Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
மனம் விரும்புதே உன்னை... - 21 - 5.0 out of 5 based on 1 vote

21. மனம் விரும்புதே உன்னை... - Aadhi

Manam virumbuthe unnai

ற்றே ஆச்சர்யத்துடன் திரும்பிய காஞ்சனாவை பார்த்து,

“ஏன் ஆன்ட்டி இப்படி எல்லாம் செய்றீங்க? உங்க மேல நாங்க எல்லாம் எவ்வளவு மதிப்பு வச்சிருக்கோம்? திரும்ப திரும்ப ஏன் ஒரே தப்பையே செய்றீங்க? இந்து இந்த நிமிஷம் வரைக்கும் உங்களை பத்தி யார் கிட்டேயும் சொல்லலியே அதுல இருந்தே அவளை பத்தி உங்களுக்கு புரியலையா? அவள் நினைச்சால் ஒரு நிமிஷத்தில உண்மையை சொல்லி உங்க ரெண்டு மகனையுமே உங்க கிட்ட இருந்து மனசளவிலாவது விலகி, தூரமா போக வைக்க முடியும் தானே? நீங்க பெரியவங்க இல்லையா??? எங்களுக்கே புரியுறது உங்களுக்கு புரியலையா? இப்படி அடம் பிடிச்சு நீங்க சஞ்சீவுக்கு வேற பொண்ணை பார்த்து கல்யாணம் செஞ்சு வச்சா அவர் சந்தோஷமா இருப்பாரா? இப்போ அக்கா உங்க கிட்ட எப்படி அன்பா நடந்துக்குறாங்க... புரிஞ்சுக்கோங்க ஆன்ட்டி... நீங்களா மாறலைன்னா நான் வேற மாதிரி ஸ்டெப் எடுக்க வேண்டி இருக்கும்....”

என்று பொறிந்து தள்ளினாள் வீணா.

பேசி முடித்து விட்டு, காஞ்சனாவிடம் இருந்து கோபமான பதிலை எதிர்பார்த்து நேராக பார்த்தால், அவர் முகத்தில் புன்னகை தான் இருந்தது. எதற்க்கும் அசையாத வீணாவே கொஞ்சம் திகைத்து தான் போனாள். என்ன ஏது என்று யோசிக்கும் முன், அர்ச்சனா இருந்த அரை கதவை திறந்துக் கொண்டு லக்ஷ்மி வெளியில் வந்தார்.

“என்னடா இந்த நேரத்தில சத்தம்னு நினைச்சேன்... வீணா நீ தானா?” என்றார் ஆச்சர்யத்துடன்.

வீணாவிற்கு குழப்பத்தில் ஒன்றும் சொல்ல தோன்றவில்லை.

“ஆமாம் லக்ஷ்மி, உங்க மருமகள் தான்... நீங்க சொன்ன மாதிரியே அவள் இருக்கும் இடம் கலகலப்பா தான் இருக்கு...”

“அதெல்லாம் சரி ஆனால் இது மருத்துவமனை இல்லையா? ஆமாம் வீணா இந்த நேரத்தில இங்கே என்ன செய்ற?”

“வந்து... வந்து... சாவியை காணும் அத்தை அது தான் இங்கே இருக்கான்னு பார்க்க வந்தேன்...” அவசரமாக யோசித்து பொய் சொன்னாள் வீணா.

“அட சாவியை காணுமா? உள்ளே போய் தேடி பார்க்கலாம்....” என்று பொய்யான அக்கறையோடு சொன்னார் காஞ்சனா.

“இல்லை ஆன்ட்டி பரவாயில்லை...அவர் கிட்ட எப்படியும் இன்னுமொரு சாவி இருக்கு....”

“நல்ல பொண்ணு தான்... இந்த நேரத்தில சாவியை தேடி இவ்வளவு தூரம் வந்துட்டு, இப்போ வேண்டாம்னு சொல்ற??” என்றார் லக்ஷ்மி.

