Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 06 - பிந்து வினோத் - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 06 - பிந்து வினோத்

Roja malare rajakumari

கார் பயணத்தின் போது வெளியே தெரிந்த காட்சிகளை ஆர்வத்துடன் பார்த்தபடி வந்தாள் ரோஹினி. சென்னையின் சாலைகள் அவளுக்கு புதியதாக இருந்தது!!!

அவளின் பக்கத்தில் அமர்ந்திருந்த சாரதா அவளையே ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

அழகான வட்ட முகம்! எடுப்பான நாசி! நேர்த்தியான உதடுகள்!

ரோஹினி... இளவரசி ரோஹினி அழகாகவே இருந்தாள்!

அதிலும் பளிச் பளிச் என மின்னும் அவளின் கண்களை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது.

ஆனால் மேலே இருந்து கீழே அவளை ஒரு பார்வை பார்த்தவர், ஹுஹும்... என தலையை அசைத்துக் கொண்டார்...

ரோஹினி அழகாக இருந்தாலும் அவளின் தற்போதைய ஒப்பனையும், உடையும் அவளுக்கு எந்த விதத்திலும் பொறுந்தவில்லை என்று அவருக்கு தோன்றியது!

டிவியில் அவர் பார்த்திருக்கும் பழைய ‘வசந்த மாளிகை’ திரைப்பட கதாநாயகி வாணிஸ்ரீ ஸ்டைலில் ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய கொண்டை! அதாவது அவருக்கு முந்தைய தலைமுறையின் ஹேர்ஸ்டைல்!!!!

உடையோ சேலை என்றுமில்லாமல் ஹாஃப் சாரி என்றுமில்லாமல் இரண்டிற்கும் இடையே நிற்கும் வித்தியாசமான ஒன்றாக இருந்தது!

சிம்பிளாக சுரிதார் அணிந்து, தலை முடியை கிளிப் செய்து விட்டாலே உலக அழகிகளுக்கு இணையாக ரோஹினி ஜொலிப்பாள் என்று அவருக்கு தோன்றியது!

பின் சீட்டில் இருந்த பெண்கள் இருவரையும் கண்டுக்கொள்ளாமல் ஆபிசில் பாதியில் விட்டு வந்திருந்த வேலையை பற்றி யோசித்தபடி காரை ஒட்டிய அஜய், காரை வீட்டு கேட்டின் முன் நிறுத்தினான்.

காரில் இருந்து முதலில் இறங்கிய சாரதா, ரோஹினிக்காக கார் கதவை நன்றாக திறந்து விட்டார்!

சீட்டில் நகர்ந்து திறந்திருந்த கதவின் பக்கத்தில் வந்த ரோஹினியின் கண்கள் அவர்களின் வீட்டை ஆவலுடன் நோக்கியது.

அதை கவனித்த சாரதாவின் உதட்டில் புன்னகை மலர்ந்தது.

“வாம்மா... சாரி... வாங்கம்மா.. ரோஹினி! இது தான் எங்களுக்கு சொந்தமான சின்ன  மண் குடிசை!” என அவளை வரவேற்றார்.

ஆமாம் குடிசை தான் என சொல்ல போகிறாள் என சாரதா எதிர்பார்க்க, ரோஹினி அவரை ஆச்சர்யப் படுத்தும் விதமாக ஒன்றும் சொல்லாமல் அமைதியாக காரில் இருந்து இறங்கினாள்!

இறங்கியவள் அவர் பக்கத்தில் நிற்காமல், அங்கே வீட்டின் முன் இருந்த தென்னை மரத்தின் பக்கத்தில் சென்று அண்ணாந்துப் பார்த்தாள்...!

“அஜய் சின்ன பையனா இருந்தப்போ அவர் வச்ச மரம் இது! அவனைப் போலவே எவ்வளவு உயரமா வளர்ந்திருக்கு!!! இப்போ எல்லாம் இதுல ஏறி தேங்காய் பறிக்க கூட ஆளு கிடைக்குறது கஷ்டமா இருக்கு! பேசாம வெட்டிட்டு வேற ஏதாவது நட்டு வைக்கலாமான்னு யோசிக்கிறேன்...”

