Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 12 - பிரேமா சுப்பையா - 5.0 out of 5 based on 2 votes
Ethir ethire neeyum naanum
Pin It

தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 12 - பிரேமா சுப்பையா

ப்படியே விடமுடியாது என்று தான் பாலாவை அன்று பார்க்க சென்றிருந்தாள் பொன்னி. ஆனால் அன்று அவனோ ஹோட்டல் பிருந்தாவனில் உணவு வாங்கி தர சொல்லி அவளை கடுப்பேற்றியிருக்க  வேறு வழியின்றி மீண்டும் பிருந்தாவனில் சந்தித்தனர்.

"எவ்வளவு பணம் வேணும் பாலா ..." என்றாள் ஒருவித கடுமையான குரலில்

உணவு உண்டு வழக்கம் போல் அவளிடம் வம்பளந்துவிட்டு செல்ல நினைத்தவன் அவளை பார்த்தபடி நிற்க ...

“எவ்வளவு வேணும்? அதுக்காக தானே இந்த டிராமா? .... நீயா கேட்பேன்னு இவ்வளவு நாள் காத்திட்டு இருந்தேன் ..... நானே கேட்கணும், அதான வேணும் உனக்கு? ... சொல்லு எவ்வளவு வேணும் ?” என்று ஊடுருவும் பார்வையோடு கேட்க  

அவனோ தனது தாடையை இருமுறை தடவியபடி .... அவள் அருகே வந்து அமர்ந்து, அவள் தோள் மேல் கை போட்டு, அவளை  தன்னோடு சேர்த்து  அணைத்து .... "சிங்கிள் பேமெண்ட் எல்லாம் பத்தாது தங்கமயிலு ..... நீ என்னோட பொன் முட்டை இடும் வாத்து . இல்ல இல்ல மயிலு ...என் தங்கமயிலு”என்று அவள் கன்னத்தை கிள்ளியவன் ... “ஒரேடியா அறுத்தேன்னு வை ..எனக்கு தானே நஷ்டம் ...எனக்கு லாபம் மட்டும் தான் வேணும், பத்து நாள்ல நமக்கு கல்யாணம் பொன்மயிலு க…....ல்..யா…ண…ம் ...திரும்ப திரும்ப  இப்படி பேசி மாமனை கடுப்பேத்த கூடாது புரியுதா?” என்று சொல்ல

“ஆ”வென்று வாய்பிளந்து அவனை பார்த்துக்கொண்டிருந்தாள். உண்மையிலேயே ஒரு கயவனிடம் அகப்பட்டு கொண்டது போல் உணர்ந்தது அவள் மனம் .... இருந்தும் அவனிடம்

"நீ அடங்க மாட்ட பாலா...கண்டிப்பா உன்னை நான் கதற வைப்பேன் பார்த்துக்க ...நீ நினைக்கிற மாதிரி சாதாரண பொண்ணு இல்லை இந்த பொன்னி ..." என்று அவள் விரல் நீட்டி எச்சரிக்க அவனோ,

"தங்கமயிலு, உன் கழுத்துல தாலி கட்ட போற அந்த நேரத்துக்காக நான் ஆசையா வெயிட்டிங்" என்று உருகும் குரலில் சொல்ல

"ஷட்  அப் யு ஸ்டுப்பிட் , தாலி கட்டும்போது கூட, இந்த கல்யாணம் வேண்டாம்னு நான் எழுந்துடுவேன் " என்று அவள் மிரட்ட

"எழுந்துக்கோ, உட்கார சொல்லியெல்லாம் நான் வற்புறுத்த மாட்டேன் தங்கமயிலு, நான் மாப்பிள்ளையாக்கும், நீயே உட்காருவ, என் கையால தாலி வாங்கிக்குவ, வாங்கிக்க வெப்போம் இல்ல" என்று அவன் சொல்ல

அவள் மனம் லேசாக குளிர தொடங்கியது.

இன்னமும் பத்தே தினங்கள்...!! என்ன செய்வேன்? எப்படி இதை சமாளிக்க போகிறேன்..!!

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5 
  •  Next 
  •  End 

About the Author

Prama Subbiah

Prama Subbiah's Popular stories in Chillzee KiMo

  • Idhu enna maayam..?.!Idhu enna maayam..?.!
  • Kanamoochi re re!Kanamoochi re re!
  • Unnil tholainthavan naanadiUnnil tholainthavan naanadi
  • Vaa.. vaa.. en devathaiye.!Vaa.. vaa.. en devathaiye.!

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 12 - பிரேமா சுப்பையாAbiMahesh 2019-09-15 11:14
Nice update Mam! Bala nallavara?? Alwa anna enna panranga?? :thnkx: and Waiting for next update :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 12 - பிரேமா சுப்பையாsaju 2019-09-14 21:23
haha pillayaa ipdi suthalaa vidarayee balaaaaaaaaaa
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 12 - பிரேமா சுப்பையாmadhumathi9 2019-09-14 06:39
bala nallavara kettavara :Q: ponniyin nilai facepalm enna nadanthaalum sari ennum nilaikku vantha vittathey manathu :sad: nallapadiya nadakkattum endru venduvom. :thnkx: 4 this epi.waiting to read more. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 12 - பிரேமா சுப்பையாAdharv 2019-09-13 20:13
Pch indha kanavunga rombha tholaiya poche facepalm ponny Oda motha will poweraium ippadi suck panitingale ji :sad: waiting to see what is Bala upto :Q: villain dialogue ellam adikurare steam dei alwa bro where are u?? Unnai nambi pons irundha ninga cold war kadaipipadhu fair illai :angry: interesting update ma'am👏👏👏 waiting to see what happens next...thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top