“இல்லை அத்தை... அர்ச்சனா ஆன்ட்டியை தொல்லை செய்ய வேண்டாமேன்னு தான்...”

“அதுவும் சரி தான்...”

“ஆமாம் ரோஷினி எங்கே இருக்கா???”

“தூங்கிட்டு இருந்தா அத்தை... இந்துக்கிட்ட சொல்லிட்டு வந்தேன்....”

“சரி... ஆனாலும் என்ன தான் தைரியசாலியா இருந்தாலும், இப்படியா நேரம் கெட்ட நேரத்தில தனியா வரது???? சரி சரி பார்த்து போ, நான் சாவி இருக்கான்னு பார்க்கிறேன்...”

“சரி அத்தை... பை ஆன்ட்டி...” என்றபடி காஞ்சனாவை பார்த்து விட்டு கிளம்பினாள் வீணா. காஞ்சனா முகத்தில் இன்னும் புன்னகை இருந்தது.

வீணாவிற்கு ஒன்றும் புரியவில்லை. ஒருவேளை இந்துவிற்கு உதவி செய்வதாக நினைத்து தொல்லை செய்து விட்டோமோ? காஞ்சனா இதை வேறு விதமாக உபோயோகிக்க திட்டம் இடுகிறாரோ? இல்லை என்ன ஆனாலும் இதை இத்தோடு விடுவதில்லை... யாருக்கு யாருடன் சண்டை வந்தாலும் சரி, இனிமேல் இந்துவை சோகமாக பார்ப்பதில்லை... எபப்டியாவது இந்துவையும் சஞ்சீவையும் சேர்த்து வைத்தே ஆக வேண்டும்... தேவை பட்டால் கீதா அக்காவையும், ராஜீவையும் கூட உதவிக்கு கேட்கலாம்...

இப்படி எதை எதை சிந்தித்த படி போன வேகத்தில் திரும்பி வந்த வீணா, எழுந்து அவளுக்கு காபியுடன் தயாராக இருந்த இந்துவை பார்த்து ஆச்சர்யப் பட்டாள்.

“என்ன இந்து இது??? இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கலாம் தானே?”

“ப்ச்... தூக்கம் வரலை வீணா.. அம்மாக்கு போன் செய்யலாம்னா அவங்க தூங்கிட்டு இருப்பாங்க...”

“ஆமாம்... நீதான் தூங்கலை, ஆன்ட்டியையாவது கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க விடு...”

“ம்ம்ம்ம்.... எனக்கு ஒரு ஐடியா தோணிச்சு வீணா?”

“என்ன????”

“எஸ் ஏ இண்டஸ்ட்ரீஸ் மொத்த பங்கு எல்லாத்தையும் நந்தினி பேருக்கும் அவ அம்மா பேருக்கும் மாத்த சொல்ல போறேன்... “

“எந்த ஷேர்ஸ் பத்தி பேசுற????”

“என்னுடையதும் அம்மாவுடையதுமா மொத்த 75 சதவிகிதத்தையும் தான்...”

“உனக்கு என்ன பைத்தியமா? நீ அந்த கம்பெனி மேல எந்த அளவு ஈடுபாடு வச்சிருக்கேன்னு...”

“அது என்ன வீணா ஒரு உயிரில்லாத கம்பெனி தானே... எத்தனையோ பெரிய விஷயத்தில் எல்லாம் விட்டு விலகுறதுன்னு முடிவு பண்ணி ஆச்சு...”

“இந்து, அவசர பட்டு முடிவு எடுக்காதே... உங்க ரெண்டு பேருக்கும் காலேஜில் நடந்த பிரச்சனை எல்லாம் யோசிச்சு பார்...”

