(Reading time: 9 - 17 minutes)

கூறுகிறேன்.உனக்கு தமையன் நான்.உன்னைவிட இரு வயது பெரியவன்.

உன் எண்ணம் சரிதான்.நான் உன் தந்தையின் முதல் மனைவியின் மகன்

“காசிம்!!!!!இதற்கு மேல் ஒரு வார்த்தை….”

“கோபம்..உண்மையை கேட்டு இத்துனை கோபம் வரக்கூடாது நஸீம்.அப்படியானால் என் கோபத்தை உன்னிடம் காட்டினால் என்ன ஆவாய்?”

“தேவையற்ற பேச்சு வேண்டாம் நீ இப்போது என்ன சொல்ல வருகிறாய்?”

“உன் தந்தை அதாவது நம் தந்தை உன் தாயை திருமணம் செய்து கொள்ளும் முன் ஒரு முறை சுற்றுலா சென்ற இடத்தில் என் தாயை சந்தித்து ஆசை வார்த்தைகள் கூறி காதல் வலை விரித்து அவர்களின் வாழ்வையே நாசமாக்கிவிட்டார்.

தன் ராஜ்ஜியத்திற்கு சென்று தாய் தந்தையிடம் பேசி வந்து அவர்களை அழைத்து செல்வதாய் கூறியிருக்கிறார்.ஆனால் மீண்டும் அவர் வரவேயில்லை.இரு வயது மகனான என்னை அழைத்துக் கொண்டு இங்கு வந்தவருக்கு அப்போது தான் அவருக்கு வேறு திருமணம் முடிந்து நீயும் பிறந்திருக்கும் விடயம் தெரிய வந்தது.

இதற்குமேல் அவர் சென்று உண்மையை கூறினாலும் யாரும் நம்பமாட்டார்கள் என்று எண்ணியவர் இந்த நாட்டிலேயே தன் வாழ்க்கையை வாழ ஆரம்பித்தார்.அப்போது எங்கள் இருவரையும் யார் என்றே தெரியாமல் எங்களுக்கு ஆதரவு அளித்தவர் உங்கள் அரசவையின் மதகுரு அவர்கள்.இப்போது எனக்கிருக்கும் ஒரே சொந்தம்.

நாளடைவில் தாயின் உடல்நிலை கவலைக்கிடமாக என்னைப் பற்றிய உண்மையை மதகுருவிடம் கூறிவிட்டார்.அதை கேட்ட அவருக்கும் அதிர்ச்சியே.

இருந்தும் நாட்டின் நிலை உன் தாதியின் மனம் புண்பட வேண்டாம் என அனைத்தையும் மறைத்து எனை நன்றாகப் பார்த்துக் கொண்டார்.

அப்படி ஒரு நிலையில் நேர்ந்ததுதான் உன் தந்தையின் மரணம்.எதிரிகளின் சூழ்ச்சி ஒருபுறம் எதிர்பாரா நேத்தில் நீ ஆட்சியை கைப்பற்றியது ஒரு புறமென ஏதேதோ நடந்துவிட்டது.

நீ ஆட்சிப் பொறுப்பை ஏற்றாலும் இத்துனை ஆளுமையை உன்னிடம் நிச்சயம் நான் எதிர்பார்த்திருக்கவில்லை.உனை எதிர்த்து எதுவும் செய்ய இயலாத நிலை ஆனால் உன் மீதான கோபம் அதிகரித்துக் கொண்டே இருந்தது அன்றி துளியும் குறையவில்லை.

உன் மீதான விரோதத்தை மதகுரு அறிந்திருந்தாலும் எப்போதும் உனை விட்டுக் கொடுத்து பேசியதில்லை.அதற்காகவே எனை ராஜ்ஜியத்தை விட்டு தள்ளியே வைத்திருந்தார்.

