Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - ராணி... மகாராணி... - 11 - ராசு - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - ராணி... மகாராணி... - 11 - ராசு

queen

ன் அறையில் வந்து கண்ணீருடன் நின்ற ஜானகியைக் கண்ட உடன் மகாராணிக்கு சற்று அதிர்ச்சிதான்.

அவர் அழற அளவுக்கு என்ன நடந்திருக்கும்?

"அத்தை. என்னாச்சு? ஏன் பதட்டமா இருக்கீங்க?"

கவலையுடன் கேட்டாள்.

"உமாவுக்கு திடீர்னு பனிக்குடம் உடைஞ்சுடுச்சு. அவளுக்கு கொடுத்த கெடுவுக்கு நாள் இன்னும் இருக்கும்போது இது எப்படி நடந்துச்சுன்னு தெரியலை. வீட்டில் ஆம்பளைங்க யாரும் இல்லை. சேகர் மட்டும்தான் இருக்கான். அவனுக்கும் ஒழுங்கா  வண்டியை ஓட்டத் தெரியாது."

"போன் பண்ணிச் சொன்னீங்களா அத்தை?"

"சொன்னாச்சும்மா. அவங்க கல்யாண கூப்பாட்டிற்காகப் போயிருக்கிறார்கள்."

அவளுக்கும் புரிந்தது.

காலையிலேயே மற்ற இரண்டு அத்தைகளும், மாமாக்களும் கிளம்பியிருந்தனர்.

அவளுக்குப் பிரச்சினையின் தீவிரம் புரிந்தது.

வீட்டிலேயே கார் இருந்தது. பத்திரிக்கை கொடுக்க வண்டியில்தான் மற்றவர்கள் சென்றிருந்தனர்.

"அத்தை. வாங்க. அண்ணியை நாமே ஹாஸ்பிட்டலுக்கு அழைத்துச் செல்லலாம்."

அவர் அவளை கேள்வியாக நோக்க எதற்கும் இடம் கொடாமல் அவள் உடனே செயல்பட ஆரம்பித்தாள்.

உமாவின் அறைக்குச் சென்ற போது அவள் வலியில் துடித்துக் கொண்டிருந்தாள். அருகே பாட்டி உமையாள் கவலையுடன் அமர்ந்திருந்தார்.

நிலாவை ஐஸ்வர்யா வசம் ஒப்படைத்துவிட்டு பாட்டியிடம் சொல்லிக் கொண்டு உமாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆயத்தமானாள்.

உமாவை நடக்க வைப்பதற்கு ஜானகி யோசித்தார்.

அவளுக்கு உடனே பளிச்சென்று அந்த எண்ணம் உதித்தது. தாத்தா ராஜா அண்ணாமலைக்கு நடக்க முடியாமல் போன பிறகு அவர் உபயோகத்திற்கு என்று சக்கர நாற்காலி ஒன்றை ராஜன் பாபு வாங்கியிருந்தான்.

ஓடிச் சென்று அதை தள்ளிக் கொண்டு வந்தாள் மகாராணி.

அதைக் கண்ட உடன் ஜானகியின் முகம் ஒளிர்ந்தது.

அவளது எண்ணம் புரிந்தாற்போல் உமாவின் ஒருபக்கம் அவர் பிடித்துக் கொள்ள மறுபுறம் அவள் கைத்தாங்கலாக உமாவை அணைத்துக் கொண்டு இருவருமாக அவளை சக்கர நாற்காலியில் அமர வைத்தனர்.

மகாராணி விரைவாக  செயல்பட்டாள்.

சக்கர நாற்காலியைத் தள்ளிக் கொண்டு வெளியில் வந்தவள் அதற்குள் ஐஸ்வர்யா எடுத்துக் கொண்டு  வந்திருந்த கார் சாவியை வாங்கி கதவைத் திறந்தாள். பின் ஜானகியும், அவளுமாக சேர்ந்து உமாவை  காரின் பின்பக்கம் அமர வைத்தாள்.

"அத்தை. நீங்க பின்னாடி ஏறி அண்ணியை உங்க மடியில் வைத்துக்குங்க. ஐஸ்வர்யா நீ சேகரை கூப்பிடு."

அவர்கள் அவள் சொன்ன மாதிரியே செய்தார்கள். சந்திரசேகர் ஓடிவந்தான்.

