(Reading time: 5 - 10 minutes)
Gayathri manthirathai
Gayathri manthirathai

தொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 30 - ஜெய்

ம்மா நல்லாத் தெரியும் இல்லை... மூணு பேரும் இங்கதான் இருக்காங்களா....”

“confirm பண்ணிட்டுதான் சக்தி வந்தேன்.... அவங்க இங்க வந்து அரை மணி நேரம் ஆகுது....”

“ஹ்ம்ம் நீங்க வர்றது அவங்களுக்கு தெரியுமா...”

“இல்லைடா தெரியாது.... மகளிர் விழாக்கு இங்க ஹால் புக் பண்ண இப்போ நாம வந்திருக்கோம்... நல்லா நியாபகம் வச்சுக்கோ...”

சக்தியும், அவன் அன்னையும் பேசியபடியே அந்த கிளப்பின் உள்ளே நுழைந்தார்கள்.... இவர்கள் அங்கிருந்த வரவேற்பு மேசை நோக்கி நகர, சக்தி எதிர்பார்த்த மூவரும் உள்ளிருந்து வெளியில் வந்தார்கள்...

“அடடே சார்... உங்க மூணு பேரையும் இங்க பார்ப்பேன்னு எதிர்பார்க்கவேயில்லை.... உங்களுக்கு போன் பண்ணிட்டு உங்களை பார்க்க வரணும்ன்னு நினைச்சுட்டே இருந்தேன்....”, அடடே என்ன ஒரு நடிப்பு என்று தன் அன்னையைப் பார்த்தான் சக்தி....

“வணக்கம் மேடம்... எப்படி இருக்கீங்க.... ஏதாவது அவசர வேலையா...”

“இல்லை சார்... எங்க ஆஸ்ரமம் விஷயமா உங்கக்கிட்ட பேசணும்....”

“வாங்க மேடம்... நாம அப்படி உள்ள போய் உக்கார்ந்து பேசலாம்... சக்தி எப்படி இருக்கேப்பா....  படிப்பெல்லாம் எப்படி போகுது...”

“நல்லா இருக்கேன் சார்... final year சார்... நல்லா போகுது....”

மூவரும் பேசியபடியே உள்சென்று ஒரு மேஜையில் அமர்ந்தனர்...

“சொல்லுங்க மேடம்... என்ன விஷயம்....”

“சார் எங்க ஆஸ்ரமத்துல இருக்கற குழந்தைங்க செஞ்ச ப்ரொஜெக்ட்ஸ் எல்லாம் ஒரு கண்காட்சி மாதிரி வைக்க போறோம்... அதுல நீங்க மூணு பேரும் வந்து கலந்துக்கிட்டீங்கன்னா நல்லா இருக்கும்... குழந்தைங்க சந்தோஷப்படுவாங்க....”

“மூணு பேரும் வர்றது கஷ்டம்  மேடம்...  யாராவது ஒருத்தர் கண்டிப்பா வரோம்... என்னைக்கு ப்ரோக்ராம் வச்சிருக்கீங்க....”

“சார் கண்காட்சி இந்த மாத கடைசி வாரம் நடக்குது... வாரம் முழுக்க கண்காட்சி இருக்கும்... உங்களால என்னைக்கு வரமுடியும்ன்னு சொன்னீங்கன்னா அன்னைக்கு விழா நடக்க ஏற்பாடு பண்ணிடுவோம்...”

“என்னப்பா யாரு போகலாம்...”, மூவரும் சிறிது நேரம் கலந்து ஆலோசித்தனர்...

“மேடம் பத்ரி வருவார்... கண்காட்சியோட கடைசி நாள் அன்னைக்கு விழா வச்சுக்கோங்க...”

“ரொம்ப நன்றி பத்ரி சார்... அடுத்த வாரத்துல பத்திரிகை அடிச்சுட்டு உங்களை வந்து பார்க்கிறேன்...”

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.