(Reading time: 5 - 9 minutes)
Idhu namma naadunga
Idhu namma naadunga

தொடர்கதை - இது நம்ம நாடுங்க! - 05 - ரவை

மூன்றாம் பகுதியில் இங்கர்சால் மருத்துவ மனைக்குள் நுழைவதைப் பார்த்தோம்

ங்கர்சால், மருத்துவ மனைக்குள் நுழைவதையும் அவர் சுற்றுமுற்றும் பார்ப்பதையும் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவு செய்ததோ இல்லையோ, வேறொருவருடைய கண்கள் பதிவு செய்ததோடு, அவரை பின்தொடரவும் செய்தன!

 எதேச்சையாக திரும்பியபோது, இங்கர்சால் அந்த கண்களின் சொந்தக்காரனை கவனித்துவிட்டார்.

 அவர் அருகே சென்று, வணக்கம் சொன்னார்.

 அவரோ, இங்கர்சாலின் கால்களில் விழுந்து அழுதார்.

 அவருக்கு ஆறுதல் சொல்லி, உட்காரவைத்து,

" என்ன உதவி தேவைன்னு சொல்லுங்கள், முடிந்தால் செய்கிறேன்......" என்றார், இங்கர்சால்.

 " ஐயா! நான் கிராமத்திலிருந்து இங்கு வந்திருக்கிற விவசாயி. என் பேரு, முனுசாமி.

 பத்து நாள் முன்பு, இந்த ஊருக்கு என் பத்து வயசு பையனின் சிகிச்சைக்காக வந்திருந்தேன், அவனுக்கு இருதயத்திலே ஏதோ கோளாறாம், அறுவை சிகிச்சை செய்யணும், ரெண்டு லட்ச ரூபாய் கொண்டுவரச் சொன்னாங்க!

 அவ்வளவு பணத்துக்கு நான் எங்கே போவேன்?

 பிரமை பிடிச்சு நின்னுகிட்டிருந்தபோது, ஒருத்தர் வந்து ஆறுதலா, பேசினாரு.

 'கவலைப்படாதே! பணத்துக்கு நான் ஏற்பாடு பண்றேன், உன் மகனுக்கு குணமாகி, அவனோட நீ கிராமத்துக்கு திரும்பலாம், பத்து நாளிலேன்னு'

 சொல்லிட்டு என்னை வேற ஒரு டாக்டர்கிட்ட அழைத்துப்போனாரு, அவர் என் ரத்தம் எடுத்து பரிசோதனை பண்ணிட்டு, என்னை அழைத்துப் போனவரிடம் ஏதோ ரகசியமா சொன்னாரு. அப்புறம் என்னை இன்னொருத்தரிடம் அழைத்துப்போய் எதிலேயோ கைநாட்டு பண்ணச் சொன்னாரு. ஒரு நர்ஸ் வந்தாங்க.....

 அப்பத்தான் நான் அவரிடம் கேட்டேன்.

 ' ஐயா! பணம் வாங்கித் தரேன்னு சொல்லிட்டு, கூட்டிவந்தீங்க, வேற என்னென்னவோ நடக்குதே'ன்னு கேட்டேன்.

 அப்பத்தான் சொன்னாரு,

'யாரோ ஒருத்தருக்கு ரெண்டு சிறுநீரகமும் பழுதாயிடுத்தாம், உடனடியா வேற ஒருத்தருடைய சிறுநீரகத்தை மாற்றிப் பொருத்தினால், அவர் உயிர் பிழைப்பாரு,

 உனக்கு ரெண்டு சிறுநீரகம் இருக்குல்லே, ஒண்ணு போதும் எந்த மனிதனுக்கும், இன்னொண்ணை தானம் தரலாமாம், நீ தானமா தரவேண்டாம், உனக்கு தேவைப்படற

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.