அவரே அறியாத சில நேரங்களில் தான் நகர்புறத்திற்கு நான் வருவேன்.அப்படி வரும் நேரங்களில் உனைப் பற்றிய விவங்களை முடிந்த வரையில் சேகரிப்பேன்.அப்படிதான் உன் எதிரிகளைப் பற்றியும் தெரிந்து கொண்டு ஒருவர் பெயரில் மற்றவருக்கு ஓலை அனுப்பி உனக்கெதிராக திசை திருப்ப முயன்றேன் அதுவும் பலனற்று போனது.

அப்போது யாருமே எதிர்பாராமல் நடந்ததுதான் உன் நிக்காஹ்.அதுவரை உன் மீதிருந்த அக்கறை மதகுரு அவர்களுக்கு குறைந்தது.அதுவும் அவளுக்காக அத்துனை பேர் முன்னிலையில் அவரை அவமதித்ததை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அந்த நேரத்தில் தான் உனை கொல்லுவதற்கான திட்டத்தை வகுத்தேன்.நீ பேரரசரை சந்திக்கச் சென்ற நேரத்தில் அவளுக்கு செய்தி அனுப்பினேன்.முதலில் அவள் கதை முடித்து அதன் பின் உனக்கான அழிவை தர வேண்டும் என்று எண்ணியிருந்தேன்.அனைத்தும் பாழாகிவிட்டது.”

அனைத்தையும் கேட்டு முடித்த நஸீம் ஆழ் மூச்செடுத்து பேச ஆரம்பித்தான்.

உன்புறம் நியாயம் இருக்கலாம் ஆனால் நீ கையாண்ட முறை தவறு.இப்போது இத்துனை பேசும் நீ இதை ஏன் முன்னரே வந்து கூறவில்லை?”

ஹா ஹா ஹா..நான் ஒன்றும் குழந்தையில்லை நஸீம்.இப்போது நான் பேசும் அனைத்தையும் நீ கேட்பதற்கு இருக்கும் ஒரு காரணம் நம் உருவ ஒற்றுமைதான்.அதையும் உன் வீரர்கள் அனைவரும் கண்டு கொண்டதுதான். இதையே நான் பத்து வருடங்களுக்கு முன் தனிப்பட்ட முறையில் வந்து கூறியிருந்தால் நீ ஏற்றிருப்பாயா நிச்சயம் அப்போதே என்னை எதாவது செய்திருப்பாய்.”

வாழ்வில் உனக்கேற்பட்ட துன்பங்கள் உனை யாரையும் நம்பவிடாமல் தடுக்கிறது காசிம்.அவரவர் குணநலன் வேறு.என் தந்தையைப் போன்று நான் இல்லை.என்னைப் போன்று நீயில்லை.அதைப் புரிந்து கொள்.சில விடயங்களை காரணமின்றி நம்பியே ஆக வேண்டும்.”

நீயிருக்கும் இடத்தில் இருந்து என்ன வேண்டுமானாலும் பேசலாம் நஸீம்.ஆனால் வாழ்வின் அனைத்தையும் இழந்த ஒருவன் வாழ்வையே தொலைத்த ஒருவனால் எதையும் அத்துனை சாதாரணமாய் ஏற்றிருக்க முடியாது.தனிமை அதன் கொடுமை என்னவென்று உனக்குத் தெரியுமா?

தாய் தந்தை நண்பர்கள் என ஏதுமின்றி வாழும் வாழ்க்கை நரகம்.அந்த வேதனையும் வலியும் உனக்கு ஒருகாலும் புரியப் போவதில்லை.இப்போது நான் இங்கு வந்ததும் உன் போதனைகளைக் கேட்பதற்காக அல்ல என் பிறவி பகையை தீர்ப்பதற்காக..”,என்றவன் தன்னிடம் மறைத்து வைத்திருந்த சிறு கத்தியை எடுத்துக் கொண்டு அவனருகில் ஓட நஸீம் சுதாரிப்பதற்குள் அது அவனின் கையை பதம் பார்த்திருந்தது.

வீரர்கள் அதற்குள் காசிமை சுற்றி வளைத்திருந்தனர்.இவனை சிறையில் அடையுங்கள் இரு திங்கள் கழிந்து பார்த்துக் கொள்வோம் என்று கூறி அனுப்பிவிட்டு அவன் வெளியே வர

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.