Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo

Chillzee KiMo Tamil - English Novel ContestChillzee KiMo Only Books

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 07 - பிரேமா சுப்பையா - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 07 - பிரேமா சுப்பையா

Ethir ethire neeyum naanum

தற்கு மேல் எதையும் யோசிக்கவில்லை அவள், 

"ஹர்ஷ், சீக்கிரம் வா..... வந்து ஹெல்ப் பண்ணு" என்று கத்தியபடி வேறு யாரையேனும் உதவிக்கு அழைக்க இயலுமா என்று பார்வையை சுழல விட ...வெறிச்சோடிய சாலை மட்டுமே புலப்பட்டது அவள் கண்களுக்கு ...அருகே அவ்வளவாய் வீடுகளும் தென்படவில்லை ...!!

இதற்குள் ஹர்ஷினியும் காருடன்  அவளை நெருங்கியிருக்க ... "உயிர் இருக்கு ஹர்ஷ் ...தூக்கு" என்று பொன்னி அவளை துரிதப்படுத்த,  

"பொன்ஸ் ... சொன்னா கேளு ...தேவையில்லாத ரிஸ்க் ...வா போயிடலாம்" என்று சொன்ன ஹர்ஷினியின் கன்னத்தில் ஓங்கி அடித்தவள் ... "தூக்கு டி கொன்னுடுவேன்" என்று பொன்னி ஆக்ரோஷமாய் சொல்ல ...அதிர்ந்து போனாள் ஹர்ஷினி!

"டோன்ட் வரி,  யு வில் பி ஆல் ரைட்" என்றவள் அவன்  தோளை பிடிக்க ...ஹர்ஷினி அவன் கால்களை . பிடித்து பின் சீட்டில் படுக்க வைக்க ..."ஹர்ஷ் நீ டிரைவ் பண்ணு ...சீக்கிரம்.. பக்கத்துல இருக்க ஹாஸ்பிடல் போ ...குயிக்” என்றவள் அவன் அருகிலேயே அமர்ந்து கொண்டாள்..!!

ஏனோ ...அவனுக்கு தைரியம் சொல்லவேண்டும் போல் தோன்றியது அவளுக்கு ... "உங்களுக்கு ஒன்னும் ஆகாது ..கவலை படாதீங்க... சக்தி கண்டிப்பா உங்களை காப்பாத்துவான்"  என்றவள் அவசரமாய் அவன் உடைகளை ஆராய்ந்தாள்.

அலைபேசி ...கார்டு ...போன் நம்பர் ....ஏதேனும் கிடைக்குமா தகவல் தெரிவிக்க, என்று

ஆராய்ந்தவளின் கைகளுக்கு அவன் கழுத்தில் போடப்பட்டிருந்த வெள்ளி சங்கிலி மட்டுமே தென்பட்டது ...காரில் இருந்த வெளிச்சத்தில் மின்னின அந்த எழுத்துக்கள்  "பா ....லா...."

ஒரு நொடி ...ஒரே ஒரு நொடி ....லேசாய் முகம் சுளித்தாள் பொன்னி!

ஆயினும் ...உதடுகள் தானாய் வெளிப்படுத்தின "பாலா ...பாலா ...கண்டிப்பா பிழைச்சிடுவீங்க ... நம்பிக்கையை விட்டுடாதீங்க"  அவளின் வார்த்தைகள் அவன் செவிகளில் வீழ்ந்தனவா ...?  அவள்

அறியாள்...! 

ஆனால் அந்த நேரத்திலும் அவளின் முக சுணக்கம் அவன் மனதில் கல்வெட்டாய் பதிந்ததோ ..?!

காரை எரிச்சலோடு தான் ஓட்டினாள் ஹர்ஷினி ... "தனது கார் இருக்கை எல்லாம் இரத்த கறை” என்று சலித்தது அவள் மனம்.அவரவர் கவலை அவரவர்க்கு ...

"சீக்கிரம் போடி என்று பொன்னி, ஹர்ஷினியை விரட்ட ... கண்ணாடியில் முறைத்தபடி வேகமாய் அருகே இருந்த மருத்துவமனையில் வண்டியை நிறுத்த ... விரசாய் இறங்கிய பொன்னி ...மருத்துவமனை ஊழியர்களின் துணையோடு ... பாலாவை MICU வில் சேர்த்த பிறகு தான் நிதானமானாள்..

உள்ளே அந்த பாலாவிற்கு அவசர  சிகிச்சை தொடங்கப்பட்டது.

