(Reading time: 5 - 9 minutes)

ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இது பெரிய பாதிப்பு என்றெல்லாம் இல்லை.  செப்டம்பர் 20th National Doodle Day ஆக கொண்டாடப்படுகிறது.

ஒரு தாளில் நம் மனதை துன்புறுத்தும் விஷயங்களை எழுதி பின்னர் அந்த தாளை எரித்தோ அல்லது கிழித்தோ போட்டால் மன பாரம் விலகும் என்று சொல்லபடுவதுண்டு.

சில வடிவங்களும் அதற்கான உளவியல் பொருள்

ஸ்டிக் மேன் – சிலர் குச்சி போன்ற கை காலுடன் மனித உருவங்களை வரைவதுண்டு. இதற்கான பொருள் பாதுகாப்பற்ற உதவியற்ற தன்மையும் தனிமையும் இவற்றை குறிக்கிறது. இவர்களுக்கு அரவணைப்பு தேவைப்படுகிறது.

கைஎழுத்து - தன் பெயரை சிலர் பலமுறை எழுதுவார்கள். இதற்கான பொருள் அவர் தன்னலம் மட்டுமே பிரதானமாக கொண்டவர்தன்னை சுற்றியே அத்தனையும் நடக்க வேண்டும் என எண்ணுபவர்கள்.

அம்புகுறி – இது வாழ்க்கையின் திசையை நோக்கிய பயணத்தை பிரதிபளிப்பதாகும். மேல் நோக்கிய அம்பு மற்றவர் நலனுக்காக பாடுபடுபவர்.

கீழ் நோக்கிய அம்பு தன்னலம் கருதுபவர். இவர்களால் மற்றவர்களுக்கு தீங்கு இல்லை. இடது பக்கம் நோக்கிய அம்பு கடந்த கால நிகழ்வினில் சிக்கி தவிப்பவர். வலது பக்கம் எனில் எதிர்காலத்தைப் பற்றிய எண்ணங்கள் கொண்டவர்.

நட்சத்திரம் – இதற்கு தான் மட்டுமே பிரதானம். தன்னை மட்டுமே கவனிக்கபட வேண்டும். பல முனைகள் கொண்ட நட்சத்திரங்கள் எனில் மனச்சோர்வு அல்லது மனக் கவலை உள்ளவர்.

பூக்கள்,வீடு, சூரியன்இப்படியானவற்றை வரைபவர்கள் மனநிறைவு உள்ளவர்கள். எதையும் சமாளிக்கும் ஆற்றல் கொண்டவர்கள். நேர்மறையான எண்ணங்கள் உள்ளவர்கள்.

குழந்தைகள் அதிகம் இப்படிதான் பூக்கள் வீடு சூரியன் போன்றவற்றை வரையும். மனதில் கவலைகள் இல்லாதவற்றை குறிக்கிறது.

எக்ஸ் ×  -  தான் முன்பு செய்த ஒரு தவறுக்காக வருந்துபவர்.

சதுரம் போன்று அனைத்து பக்கமும் சம அளவை கொண்ட சமச்சீரான வரையப்பட்டிருந்தால் அவர் மிகுந்த அன்புக் கொண்டவர். வாழ்க்கையில் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற தீர்கமான கணிப்பு உள்ளவர்.

செஸ் போர்ட் – தான் ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டு அதனில் இருந்து வெளிவர துடிப்பவர்.

தேன்கூடு போன்ற அமைப்பு -  வாழ்க்கையில் அன்பான துணை வேண்டுபவர்.

சுருள் சுருளாக வரைதல் – எனக்கே ஆயிரம் பிரச்சனை . . உன் பிரச்சனையை என் தலையில் சுமத்தாதே என எண்ணுபவர்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.