(Reading time: 5 - 9 minutes)
Idhu namma naadunga
Idhu namma naadunga

பணத்தை அவர் தந்து உன் மகனை காப்பாற்றுவாரு, நீயோ அவருக்கு உன் சிறுநீரகத்தை தானம் பண்ணி அவர் உயிரை காப்பாற்றப் போறே'ன்னு சொன்னாரு.

 நானும் சம்மதித்ததும், அறுவை சிகிச்சை நடந்து மாற்றிப் பொருத்தி, அவரு பொழைச்சி, ஒரு வாரம் ஆயிடுத்து!

 நான், என்னுடன் வந்தவரை திருப்பித் திருப்பிக் கேட்டும், பணத்தை தரமாட்டேங்கறாரு....

 இதற்கு நடுவிலே, சிகிச்சையில்லாம என் மகன் செத்துப்போயிட்டான்.

 நான் கதறினதை பார்த்து பரிதாபம் கொண்ட ஒரு நர்ஸம்மா, என்னிடம் ரகசியமா சொன்னாங்க!

 ' முனுசாமி! உன்னை ஏமாத்திட்டான், உன்னை அழைத்து வந்தவன். அவன் ஒரு தரகன். அவனுக்கு இதே தொழில்.

 நீ சிறுநீரகம் தந்ததற்கு அவன் ஐந்து லட்ச ரூபாய் வாங்கிட்டான். இந்தப் பணத்திலே டாக்டர், நர்ஸ், சிப்பந்தி, போலீஸ் எல்லாருக்கும் பங்கு உண்டாம். அதனாலே, உன்னை ஏமாத்தின அவனை உன்னாலே, ஒண்ணும் செய்ய முடியாது.

 நீயோ உறுப்பையும் இழந்துட்டே, பெத்த புள்ளையையும் பறி கொடுத்துட்டே! இப்படி அந்த தரகர் படிக்காதவங்க நிறையபேரை ஏமாத்தியிருக்கான்,

 உனக்காக நான் அவனுடத்திலே பேசிப் பார்க்கிறேன்'னு சொன்னாங்க!

 கடைசியா, இப்ப அவன் என்னை, 'உறுப்புதானம் பண்ண சம்மதிக்கிற ஒருத்தரை அழைத்துவா! உனக்கு ஏதோ பணம் தரேன், ஊருக்கு போகலாம்'னு சமாதானப்படுத்தியிருக்கான்.

 நானும் நாலுநாளா தானம் செய்ய ஒரு ஆளை தேடிக்கிட்டு இருக்கேன், அப்பத்தான் உங்களை பார்த்தேன்......."

 இங்கர்சால் அவனை உட்கார்த்தி வைத்துவிட்டு, அங்கிருந்தவர்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக வசூலித்து கிடைத்த பணத்தை அந்த கிராமத்தானிடம் கொடுத்து அவனை ஊர் திரும்பச் சொன்னார்.

 பிறகு, அங்கிருந்த டாக்டர்கள், நர்ஸ்கள், ஆபீஸிலே வேலை செய்கிறவர்கள், எல்லாரிடமும் விசாரித்ததில், அந்த நர்ஸ் சொன்னது உண்மைதான் என ஊர்ஜிதமாகியது.

 " அடப் பாவிகளா! உங்களுக்கு மனசாட்சியே கிடையாதா?" என பெருமூச்சு விட்டார்.

 " என்னய்யா இதற்கே பெருமூச்சா? மற்றதையும் தெரிஞ்சிகிட்டு பெரீ.........ய மூச்சா விடுய்யா! இங்கே சாதாரண தலைவலி, வயிற்றுவலிக்கு வந்தால்கூட, எக்ஸ்ரே, ஸ்கேனிங், ரத்த பரிசோதனைன்னு சொல்லி கையிலே இருக்கிற பணத்தை கறந்துடுவாங்க! இதெல்லாம்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.