Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 15 - ஆதி [பிந்து வினோத்] - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 15 - ஆதி [பிந்து வினோத்]

Vaanum mannum katti kondathe

தூக்கம் is the secret of success!!! என்னுடைய புதுமொழி தான் பிரென்ட்ஸ் :-)

கடந்த சில மாதங்களாக என் எபிசொட் எழுதும் போது கொட்டாவிஸ் விட்டு விட்டு எழுதுவேன்! வேறென்ன அன்-டைம்ல, பாதி தூக்கத்துல எழுதும் எஃபக்ட் தான்!

Past few months ஆகவே வேலை கொஞ்சம் அதிகம்! அதனால maximum 5 மணி நேர தூக்கம் தான்! இன்னைக்கு நல்லா ஒரு லாங் தூக்கம் போட்டுட்டு எழுந்தப்புறம் எல்லாமே புதுசா freshஆ தெரியுது!!!! மத்த நாள் நான் டென்ஷன் ஆகுற விஷயங்கள் கூட இன்னைக்கு ஈசியா எடுத்துக்குறதா இருக்கு.

சோ, யாராவது கடுப்ஸ்ல இருக்கீங்க இல்ல என்னடா வாழ்க்கை இதுன்னு அலுப்புல இருக்கீங்கன்னா, ஒரு லாங் தூக்கம் ட்ரை செய்து பாருங்க!!!! அனுபவம் பேசுகிறது :-)

சினேகா, நான்.. ஒரு விஷயம் சொல்லனும்...”

ஆகாஷின் பேச்சில் புதிதாக வந்திருந்த தடுமாற்றம் சினேகாவிற்கு ஆச்சர்யமாக இருந்தது.

இந்த கம்பெனியில் முதல் நாள் அவனை சந்தித்தது முதல் அவள் பார்த்தே இராத தடுமாற்றம்.

அப்படி என்ன சொல்ல போகிறான்????

அவளினுள் எதிர்பார்ப்பு ஊற்றெடுத்தது...

“சொல்லுங்க ஆகாஷ்... சார்....”

“சினேகா என்னைப் பத்தி உனக்குத் தெரியும்... தெரியும்ன்னு நினைக்கிறேன்...”

“உங்களை பத்தி தெரியாம என்ன ஆகாஷ் சார்... சொல்லுங்க...”

“சினேகா.... நான்...”

அந்த நேரத்தில் படிகளில் இறங்கி வந்த இரண்டு பேர் அவர்களின் அருகே வரவும் ஆகாஷ் சொல்ல வந்ததை சொல்லாமல் பாதியில் நிறுத்தினான்.

வந்தவர்கள் தங்களை கடந்து செல்வதற்காக ஒதுங்கி நின்றாள் சினேகா.

ஆகாஷின் மனம் வேகமாக சிந்தித்தது...

காதலை சொல்வது என்பது வாழ்க்கையில் மிக பெரிய விஷயம்... அதுவும் மனதை கவர்ந்தவள் அந்த காதலை ஏற்றுக் கொண்டால் அது வாழ்க்கையில் மிக மிக சந்தோஷமான தருணங்களில் ஒன்று...

அதை இங்கே இப்படி படிகளில் அதுவும் அந்நியர்கள் வந்து போகும் நேரத்திலா சொல்வது...????

“ஏதோ சொல்ல வந்தீங்க ஆகாஷ் சார்... சொல்லுங்க????”

யோசனையில் இருந்து வெளியே வந்து சினேகாவை பார்த்தான் ஆகாஷ்...

அவளின் கண்களில் எதிர்பார்ப்பு மின்னிக் கொண்டிருந்தது...

அப்போதும் யாரோ இருவர் அவர்களை தாண்டி சென்றனர்...

சட்டென முடிவெடுத்த ஆகாஷ்,

“அவசரமா கிளம்பிட்டு இருந்தீயே... இட்ஸ் ஓகே சினேகா அப்புறமா பேசலாம்...” என்றான்.

சினேகாவின் முகத்தில் கேள்வி வந்துப் போனது!  ஆனாலும்,

“சரி ஆகாஷ் சார்... பை...” என்று சொல்லி விட்டு படிகளில் ஏறி சென்றாள்...

அவளின் பின்னேயே சென்ற மனதை அடக்கி படிகளில் இறங்கி நடந்தான் ஆகாஷ்...!

தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாண் என்ன முழம் என்ன? என்று ஒரு பழமொழி சொல்வார்கள்....!

