Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 5 - 9 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
Verena nee iruppin.. Verethum vendame
Pin It
Author: Chithra V

தொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே!! - 14 - சித்ரா. வெ 

னது டிபார்ட்மெண்ட் எங்கே உள்ளது என்று தெரியாமல் விழித்த நித்யா, கொஞ்சம் தள்ளி கும்பலாக மணவிகள் இருக்கவும், சீனியர் மாணவிகள் ஜூனியர் மாணவிகளை ஈவ்டீசிங்க் செய்கிறார்கள் என்பதை அறியாமல் அவள் அங்கே சென்று, “நான் பிகாம் பர்ஸ்ட் இயர், எந்தப்பக்கம் அந்த டிபார்ட்மெண்ட் இருக்குன்னு சொல்ல முடியுமா?” என்றுக் கேட்க,

அவள் அணிந்திருந்த காட்டன் சுடிதாரில் துப்பட்டாவை ஒற்றை பக்கம் போட்டிருந்ததால், அவள் கழுத்தில் இருந்த கணமான தாலி சரடு மற்றவர் பார்வைக்கு தெரிந்தது மட்டுமல்லாமல், நெற்றி வகிட்டில் சின்னதாக வைத்திருந்த குங்குமமும் அவளை மணமானவளாக காட்ட,

“ஹே நம்ம டிபார்ட்மெண்ட் தான், அதுவும் கல்யாணமான ஆன்ட்டி, எப்படியிருந்தா என்ன? நாங்க சொன்னதை செஞ்சா தான் விடுவோம்,” என்று ஒரு மாணவி சொல்ல, நித்யா திருதிருவென விழித்தாள்.

பார்க்கப் போனால் அவர்கள் மூன்றாவது வருட மாணவிகளாக இருந்தால், இவளும் கிட்டத்தட்ட அவர்கள் வயதுடையவளாக தான் இருப்பாள். அப்படியிருக்க அவர்கள் ஆன்ட்டி என்று அழைத்தது மட்டுமல்லாமல், சொன்னதை செய்ய வேண்டுமென்று சொல்கிறார்களே, இவர்கள் இப்போது செய்வது என்ன? ஈவ்டீசிங்கா? பெண்கள் கல்லூரியில் கூடவா இந்த ஈவ்டீசிங் தொல்லையெல்லாம் இருக்கிறது. என்ற சிந்தனையில் அவள் இருக்க,

"ஹலோ என்ன யோசனை, நாங்க சொன்னதை செஞ்சா தான் விடுவோம், இல்லை நீ உன்னோட கிளாஸ் ரூம்க்கு போக முடியாது," என்று ஒரு மாணவி அவளை பயமுறுத்தினாள்.

"சரி நான் என்ன செய்யணும்?" என்று நித்யா பயந்தப்படியே கேட்க,

"உங்களுக்கு ரொம்ப சிம்பிளா சில கேள்விகள் தான் கேட்கப் போகிறோம் ஆன்ட்டி," என்று ஒரு மாணவி கூறினாள்.

"சரி உங்களுக்கு என்ன கேள்வின்னா?" என்று இன்னொரு மாணவி இழுத்தவள்,

"ஃபர்ஸ்ட் நைட் ரூம்ல என்ன செய்வாங்க?" என்று கேட்க,

இப்படியெல்லாமா கேள்வி கேட்பார்கள்? அவளது தோழிகள் இப்படி அந்தரங்கமான விஷயங்களை பேசிக் கொண்டதுண்டு. அதுவே இவளுக்கு பிடிக்காமல் இருக்க விலகிச் சென்றுவிடுவாள். அப்படியிருக்க இப்படி வெளிப்படையாக ஒரு அந்தரங்கமான விஷயத்தை கேட்பதற்கு அவர்களுக்கு கூசவில்லையா?" என்று நித்யாவிற்கு கோபம் வந்தது.

அதற்குள் ஒரு மாணவி, "ஹே ஃபர்ஸ்ட் நைட் ரூம்ல என்ன நடக்குதுன்னு எத்தனை சினிமால பார்த்திருக்கோம், அப்புறம் ஏன் டீ இப்படி ஒரு கேள்வி?" என்று கேட்க, மற்றவர்கள் சிரித்தனர்.

"ஹே எங்கடி சினிமால விளக்கமா காண்பிக்கிறாங்க, இந்த வருஷம் படிப்பு முடிஞ்சா எனக்கு

  •  Start 
  •  Prev 
  •  1  2 
  •  Next 
  •  End 

About the Author

Chithra V

Latest Books published in Chillzee KiMo

  • Ennodu nee unnodu naanEnnodu nee unnodu naan
  • Enna periya avamanamEnna periya avamanam
  • KaalinganKaalingan
  • Kanavu thaan ithuvum kalainthidumKanavu thaan ithuvum kalainthidum
  • Nee ennai kadhaliNee ennai kadhali
  • Parthen RasithenParthen Rasithen
  • Serialum CartoonumSerialum Cartoonum
  • Vallamai thanthu viduVallamai thanthu vidu

Completed Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே!! - 14 - சித்ரா. வெsaaru 2019-12-11 02:36
Lovely update
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே!! - 14 - சித்ரா. வெAdharv 2019-12-10 09:35
First day @ college-a uthi kidacha :lol: indha bongu students internals marks cut panunga PA steam Karthik badhila yenunga Rama VA anupinga facepalm ;-) nice epi Chithra ma'am :clap: :clap:

Thank you.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே!! - 14 - சித்ரா. வெmadhumathi9 2019-12-10 08:37
Nice epi mam (y) :clap: :thnkx: 4 this epi :-) eagerly waiting for next epi. :GL:
Reply | Reply with quote | Quote

🆕 Latest Updates 🆕

📈 Trending @ Chillzee 📈

📅 Chillzee Series update schedule 📅

M Tu W Th F Sa  Su
NKNI

MOVPIP

KEK

KAKK

VEE

UIP

NPM

SiRa

NMK

EMAI

UANI

UKIP

VKPT

EEIA

EEKEE

KMEE

MVK

UKAN

KKK

AV

AA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top