(Reading time: 5 - 9 minutes)

தொடர்கதை - கிபி டு கிமு - 06 - சுபஸ்ரீ

Kipi to kimu

ன்புள்ள கிபி,

நாங்கள் அனைவரும் இங்கு நலம்.

நான் சூப்பர் இல்லை சுமார்தான் என எழுதி இருந்தாய். ஆனால் உன் மனம் சூப்பராகவே உள்ளது. இல்லையெனில் இத்தனை விஷயங்களை ஆராய்ந்து இருப்பாயா?

முந்தைய கடிதத்தைவிட இந்த கடிதத்தில் உன் தைரியம் அதிகமாகி இருப்பதை உணர்கிறேன்.

என்றுமே மற்றவர் உதவியை காட்டிலும் வீரத்துடன் களத்தில் நாமே இறங்கி செயல்படுவதில் ஒரு அலாதி சந்தோஷம் உள்ளது. எனக்கென்று யாரும் இல்லை. எனக்கானவற்றை நானே யார் துணையுமின்றி செய்துக் கொள்வேன். தொடக்கத்தில் மனம் துவண்டுவிழும். ஆனால் போக போக என் முடிவுகள் என் கையில் எனும்பொழுது சந்தோஷமாகவே உணர்கிறேன்.

விக்கி இந்த கடிதத்தை எழுதவில்லை என்றுதான் நானும் நினைக்கிறேன். அரவிந்த் மற்றும் சரவணனை நன்றாக கவனி. இன்று விக்கி தன் செயல்களை செவ்வனே செய்துக் கொண்டிருக்கிறான் என தோன்றுகிறது.

அதற்கு முக்கிய காரணம் நீதான். அவன் விருப்பத்தை தெரிவித்ததும் கோப்படாமல் சரியாக வழிகாட்டினாய். ஹட்ஸ் ஆப் கிபி. உன்னை போல் அனைவரும் விவேகத்துடன் முடிவெடுத்தால் நிச்சயம் பிரச்சனையை தவிர்க்கலாம்.

அதையும்விட விக்கி உன் பேச்சிற்கு மதிப்பளித்தது. இது காவிய காதல் என சினிமா வசனம் பேசாமல் ஆக்கபூர்வமாக முடிவெடுத்துள்ளான்.  

இந்த கடிதத்தில் ஏதோ ஒரு தகவல் மறைந்துள்ளதாக நானும் கருதுகிறேன். நான் கடித்ததை பார்காத்தால் இப்படியும் இருக்கலாம் என்கிற யூகம்தான் இது.

ஒவ்வொரு மனிதரின் ஆழ்மனதில் பலவகையான எண்ணங்கள் சிந்தனைகள் நல்லவை தீயவை என்ற பாகுபாடு இல்லாமல் தேங்கி கிடக்கும். சிலருக்கு அவற்றை வெளிப்படுத்த சாதகமான சூழ்நிலை வாய்ப்பதில்லை. அவை மனம் என்னும் பெட்டகத்தில் பூட்டி வைக்கப்படுகின்றன. அப்படியான விஷயங்கள் சில சமயங்களில் அவர்கள் அறியாமல் வெளி வரும் அதுவும் வேறு விதமாக.

போனில் பேசும் பொழுதுதோ  படிக்கும் பொழுதோ அல்லது வேறுசில வேலையில் லயித்து இருக்கையில் சிலர்  ஒழுங்கற்ற ஒவியங்கள் அல்லது பெயர்களை மீண்டும் மீண்டும் கிறுக்கிக் கொண்டிருப்பார்கள். பார்த்திருக்கிறாயா?

அந்த கிறுக்கள்களின் பெயர் டூடுல் (DOODLE) அல்லது ஸ்கிரிப்ளிங் (SCRIBBLING) எனப்படும். மனதிலிருந்து வெளிவராத எண்ணங்கள் மற்றும் ரகசியங்களின் வெளிப்பாடு.

ஒவ்வொரு வடிவதிற்கும் உளவியல் ரீதியிலான அர்த்தங்கள் உண்டு என உளவியல்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.