Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 17 - RR [பிந்து வினோத்] - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 17 - RR [பிந்து வினோத்]

குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா 💘!

Pottu vaitha oru vatta nila

ஹாய் ஃபிரென்ட்ஸ்,

இந்த வீக் எங்க வீட்டு ஸ்பெஷல் ‘டபுள் கா மீட்டா’. நம்ம பக்கத்து ஊரு ஆந்திரா ஸ்பெஷல் ஸ்வீட் இது. இனிப்பு பிரியர்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய ஒரு ஐட்டம் :-)

எனக்கு ரொம்ப பிடிச்ச ஒரு ஸ்வீட்டும் கூட! நான் மட்டும் சாப்பிட மனசு வரலை! அதான் இந்தாங்க உங்க ஷேர்! என்ஜாய் :-)

Pottu vaitha oru vatta nila

★★★★★★★★★★★

னோஜின் பார்வை மஞ்சுவினுள் ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தியது என்னவோ உண்மை! ஆனால் அவன் சொன்ன கனவாவது ஒன்றாவது!

அவளின் யோசனை எல்லாம் வேறு எங்கோ இருந்தது...

பொதுவாக, எப்போதும் தன்னை நேர்த்தியாக ப்ரெசென்ட் செய்வது மஞ்சுவிற்கு பிடித்த ஒன்று! அவளை சரியாக தலை வாராமலோ, உடை உடுத்தாமலோ பார்ப்பது மிக மிக அரிது!

அப்படிப்பட்ட சூப்பர் 'ப்ரேசன்ட்டர்' ஆன அவள், மனோஜ் இருப்பது தெரியாமல் சாரீயை சரியாக கட்டாமல் வந்து விட்டோமே என்று கவலை பட்டுக் கொண்டிருந்தாள்!

(அவள் கவலை அவளுக்கு!!!).

மனோஜோ முற்றிலும் வேறு மாதிரியான மனநிலையில் இருந்தான்!!!

‘வீடு – வேலை’ என கடிகாரம் போல சரியாக சுற்றிக் கொண்டிருந்தவனை, ஒரே புன்னகையில் சலனப் படுத்தியவள் மஞ்சு மட்டுமே!

அதன் பின் அவன் எதிர்பார்த்ததை விட சீக்கிரமே கல்யாணம் நடந்தது ஜாக்பாட் என்றாலும் அவன் ஆசைப்பட்டது போல மஞ்சுவுடன் தேனிலவு செல்லவோ தனிமையில் நேரம் செலவிடவோ முடியவில்லை...

அந்த கவலையை குறைக்க ஸ்பெஷல் டபுள் ஜாக்பாட் போன்ற வாய்ப்பு அன்று அவனை தானாக தேடி வந்திருந்தது...!

அவனின் கேள்விக்கு மஞ்சு பதில் சொல்லாததைக் கண்டுக்கொள்ளாமல் அவளை கண்களால் அள்ளி பருகினான்!

சரியாக அந்த நேரம் ஈரமான அவளின் கூந்தலில் இருந்து நெற்றியில் ஒரு துளி தண்ணீர் விழவும் அவனின் காதல் ஹார்மோன்கள் எக்ஸ்ட்ரா எனர்ஜியுடன் துள்ளிக் குதித்தது!

அவளின் பக்கத்தில் சென்றவன், நெற்றியில் இருந்த அந்த நீர்த்துளியை விரல்களால் சுண்டி விட்டான்...

“ட்ரீம் கம் ட்ரூ போலருக்கு மஞ்சு... “

அவன் மீண்டும் தன் கனவை பற்றி பேசவும்,

“கனவில எது எப்படி இருந்தாலும், கட்டாயம் நான் சாரீயை இப்படி கேவலமா சுத்திட்டு இருந்திருக்க மாட்டேன்...” என தன் மன ஓட்டத்தை அவளை அறியாமலே மறைமுகமாக வெளிப்படுத்தினாள் மஞ்சு...

ஓரடி பின்னே வைத்து அவளை மேலிருந்து கீழே ஆராய்வது போல பார்த்தான் மனோஜ்... அவனின் பார்வையின் காரணமாக அவளின் முகத்தில் தோன்றிய வெட்கத்தையும் ரசித்தப்படியே பார்த்தான்...!

உண்மையில் அவள் ஒன்றும் ‘ஓவர்’ கவர்ச்சிகரமான போஸ் எல்லாம் கொடுத்துக் கொண்டிருக்கவில்லை...

சேலை முனையை எப்போதும் போல பின் செய்துக் செருகாமல், சுற்றி, கிட்டத்தட்ட பெங்காலி பாணியில் எதிர் பக்கமாக விட்டிருந்தாள்...!

“ஹேய் இதுக்கு என்ன குறைச்சல்? இந்த ஸ்டைலும் நல்லா தான் இருக்கு... சூப்பர் க்யூட்டா இருக்க...” என்று எக்ஸ்ட்ரா ஐஸ் வைத்தபடி மீண்டும் அவளின் பக்கத்தில் வந்தான் மனோஜ்...

“அந்த ஒரு சேஃப்டி பின் இல்லாம இருக்கிறது எனக்கு வசதி தானே... ஒரு வேலை மிச்சம்....”