"சேகர். நீ முன்னாடி ஏறு. அப்படியே ஹாஸ்பிட்டலுக்குப் போன் பண்ணிப் பேசு. வீட்டில் உள்ளவங்களுக்கும் நாம் ஹாஸ்பிட்டலுக்குக் கிளம்பிவிட்டோம்னு சொல்லு. அவங்க அங்கேயே வந்துடுவாங்க."

காரை ஓட்டிக் கொண்டே அவள் இத்தனையையும் அவனிடம் சொன்னாள்.

அவனும் அவள் சொன்ன மாதிரியே செய்தான். மருத்துவமனைக்கு அவன் போன் செய்த போது ஜானகியே வாங்கிப் பேசி நிலைமையின் தீவிரத்தைப் பற்றிச் சொன்னார்.

அவளுக்கு மருத்துவமனைக்கு வழி தெரியவில்லை. சந்திரசேகரிடம் வழி கேட்டு ஓட்டினாள்.

அவள் மருத்துவமனை வாயிலில் காரை நிறுத்தும்போது அவர்கள் ஏற்கனவே தகவல் தெரிவித்திருந்ததால்  அங்கே தயாராக இருந்தனர்.

நிலாக்குட்டி பிறந்தது சுகப்பிரசவம்தான். இப்போது ஏன் இப்படி நடந்தது என்று புரியவில்லை.

உமாவை பிரசவ அறைக்குள் அனுப்பிவிட்டு கவலையுடன் வெளியில் காத்திருந்தனர்.

உமாவை பத்திரமாக மருத்துவமனையில் சேர்த்தாயிற்று என்ற தகவலை மற்றவர்களுக்குச் சொல்லச் சொன்னாள் மகாராணி.

இல்லையென்றால் அவர்கள் பதட்டத்தில் வண்டியோட்டிக்கொண்டு வருவார்கள் என்று அவளுக்குத் தெரியும்.

அவள் சொன்னபடியே சந்திரசேகரும் மற்றவர்களுக்குத் தகவல் சொன்னான்.

இயன்ற அளவிற்கு சுகப்பிரசவம் ஆகுதா என்று பார்ப்போம் என்று மருத்துவர் சொல்லியிருந்தார்.

கவலையுடன் கடவுள்களுக்கு வேண்டுதலை வைத்தார் ஜானகி.

உள்ளே குழந்தையின் வீறிடல் கேட்கவும்தான் அவருக்கு உயிரே வந்தது.

சுகப்பிரசவம்தான்.

சிறிது நேரத்தில் குழந்தையை சுத்தம் செய்து வெளியில் கொண்டு வந்தனர்.

ஆண் குழந்தை.

குழந்தையைத் துவாலையில் சுற்றி எடுத்து வந்த செவிலி ஜானகியிடம் நீட்ட கண்ணீருடன்

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4 
  •  Next 
  •  End 

About the Author

RaSu

Like RaSu's stories? Now you can read RaSu's full novels at Chillzee KiMo. No wait time, No ads, No restrictions!!!

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - ராணி... மகாராணி... - 11 - ராசுAdharv 2019-07-08 20:07
:eek: achacho marubadiyum ena panitinga Rasu ma'am (ethunalum ungalai than point out panuvenan ketkadhinga :P ) starting page la irundha anxiety konjam kurainjadheynu ninaicha facepalm ending la same tempo :sad: hope baby is safe :yes: Maha's move was superb (y) Rajan-a eppo purinjipangalo….
interesting update :clap: :clap: curious to read the next update!! thank you.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ராணி... மகாராணி... - 11 - ராசுRaasu 2019-07-08 21:56
Thank you Adharv.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ராணி... மகாராணி... - 11 - ராசுSrivi 2019-07-08 20:04
Ennachu uma paiyanaukku?? Ippide thiduku nu thodarum potta eppide..mahavoda responsibility pathu pularichu pochu.sema
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ராணி... மகாராணி... - 11 - ராசுRaasu 2019-07-08 21:55
Thank you Srivi.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ராணி... மகாராணி... - 11 - ராசுmadhumathi9 2019-07-08 19:13
:clap: nice & cute epi.but kuzhanthaikku enna aachu :Q: eagarly waiting 4 next epi. (y) :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ராணி... மகாராணி... - 11 - ராசுRaasu 2019-07-08 19:58
Thank you Madhumathi.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ராணி... மகாராணி... - 11 - ராசுதீபக் 2019-07-08 18:01
Sis story super :clap: . What happen to baby suddenly :Q: eagerly waiting know the answer in the next episode. :thnkx: for this episode.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ராணி... மகாராணி... - 11 - ராசுRaasu 2019-07-08 18:42
Thank you Deepak.
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top