூர்ணிமா செண்பகமூர்த்திmadhumathi9 2019-06-23 14:05
:clap: nice epi.rendu perum ore neraththil koduppaargal endru ninaiththen. :Q: adhu kaadhal kadithamthaanaa? waiting to read more. :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 15 - பூர்ணிமா செண்பகமூர்த்திAdharv 2019-06-23 12:33
Rummy sema smart than :D usharru pulla!!enaiko Oru epi la aunty kitta vasama mataporanga 😍😍😍

cool and interesting update ma'am 👏 👏👏 👏 dhinesh eppadiyo koduthutaru how abt ramya :Q: dhinesh ippadi Oru cute flash back vachi iruparunu ninaikala :D ramyakkum appodhil irundhey Oru interest irundhadho :Q: look forward to read the next twist. Thank you and keep rocking!!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 15 - பூர்ணிமா செண்பகமூர்த்திநன்றி! 2019-06-27 12:38
thanks friend!
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top