ஆகாஷின் தற்போதைய நிலைமையும் கிட்டத்தட்ட அப்படி தான் இருந்தது...

அவன் அதை யோசித்து, இடம் – பொருள் பற்றி எல்லாம் நினைக்காமல், ஒருவேளை அவனின் காதலை சினேகாவிடம் அப்போதே சொல்லி இருந்தால் எத்தனையோ குழப்பங்கள் இல்லாமல் போயிருந்திருக்கும்!!!

ஆனால் எதிர்காலத்தில் நடக்க போவதை அவன் அப்போது அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பதால் எங்கே, எப்படி ரொமான்டிக்காக அவளிடம் தன் காதலை சொல்வது என்று திட்டமிட்டபடி நடந்தான்.

காஷ், நீ இரண்டு மூணு நாள் லீவ் போடனும்... கடைக்கு வரணும்...” மகனுக்கு உணவு பரிமாறியப் படி ஷாப்பிங் பற்றிய பேச்சை ஆரபித்தாள் சுபாஷினி.

“என்னம்மா ஷாப்பிங்குக்கு நான் எதுக்கு??”

“இது கல்யாண ஷாப்பிங்ப்பா. அக்ஷ்ராக்கு சாரீ செலக்ட் செய்யனும்! தாலி வாங்கனும்... உனக்கும் பட்டு வேஷ்டி சட்டை எடுக்கனும்...”

சுபாகினி அடுக்கிக் கொண்டே செல்ல, ஆகாஷிற்கு உடனே என்ன பதில் சொல்வது என்று புரியவில்லை!!! சின்ன இடைவெளி கொடுத்து,

“ஒரு பெரிய ப்ராஜக்ட் பத்தி யோசிச்சுட்டு இருக்கேன்ம்மா... எனக்கு ஒரு டூ வீக்ஸ் டைம் கொடுங்க... அதுக்கு அப்புறம் நாம பொறுமையா உட்கார்ந்து பேசி ப்ளான் செய்யலாம்....” என்றான்.

“சரிப்பா...! நான் ஈவன்ட் பிளானர்ஸ் கிட்ட பேசி கல்யாண மண்டபம் பார்க்க சொல்லிட்டேன்... மூணு மண்டபம் ஷார்ட் லிஸ்ட் செஞ்சு கொடுத்திருக்கேன்... எந்த மண்டபம் புக் செய்தாங்கன்னு அவங்க சொன்ன உடனே சொல்றேன்.. நீ அதுக்குள்ளே வேலையை முடிக்க பாரு...”

“சரிம்மா...”

சாப்பிட்டு முடித்து விட்டு எப்போதும் போல அம்மா அப்பாவிடம் அன்று நடந்த விஷயங்கள் பற்றி பேசி அரட்டை அடிக்காமல், இருட்டாக இருந்த வானத்தை பார்த்த படி தனிமையில் அமர்ந்திருந்தான் ஆகாஷ்.

அவனுக்கு அந்த தனிமை தேவையும் பட்டது!!!

ஒரு சில மாதங்களுக்கு முன் வரை தெளிந்த நீரோடையாக இருந்த அவனின் வாழ்க்கை எப்படி மாறிப் போய் விட்டது!!!!

திடிரென அவனின் தோளில் ஒரு கை விழுந்தது!

பிரகாஷ் மகனின் அருகே அமர்ந்தார்.

  •  Start 
  •  Prev 
  •  1  2 
  •  Next 
  •  End 

Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 15 - ஆதி [பிந்து வினோத்]AdharvJo 2019-07-05 21:40
Ouch facepalm ninga engalukku tip soluradhukku badhila Akash ku solli irukalam.ji :yes: so sad of him ninga avarukku ethira seyal paduvinganu theriyamal.over dreams Pa 😍😍 dad and son on par 😍 aunty ku ivaroda vishyam therindhal Ena panuvangala :o waiting to see what happens next. What happen to Rambo :Q:
Thank you for this cute epi Bindu ma'am 👏👏👏
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 15 - ஆதி [பிந்து வினோத்]Bindu Vinod 2019-07-05 21:48
Thanks Adharv :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 15 - ஆதி [பிந்து வினோத்]madhumathi9 2019-07-05 13:05
:clap: nice epi. :Q: call panniyathu yaaraaga irukkum :thnkx: 4 this epi. (y) waiting to read more.kathai interesting aaga poguthu. :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 15 - ஆதி [பிந்து வினோத்]Bindu Vinod 2019-07-05 21:48
Thanks Madhumathi :-)
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top