Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (6 Votes)
தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 17 - சுபஸ்ரீ - 5.0 out of 5 based on 6 votes
Ringa ringa roses
Pin It

தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 17 - சுபஸ்ரீ

திரௌபதி அம்மன் துணைஎன்னும் பெரிய வெள்ளை எழுத்துகள் பச்சைநிற போர்ட்டை நிரப்பி இருந்தது. அதை தன் தலையில் சுமந்தபடி தண்ணீர் லாரி  கரடுமுரடான பாதையில் கற்பிணி பெண்ணைப் போல முக்கி முனகி வந்து நின்றது. லாரி டிரைவர் உடன் இருவர் இருந்தனர்.

பரத் மற்றும் கணேஷ் வள்ளி இருக்கும் பிளாட்டிற்கு சற்று அருகில் இருந்தபடி பேசுகையில் தண்ணீர் லாரி அவர்களை கடந்து உள்ளே சென்றது. வெளி வர பதினைந்து நிமிடமாவது ஆகும்.

பரத் அவசரமாய் உள்ளே செல்ல எத்தனிக்க அவனை கணேஷ் பின் தொடர்ந்தான் “நீ வராதஎன்றான் பரத்

ஏன்?”

கேமரா உள்ள இருக்குஎன்றபடி பிளாட் உள்ளே நடந்தான்.

கணேஷ் ஆவல் மிகுதியால் சற்றே எட்டிப் பார்த்தான்.

சொன்னா கேக்க மாட்டியா . . உன் முகம் ரெகார்ட் ஆக கூடாது கணேஷ்என அவனுக்கு சுடுசொல் விழுந்தது.

கணேஷ்ற்க்கு எரிச்சலாக இருந்தது. “இவனெல்லா எனக்கு ஆர்டர் போடறான் . . எல்லா இந்த மதியாலஎன அவள் மேல் கோபம் திரும்பியது.

பேசாம அம்மா சொன்ன பொண்ணை கல்யாணம் பண்ணிக்கலாம். கொலை பழிவாங்கறேனு அலையறதுக்கு . . எல்லா என் நேரம்என சம்பந்தமே இல்லாமல் மனம் வெவ்வேறு விஷயத்திற்கு தாவியது.

காலால் பைக்கை உதைக்க . . அவன் காலை அது பதம்பார்த்தது. ஒரு நிமிடம் ஒற்றை காலில் நடனமாடிஎன் நேரமே சரியில்லஎன புலம்பினான்.

அவன் சராசரி மனிதனாக வளர்க்கபட்டதன் விளைவுதான் இந்த எண்ணங்கள் எனலாம். பிரச்சனைகளைக் கண்டால் சற்றே விலக தோன்றும் சுபாவம். அதையும்விட இந்த போராட்டத்தின் இறுதியில் என்ன நடக்குமோ என்கிற அச்சம். பரத் மதி மனதை திசைதிருப்புகிறான் என்கிற கோபம். இவை அனைத்தும் அவனை பாடாய்படுத்தியது.

பரத் உள்ளே சென்றான். வாட்ச்மேன் கவனம் லாரியில் இருக்க . . இவனை  தடுக்கவில்லை. பரத் நின்ற இடத்திற்கும் கேமராவிற்கும் நடுவில் யானை மாதிரி லாரி நின்றிருந்தது.

ஒரு லோட் தண்ணி எவ்வளோ அண்ணே?” என உள்ளே சென்ற பரத் லாரி டிரைவரிடம் கேட்டான் சுற்றிலும் நோட்டம்விட்டபடி.

 “800 ரூபாஎன டிரைவர் கண்மூடி சுவாரஸ்யமாய் உருட்டிய பேப்பரால் காதை குடைந்தபடி

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6 
  •  Next 
  •  End 

About the Author

Subhasree

Subhashree's popular stories in Chillzee KiMo

  • Kallaraiyil oru karuvaraiKallaraiyil oru karuvarai
  • Suzhalum marmamSuzhalum marmam

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 17 - சுபஸ்ரீAdharvJo 2019-11-20 14:46
wow :dance: sema interesting plot sis :hatsoff: :clap: :clap: Curiosity is high to know if the kids are alive :yes: Ganesh's reaction was very realistic but Bharath appadi ena avara pathi mute mode blade potu iruparu :Q: :lol:
Amazed with the planning!! (y) Aduthu ena agumnu therinjika waiting. thank you.
:hatsoff: to your R&D (y)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 17 - சுபஸ்ரீDurgalakshmi 2019-11-19 19:24
Semma twist sissy :clap:
Ganesh ai feel Panna
vekathinga pavam facepalm
Bharath aduthu Enna seyya
porar .. eagerly waiting for next epi
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 17 - சுபஸ்ரீmadhumathi9 2019-11-19 13:43
:clap: nice epi mam.eagerly waiting for next epi.kathai interesting aaga poguthu. :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 17 - சுபஸ்ரீJanaki 2019-11-19 13:13
Oh my God :grin:
Aavi pei illaya :clap:
Bharath killadi thaan ponga
Each and every move was really
very interesting Suba.
The way you carrying the story is
so nice.
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top