Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 18 - பூர்ணிமா செண்பகமூர்த்தி - 5.0 out of 5 based on 2 votes
Change font size:
Pin It

தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 18 - பூர்ணிமா செண்பகமூர்த்தி

Idho oru kadhal kathai

முதனுக்குக் கோபம் வந்துவிட்டது. என்னடா இது கதை ஒரு முடிவுக்கு வருமா. என்று பார்க்கையில் அடுத்த வாரம் வரையிலும் காத்திருக்க வேண்டுமா? என்று.

“அமுதா! தூங்கலையா?” அப்பாவின் குரல் அவனை உலுக்கிவிட்டது.

இல்லப்பா சும்மா புக்ஸ் பார்த்துட்டு இருந்தேன் என்றவனிடம்,

என்ன புக்ஸ் என்றவாறே அருகில் வந்து அமர்ந்த திவாகர், அவன் அருகில் கிடந்தவை  வெள்ளைத்தாமரை இதழ்கள் என்று கண்டதும் சிறிது அதிர்ச்சியுடன் அவனை ஏறிட்டவாறு இது எப்படி உன்கிட்ட? என் மேசையில் நான் தனியா எடுத்து வைத்து இருந்தேனே என்றார்.

அம்மா சொன்ன விஷயத்தை அப்படியே ஒளிவுமறைவில்லாமல் அவரிடம் சொன்னான். உங்க மனசுல இருக்கிற கவலை என்னப்பா, இந்த புக்ல இருக்கிற விஷயமா?

“உங்கம்மா என்னை எந்த அளவு புரிஞ்சு வச்சிருக்கான்னு பார்க்கிறப்போ எனக்கு சந்தோஷமா இருக்குதுடா!” என்ற திவாகர்,

“அப்படின்னா இந்த புக்ல இருக்கிற விஷயம் தான் உங்க வாட்டத்துக்குக் காரணமா அப்பா?” அமுதன் கேட்கவும்,

ஆமா அமுதா! இதுல ஒரு கதை இருக்குல்ல.

எதுப்பா?

“இதோ ஒரு காதல் கதைன்னு” ஒரு தொடர்கதை.

அதைத் தான் நான் இப்போ வாசிச்சிட்டு இருந்தேன். இன்டரஸ்டிங் ஆ தான் இருந்தது.

அதுல வர்ற சம்பவங்கள் எல்லாம் என் கல்லூரிக்கால நாட்களோட ஒத்துப்போகுது. பழைய நினைவுகள்தான் என் மனச்சோர்வுக்குக் காரணம்.இது அத்தனையும் என் வாழ்க்கையில் நடந்தது. யார் இப்படி எல்லாத்தையும் கூடவே இருந்து பார்த்த மாதிரி எழுதுறாங்கன்னு ஒரு சிந்தனை. ஆர்வம்..ஒரு வேளை நான் நேசித்த அந்த பெண்ணே எழுதி இருப்பாங்களோன்னு ஒரு யோசனை. ஆனால் உன் கல்லூரியில் படிக்கிற வயசு இருக்காதே!

கவலைய விடுங்கப்பா! அதை எழுதுறவங்களை நாளைக்குக் காலைல கண்டுபிடிச்சு சொல்றேன்.

கதையே கற்பனைன்னு போட்டுட்டு நிஜ சம்பவங்களை அப்படியே எழுதி இருக்காங்க. அமுதா. தினேஷ் தான் இந்த திவாகர்.

அப்பா என்ன சொல்றீங்க!

ஆமாடா தம்பி! நான் தான் அந்த லவ் பெயிலியர் ஆன தினேஷ்!

அப்போ முகிலன்னு கதையில் வர்றது முருகன் பெரியப்பாவா? அப்போ ராஜி பெரியம்மா தான் ரம்யாவா?

இல்லைடா! இல்லை! அது தான் எனக்கும் புரியல. முருகன் பெரியப்பாவைத் தான் முகிலன் என்ற பெயர்ல கதைல எழுதி இருக்காங்க. பெயர் மாற்றி இருந்தாலும் சம்பவங்கள் அச்சுமாறாமல் அப்படியே இருந்ததால் அப்படியே கல்லூரிக் காலத்தைக் கண்முன்னாடி கொண்டு வந்திருச்சு, ஒரு நிமிடம் அந்த காலத்துக்கே பயணித்த திவாகரைத் தொட்ட அமுதனின் கரம், நிகழ்காலத்திற்கு இழுத்தது.