காருக்குள்ளேயே இருந்தப்படி அம்மாவையும் அந்த புதுப் பெண்ணையும் பார்த்த அஜய், அவர்கள் தென்னை மரத்தை விட்டுவிட்டு அவன் பக்கம் பார்க்க போவதில்லை என்பது புரிந்ததால், காரின் ஹார்னை அழுத்தினான்! கூடவே,

“அம்மா, நான் ஆபிஸ் கிளம்புறேன்.. டைம் ஆச்சு...” என்றான்.

சாரதா பதில் சொல்லும் முன்,

“அந்த பெட்டிகளை தூக்கி கொண்டு வைத்து விட்டு கிளம்புங்க” என்றாள் ரோஹினி அமர்த்தலாக.

“ஏய்...”

“அஜய், அஜய்!!! நம்ம வீட்டுக்கு வந்திருக்க விருந்தாளி!!! அமைதியா இரு!!! உனக்கு பெட்டியை தூக்குறது கஷ்டம்னா நான் வேணா...”

“அம்மா!!!!!” கடித்திருந்த பற்களின் இடையே கஷ்டப்பட்டு அழைத்தான் அஜய்!

“சரி, சரி, நீயே எடுத்துட்டு வா...” என்று அவனிடம் சொல்லி விட்டு,

“நீ... நீங்க வாங்கங்க ரோஹினி! “ என ரோஹிணியை வரவேற்றப் படி கதவில் இருந்த பூட்டை திறத்து உள்ளே அவளை அழைத்து சென்றாள் சாரதா.

நேராக அவளுக்காக தயார் செய்திருந்த அறைக்கு தான் அழைத்துச் சென்றாள்.

அவர்களின் பின்னாலே பெட்டிகளுடன் வந்த அஜய், பெட்டிகளை அந்த அறையின் சுவரோரம் வைத்தான்.

“எனக்கான ரூம் எது? பெட்டியை இங்கே வைக்காதே, என் ரூம்ல வைக்கனும்”

“இது தான் ரோஹினிம்மா உனக்காக நான் தயார் செய்து வச்சிருக்க ரூம்...”

“என்னது இதுவா???”

ரோஹினி காட்டிய ரியாக்ஷன் அஜய்க்கு கோபத்தைக் கொடுத்தது.

அந்த வீட்டிலேயே இருக்கும் பெரிய அறை அது!

அதிகம் புழங்காமல் இருந்த அறையில் சாரதா பொருட்களை போட்டு வைத்திருந்தார். இப்போது இந்த சீமாட்டி வருவதற்காக தனி ஆளாக அறையில் இருந்த பொருட்களை அப்புறப்படுத்தி, சுத்தபடுத்தி வைத்தால்... இவளென்ன...!!!???

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 

Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 06 - பிந்து வினோத்saaru 2019-07-16 18:22
All epis jast read pannen
Nicely going ma
Niru ku y poramai
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 06 - பிந்து வினோத்Bindu Vinod 2019-09-10 22:08
Thank you Saaru :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 06 - பிந்து வினோத்madhumathi9 2019-06-23 14:15
:grin: poramai thalai thookka aarambiththu vittathey?nice epi.wwiting to 4ead more. :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 06 - பிந்து வினோத்Bindu Vinod 2019-06-23 22:40
Thank you Madhumathi :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 06 - பிந்து வினோத்Adharv 2019-06-23 12:41
😍😍😍 cute and entertaining epi Bindu ma'am 👏 👏👍 loved the screen play!! Nga to ma and da mannerism transformation :cool: but hero rombha hot aga irukanga pa 😈😈 aunty Oda sweetness la ilavarasi mayangitangalo😜 hope she will soon fit into the atmosphere!!
:eek: unga series la porumaikku edam.irukka ;-) look forward to read next update. Thank you and keeping rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 06 - பிந்து வினோத்Bindu Vinod 2019-06-23 22:40
Thank you Adharv.

Poramai right? porumai pathi enga sonenu yosichu, naane en epi padikura kashtathai koduthuteenga :P :P
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top