“ப்ச்... அதெல்லாம் இருக்கட்டும் வீணா... நந்தினி அப்பாவுடைய மகள்ன்னு அபிஷியலா சொல்ற நேரம் வந்தாச்சு... யோசிச்சு பாரு இந்த மாதிரி அப்பா பேர் தெரிஞ்சு இருந்தும் சொல்ல முடியாமல் இருப்பது எவ்வளவு கொடுமைன்னு.. அதுவும் அத்தை வேற அவளையும் அந்த ஆன்ட்டியையும் ரொம்ப சொல்லி காமிச்சு இம்சை படுத்துறாங்க...”

 

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4 
  •  Next 
  •  End 

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# SuperKiruthika 2016-06-03 16:32
Lovely Epi ..
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 21Subashini 2012-12-12 12:32
hi Aadhi,

Story superb... next part a konjam sekram update panunga sir :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: மனம் விரும்புதே உன்னை... - 21Thenmozhi 2012-12-13 08:41
Hey Subashini,
Next part is updated now! As I said below, this series is updated once in two weeks only :-)

BTW, I am madam and not sir :roll:
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 21Subashini 2012-12-13 16:35
sorry aadhi sister.. :-( this part is nice.. :roll: :roll: hmmm.. waiting for 27...
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 21Thenmozhi 2012-12-14 05:45
No problems Subashini :-)
Reply | Reply with quote | Quote
# Very NiceBalameenakshi 2012-12-12 10:45
Hi Aadhi,

Very nice story, remembers my friends :-) Waiting for the next update of this. Its been a long time expecting the next part. Please update it soon :-|
Reply | Reply with quote | Quote
# RE: Very NiceThenmozhi 2012-12-13 08:40
Hi Balameenakshi,
Thanks for your compliments!

This series updated once in two weeks! I ahve posted the next episode today, so you can expect the next part only on 27th :-)
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 21shanmugapriya 2012-12-12 08:15
Hi aadhi
story is very superp . i like three friends and also like geetha char.
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 21Thenmozhi 2012-12-13 08:39
Thanks Shanmugapriya!
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 21bharathi 2012-12-06 19:27
hi aadhi...
tis story is very nice....i like sanjeev nd indhu pair....evlo fight vanthalum kadaisila rendu peraiyum serthu vachudunga pls....
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 21Thenmozhi 2012-12-13 08:38
Hi Barathi,
Kathai ungalukku pidithathu polave mudiyumnu nambuvom :-)

Thanks for your compliments!
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 21ela 2012-12-04 19:34
unexpected one,,, :-)
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 21Thenmozhi 2012-12-05 05:12
Hi Ela,
Chinna twist-aavathu venum thaane :-)
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 21ela 2012-12-06 18:46
s aadhi...awesome...
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 21Thenmozhi 2012-12-13 08:37
Thanks Ela :-)
Reply | Reply with quote | Quote
# very nicesaividhya 2012-11-30 11:44
a beautiful story.your writings and words r very good. neenga thodarnthu write more
Reply | Reply with quote | Quote
# RE: very niceThenmozhi 2012-12-05 05:12
Thanks a lot SaiVidhya :-)
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 21Nanthini 2012-11-30 06:47
Good One Aadhi :) adutha fight-a? So adutha vaaram innumoru fight ethirpaarkkalaamaa? :-)
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 21Thenmozhi 2012-12-05 05:11
U mean the final part right... Adutha episode padichu therinjukkonga... :-)
Reply | Reply with quote | Quote
# Manam Virumbuthey Unnaimalathimarianandan 2012-11-30 01:20
Hi Aadhi,
Sanjeev unakku indhu mela ivvalavu kobam irukkum yentru yethirpparkkavillai.

Waiting for ur next update.
Reply | Reply with quote | Quote
# RE: Manam Virumbuthey UnnaiThenmozhi 2012-12-05 05:10
:-) Hero evvaluvu naal thaan amaithiyaa irukkirathu... Just kidding :-)
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 21Admin 2012-11-29 20:27
:eek: Enna aadhi Ippadi senjuteenga ????
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 21Thenmozhi 2012-12-05 05:09
Small twist avvalavu thaan :-)
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

 

Go to top