தொடர்கதை - சிவகங்காவதி - 19 - ஸ்ரீ
“குறிஞ்சித் திணை – மஞ்ஞைப் பத்து
மயில்கள் வாழும் நாட்டை உடையவன் தலைவன்.தலைவி மயில் போன்றவள்.உள்ளுறை உவமம் நிறைந்த இந்தப் பத்துப் பாடல்களிலும் மயில் பேசப்படுகிறது.
மயில்கள் ஆலக் குடிஞை இரட்டும்
துறுகல் அடுக்கத்ததுவே பணைத் தோள்,
ஆய் தழை நுடங்கும் அல்குல்,
காதலி உறையும் நனி நல் ஊரே -- 291
பொருளீட்டச் செல்லும்போது தலைவன் தன் பாங்கனிடம் சொல்கிறான்.
மயில்கள் ஆடும்.ஆந்தை மயில் ஆட்டத்துக்கு முழவு முழக்குவது போல ஒலி எழுப்பும்.இப்படிப்பட்ட பெரும் பாறைகள் நிறைந்த மலையடுக்கம் தான் என் காதலி வாழும் நல்ல ஊர்.என் காதலி பருத்த தோளினை உடையவள்.தன் அல்குல் மறைய ஆய்ந்தெடுத்த தழைகளாலான ஆடை அணிந்தவள்.”
மறுநாளின் விடியல் பல பல திருப்பங்களோடு ஆரம்பமானது நஸீமிற்கு.ரஹீம் கூறியபடியே அவனைத் தேடி அரசவைக்கு வந்திருந்தான்
“அஸ்லாம் அலேகூம் உசூர்!”
“மலேகூம் அஸ்லாம் ரஹீம்,போன காரியம் என்னவானது?”
“உசூர் தாங்கள் கூறிய இடத்திற்குச் சென்று அவனைப் பற்றி விசாரித்தேன்.அவன் யார் என்னவென யாருக்கும் தெரியவில்லை.அவனாகவே வருவானாம் ஆனால் அவன் மீண்டும் கிளம்பும் நேரத்தில் நிச்சயம் ஏதேனும் சர்ச்சையை கிளப்பிவிட்டுச் சென்றுவிடுவானாம்.
அவனாகவே வந்தால் தான் அவனைப் பற்றி அறிய முடியும் என்கின்றனர்.எனவே வீரர்களை ராஜ்ஜியத்தின் அனைத்து பகுதிகளிலும் நிறுத்தியிருக்கிறேன்.அவனைக் கண்டதும் அவனை தொடர்ந்து சென்று இருப்பிடத்தை கண்டு வரச் சொல்லியிருக்கிறேன் உசூர்.”
“நல்ல காரியம் செய்திருக்கிறாய் ரஹீம் பார்க்கலாம் இந்த முகமுடி அணிந்தவன் யாரென!”
அன்று பின்காலைப் பொழுதில் நஸீமையும் ரஹீமையும் தேடி வீரன் ஓடிவந்தான்.
“உசூர்!!”
“என்னவாயிற்று எதற்காக இத்துனை பதட்டம்?”
“உசூர் அந்த காசிமின் இருப்பிடத்தை கண்டுவிட்டோம்.அதுமட்டுமன்றி..”
“காலம் கடத்தாமல் விடயத்தைக் கூறு?”
“அவன் சாயலில் தங்களைப் போன்றே இருக்கிறான்”
“என்ன உளறுகிறாய்?”
“நான் கூறுவது சத்தியம் உசூர் நான் மட்டுமன்றி அவனைப் பார்த்த வீரர்கள் அனைவருக்குமே இது தோன்றியது.”
“என்ன இது புது குழப்பம்?ரஹீம் நீ சென்று உடனே அவனை இங்கு அழைத்து வா.மற்றவற்றை பின் பேசிக் கொள்ளலாம்.”
“அப்படியே செய்கிறேன் உசூர்”,என்றவன் அந்த வீரனோடு அவ்விடத்திற்கு விரைந்தான்.
நாட்டின் எல்லையிலிருந்து சற்றுத் தொலைவில் தனிமையில் அவனின் இருப்பிடம் இருந்தது.அங்கு சென்ற சிறிது நேரத்தில் அவனை மன்னர் அழைத்ததாகக் கூறி வீரர்கள் சூழ்ந்து நின்று வற்புறுத்த எவ்வித மறுப்புமின்றி முன்னே செல்லுமாறு கைசயைத்து அவர்களைப் பின் தொடர்ந்தான்.
அரசவை முழுவதும் பரபரப்பில் இருக்க நஸீம் தன் இருக்கையில் கம்பீரமாய் அமர்ந்திருந்தான்.அவனைவிட்டு விழி நகர்த்தாதவாறு அழுத்தமான அடிகளை வைத்து உள்ளே நுழைந்தான் காசிம்.
“உன் பெயர் என்ன?”
“காசிம்..”
“எதற்காக உனை இங்கு அழைத்திருக்கிறோம் என்று தெரியுமா?”
“என் சகோதரனைப் பார்ப்பதற்கு இத்தனை வருடத்தில் இப்போது தான் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.அதற்காகவே வந்தேன்.”
“என்ன கூறுகிறாய்??யாரிடம் பேசுகிறோம் என்று தெரிகிறதல்லவா?”
“ஏன் தெரியாமல் என் வாப்பாவின் அன்பு மகனிடம் என் அருமை சகோதரனிடம்.”
“இதற்கு மேல் ஒரு வார்த்தை பேசினாலும் உன் தலை மண்ணில் உருளுவது உறுதி.”
“உண்மை பல நேரங்களில் கசக்கத்தான் செய்யும் நஸீம்.ஆனால் அதற்காக நான் கூறுவதனைத்தும் பொய் என்று ஆகிவிடாது.”
பொறுமையை இழுத்துப் பிடித்தவனாய்,”நீ கூறுவதெல்லாம் உண்மையென்றே வைத்துக் கொள்வோம் இத்துனை நாள் எனைச் சந்திக்க சிறு முயற்சி கூட எடுக்காதது ஏன்?”
“சகோதரனைக் கண்டு ஆரத் தழுவி அன்பு கொட்டும் நிலையில் நானிருந்திருந்தால் எப்போதோ வந்திருப்பேன்.ஆனால் எனக்கு வேண்டியது உன் உயிரும் இந்த அரியணையும் தான்.”
“வார்த்தையை அளந்து பேசவில்லை எனில் உன் உயிர் இப்போதே இந்த உலகை விட்டுபோய்விடும் காசிம்!!!!”
“உயிருக்கு அஞ்சியவன் இப்படி நெஞ்சை நிமிர்த்தி உன் முன் நிற்க மாட்டான் நஸீம்.”
“பாவம் மிகவும் குழப்பிவிட்டேன் என்று தோன்றுகிறது.நானே உனக்கு விரிவாகக்