“ப்ச்... போங்க...” என்று சினுங்கியவளுக்கு, அவனின் கண்ணில் மின்னிய காதல் + ஆசை புரியாமல் இல்லை!

அவளுக்குமே அவனின் அருகாமை தேவைப் பட தான் செய்தது...!

ஆனாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் இருக்க செய்யும் முயற்சியாக,,

“செந்தில் வரலையா??? ஆபிஸ் போகலையா நீங்க???” என்றுக் கேள்விகளை கேட்டாள்...

“ நான் வரலைன்னு அவன் கிட்ட சொல்லிட்டேன்...”

“ஏன்??? உங்க டீம் உங்களுக்காக வெயிட் செய்வாங்களே!!!”

“நான் என்ன செய்ய??? எல்லாத்துக்கும் நீ தான் காரணம்...!!!! சின்சியரா ஆபீஸ் கிளம்பிட்டு இருந்தவன் கிட்ட கூக்க போறேன் அது இதுன்னு என்ன எல்லாமோ சொல்லி மனசைக் குழப்பி விட்டுட்ட... உன்னை விட்டுட்டு ஆபீஸ் போக மனசே வரலைடா.... அம்மா வேற நான் கிளம்பும் போது கோவிலுக்கு கிளம்பிட்டு இருந்தாங்களா... நீ தனியா இருப்பேன்னு தெரியும்...”

“ஓ... அத்தை வீட்டில இல்லையா???”

“ஹுஹும்... கோவிலுக்கு கிளம்பிட்டாங்க...”

தன்னிடம் ஒன்றும் சொல்லவே இல்லையே என்று மஞ்சு தனக்குள் யோசிக்கும் போதே, மனோஜ் அவளை இறுக அணைத்துக் கொண்டான்...

“அன்னைக்கு ஈ.சி.ஆர்ல உன் கிட்ட சொன்னேனே ஞாபகம் இருக்கா...” என கனவுலகில் மிதந்த படி பேசியவனின் உதடுகளும், கரங்களும் அன்று கனவில் நடக்காமல் நின்றுப் போன அவனின் ஆசைகளை நிறைவேற்றும் முயற்சியில் இறங்கி இருந்தன... அவனின் காதல் கலந்த மெல்லிய தீண்டல்கள் அவளின் உணர்வுகளை வீணையாக மீட்ட, தன் மாமியார் பற்றிய கேள்விகளை மறந்து கணவனின் காதலில் தன்னை மறந்தாள் மஞ்சு...

நிமிடங்கள் மெல்லக் கரைய, இருவரும் மெல்ல, மெல்ல தங்கள் இனிய காதல் உலகில் இருந்து வெளி வந்து சுய உணர்வுக்கு திரும்பினார்கள்...

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 

Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 17 - RR [பிந்து வினோத்]ரவை.. 2019-07-08 22:02
பிந்து! உண்மையை சொல்லிடறேன், ரெகுலரா எந்த சீரியல் கதையையும் படிக்கிறதில்லே, ஞாபகசக்தி ரொம்பக் குறைவு!
என்னமோ தோன்றியது, இதை படித்தேன், எல்லா வாசகர்களும் சொல்றாமாதிரி, you are a super writer! கண்ணிலே காட்சி தெரியுது! காதிலே டயலாக் ஒலிக்குது! முடிவிலே சஸ்பென்ஸ் ருசிக்குது! வாழ்த்துக்கள்! ஆமாம், 24/7 ஓயவில்லாம உழைக்கிறீங்களே, take care!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 17 - RR [பிந்து வினோத்]Bindu Vinod 2019-07-11 17:26
Thank you Ravai ji :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 17 - RR [பிந்து வினோத்]madhumathi9 2019-07-08 19:58
:clap: nice epi. (y) eagarly waiting to read more. :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 17 - RR [பிந்து வினோத்]Bindu Vinod 2019-07-11 17:26
Thank you Madhumathi :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 17 - RR [பிந்து வினோத்]Srivi 2019-07-08 19:58
Super cute episode..
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 17 - RR [பிந்து வினோத்]Bindu Vinod 2019-07-11 17:25
Thank you Srivi :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 17 - RR [பிந்து வினோத்]Adharv 2019-07-08 16:44
Cute update ma'am 👏 👏 rendu.peroda povs are valid and adhai peridhu paduthamal povadhu :cool: ...ini Ena agaumnu parka waiting!! Thank you!!

Sweet share panuren tempt panuringa 😒😒
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 17 - RR [பிந்து வினோத்]Bindu Vinod 2019-07-11 17:25
Thank you Adharv :-)
Reply | Reply with quote | Quote
+1 # storydevibharathi 2019-07-08 16:24
really i like ur stories bindu madam. waiting for every week ur lovely eisides
Reply | Reply with quote | Quote
+1 # RE: storydevibharathi 2019-07-08 16:30
]really i like ur stories bindu madam. waiting for every week week ur lovely episodes
Reply | Reply with quote | Quote
# RE: storyBindu Vinod 2019-07-11 17:25
Thank you Devi Bharathi :-)
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top