திவாகர் மேலும் தொடர்ந்து அவனிடம் சொல்ல ஆரம்பித்தார். ரம்யாவோட நிஜ பெயர் ரேவதி. முருகன் அண்ணனைத் தான் பிடிச்சிருக்குன்னு ரேவதி என்கிட்டே சொன்னா. ஆனால், முருகன் அண்ணா பெங்களூர் போய் வேலைக்குச் சேர்ந்து நாலு வருஷம் கழிச்சுத் தான் திருமணம் நடந்தது. அவர்கிட்ட எப்பவும் நான் க்ளோஸாப் பேசிப் பழகினதில்ல. அவருக்குப் பொண்ணு பார்த்தது, நிச்சயம் பண்ணது எதுவும் எனக்குத் தெரியாது. அவர் கல்யாணப் பத்திரிக்கையில் பெண் பெயர் ராஜின்னு பார்க்கும் போதே எனக்கு ஷாக் தான். ஆனால், முடிந்து போன விஷயங்களைக் கிளற வேண்டாம்னு அண்ணன்கிட்ட எந்த கேள்வியையும் அப்போ நான் கேட்கல.

அப்போ ரம்யா. சாரி! சாரி! ரேவதி என்ன ஆனாங்கன்னு உங்களுக்குத் தெரியாதாப்பா?

ம்ஹூம் எனக்குத் தெரியாது! இந்தக் கதை தேவையில்லாமல் புதைச்சு வச்ச பல நினைவுகளை மேலே கொண்டு வந்திருச்சு. இப்போ ரேவதி பத்தி தெரிஞ்சுக்கணும்னு தோணுது. இந்த கதையை எழுதுறதே அவளோன்னு கூட எனக்குத் தோணுச்சு. அந்த ஆர்வம் பழைய நினைவுகளைத் தூசித் தட்டினதும் இல்லாம, கண்ணில் நீர் வரவச்சு, மனசை பாரம் ஆக்கிடுச்சு. கதையை எழுதுறதுன்னு யாருன்னு தேடிப் பார்த்தா, உன் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கிற ஸ்டூடண்ட்னு போட்டிருந்தது. அந்த எழுத்தாளரைக் கண்டுபிடிச்சால் எல்லாக் கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்னு தோணுது அமுதா!. நவம்பர் 18 ஆம் தேதில இந்த அத்தியாயத்தில் எழுதிய எல்லாம் நடந்தது. அடுத்து என்ன சொல்லி இந்த கதையை முடிக்கப் போறாங்களோ? பதினெட்டாம் அத்தியாயத்தில் ரேவதி என்ன ஆனான்னு தெரிஞ்சால் எனக்கு நிம்மதியா இருக்கும். நீ கொஞ்ச நேரமாவது  தூங்கு அமுதன்! என்றவாறு தன் அறைக்குச் சென்றார் திவாகர்.

மறுநாள், காலையில் அமுதன் வழக்கத்தை விட வேகமாகக் கிளம்பி தன் கல்லூரிக்குச் சென்றான். தமிழ் மன்றத்தில் விசாரித்து தொடர்கதையை எழுதிய அந்த எழுத்தாளரை அரைமணியில் கண்டுபிடித்தும் விட்டான். திவாகர் செல்லுக்கு, வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பினான். “எழுத்தாளரைக் கண்டுபிடித்து விட்டேன். ரேவதி இல்லை. இறுதி அத்தியாயம் இப்போதே உங்கள் பார்வைக்கு!”

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 

About the Author

Poornima ShenbagaMoorthy

Completed Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 18 - பூர்ணிமா செண்பகமூர்த்திmadhumathi9 2019-07-14 12:56
:clap: ethirpaaraa thiruppam.nalla kathai. (y) :thnkx: 4 this story. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 18 - பூர்ணிமா செண்பகமூர்த்திAdharv 2019-07-14 09:40
:hatsoff: heart touching story ma'am 👏👏👏as said both of them won our hearts with their pure love.... Rombha etharthamana mudivu. That was an valuable message, past ninaichikittu present la feel panuvadhu no use!! They proved their love for each other ma'am :hatsoff: iruvarum.miga seriyaga purindhu kondu they have taken their life journey into a successful path!! magizhci 😍😍😍😍

ippovum.silla families jathi mathamnu.pakuradhu undu.... wish they broaden their views!!

somewhere ivanga konjam.poradi.irukalamnu thonudhu...because I feel bad kadhai mudivu happy as both have settled happly still :sad:

awesome and crisp narration ma'am :hatsoff: the way u unfolded the suspense is simply superb👍👏 eppodhum rendu pakam aga irundhalum epi padichi mudikumbodhu Oru niraivana feel irukkum. Loved this cute little love story ma'am !!
Wish you all th best and keep.writing!! Thank you 🌸🌸

* Tbye amudhan!! 😁😁
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 18 - பூர்ணிமா செண்பகமூர்த்திPrathap jansi 2019-07-14 09:07
Wowwwwwww :dance: epd ipdyoru kadhai chance eh illa very nice story :clap: u r a great person ma'am neenga kadhayai kondu sendra vidham arumai and ipdyoru climax very nice :grin: iruvarum magilchiyaga iruppadhu unmayil nimmadhiyaga ulladhu. Kadandha kalathai marakka vendum enbadhum evlovu unmai miga sariyaga indha epi moolam kurippittullirgal really superb story :GL: ungal adutha padaipukku ungal Ella padaippukkalum pirabalamaga ennudaya valthukkal (y) :thnkx: for this wonderful epi and story
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top