"பொன்னி ...சீக்கிரம் கிளம்பு ...நாம இந்த இடத்தை விட்டு உடனே கிளம்பிடலாம்" என்று ஹர்ஷினி பொன்னியின் காதில் கிசு கிசுக்க ... பொன்னி அவளை முறைத்தாள்..!

"ஹே அதான் ...அந்த ஆளை அட்மிட் பண்ணியாச்சு இல்ல ?.... என்கொயரி அது இதுன்னு தேவையில்லாத தலைவலி ....சொன்னா கேளு வா” என்று ஹர்ஷினி இழுக்க ...பொன்னி அசையாது நின்றாள் .. எதிரே அமைதியின் ரூபமாய் காட்சியளித்தார் அந்த சக்தி விநாயகர் .... அவளின் கண்கள் சக்தியின் கண்களை கூர்மையாய் நோக்கியது ... அது ஏதோ சொல்ல துடிப்பது போல் உணர்ந்தாள் பொன்னி ... தன்னையும் அறியாமல் மனது அவரிடம் முறையிட்டது.

"சக்தி ...ப்ளீஸ் ...அவரை காப்பாத்தி கொடுத்திடு... என் முகம் இன்னும் கூட துடிக்கிது ...அவரோட அந்த தொடுகை  ....என்னை ஏதோ செய்யுது சக்தி ...... காப்பாத்தி கொடுத்திடு சக்தி ...என் மனசு நடுங்குது ...சக்தி ...என்னமோ போல இருக்கு ...என்னன்னு சொல்ல தெரியல ....பட படன்னு இருக்கு ...ரொம்ப பதட்டப்படுது சக்தி என் மனசு ... உன் மேல பாரத்தை போடுறேன் சக்தி ...அந்த உயிரை காப்பாத்திடு ....ப்ளீஸ்" என்று அந்த சக்தி விநாயகரை உற்று நோக்கியபடி மனதில் அவரோடு உரையாடிக்கொண்டிருக்க

அரை மணிநேரம் கடந்து விட்டது . அதற்குள் ஒரு  மருத்துவர் அவர்கள் அருகே வந்து விசாரணையை தொடங்கினார்.

முதலில் நடந்ததை சொல்லிக்கொண்டே வந்த பொன்னி ... திடீரென்று "யாருன்னு பார்த்தா இவ அண்ணன் சார் ... " என்று சொல்ல .... பேயறைந்தார் போல் பார்த்தாள் ஹர்ஷினி ...

“என்னது?  என் அண்ணனா..!!!" என்று மனம் அலறினாலும் ...வாய் திறந்து மறுக்க முடியவில்லை அவளால் ... அருகே போலீஸ் அதிகாரி  வந்து கொண்டிருந்தார்!

அதற்குள் ஒரு செவிலி  வந்து ... "ஓ நெகடிவ் பிளட் வேணும் ...கொஞ்சம் அரேஞ் பண்ண முடியுமா பாருங்க ...நாங்களும் ப்ளட் பேங்க் ல  கேட்டிருக்கோம்" என்று சொல்லிவிட்டு செல்ல ..

"சிஸ்டர் ...இவளோடது ஓ நெகடிவ் தான்" என்று சொல்லி கூட முடிக்கவில்லை பொன்னி ... ஹர்ஷினியை தர தர வென்று இழுத்து கொண்டு சென்றாள் அந்த செவிலி.

 

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 

About the Author

Prama Subbiah

Like Prama Subbiah's stories? Now you can read Prama Subbiah's full novels at Chillzee KiMo. No wait time, No ads, No restrictions!!!

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 07 - பிரேமா சுப்பையாAdharvJo 2019-07-05 21:51
Interesting update ma'am 👏 👏 hero varumbodhey blood shedding :eek: and pazhi vangum.padalam Vera facepalm harshini and ponny Oda combo very funny :D enama pulguranga renduperum 😁😁idhunala ethenum sikal.agumo?? Bala kaga ponns varuvangala?? Waiting to see what happens next. Thank you!!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 07 - பிரேமா சுப்பையாmadhumathi9 2019-07-05 20:39
:Q: enna kaaranam pazhivaanga ?maybe ponsoda veettaar paarththa maappillaiyo? Eagarly waiting to read more. :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 07 - பிரேமா சுப்பையாSahithyaraj 2019-07-05 18:55
Yaarai ethukku yaar pazhi vanga pora?
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top