Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 4.17 (6 Votes)
மனம் விரும்புதே உன்னை... - 26 - 4.2 out of 5 based on 6 votes

26. மனம் விரும்புதே உன்னை... - Aadhi

manam virumbuthe unnai

சுற்றி இருந்த கலகலப்பு எதுவும் இந்துவின் கருத்தில் பதியவே இல்லை. சில நாட்களாக பழக்கமாகி விட்டிருந்த புன்னகையோடு அவள் மனம் வேறு குழப்பங்களில் உழன்றுக் கொண்டிருந்தது. காலை வரை சரவணன் அர்ச்சனா தம்பதியினரின் மகளாக இருந்தவள், சஞ்சீவின் மனைவி என்னும் புது பதவியை பெற்றிருக்கிறாள். அதன் கூடவே வரும் கடமைகளையும், சஞ்சீவின் நிபந்தனைகளை அவள் பின்பற்றுவதால் ஏற்படக் கூடும் மன வருத்தங்களையும் எண்ணி அவள் மனம் சஞ்சலப் படுத்திக் கொண்டிருந்தது.

"ஹலோ இந்து என்ன பேசவே மாட்டேங்குற? இப்படி தலையை குனிஞ்சு உட்கார்ந்திருந்தா அதுக்கு பேர் வெட்கமா?" என்றாள் கீதா.

"அட போங்க அக்கா நீங்க வேற... அவளே எப்போதுடா இவங்க ரெண்டு பேரும் இங்கே இருந்து கிளம்புவாங்க சஞ்சுசுசுசு.. வருவாருன்னு வெயிட் செய்துட்டு இருக்கா...."

இந்து நிமிர்ந்து வீணாவை முறைத்தாள்.

"அட பரவாயில்லையே புது பொண்ணுக்கு இன்னமும் முறைக்க கூட தெரியுதே.... ஆனால் இப்போ எதற்கு இந்த பார்வை?"

"வேற என்ன வீணா இந்துவோட சஞ்சீவை நீ இப்படி செல்லமா கூப்பிட்டால் எப்படி? அது தான் அவங்களுக்கு கோபம்..."

இந்து ஒன்றும் சொல்லாது அமைதியாக இருந்தாள்.

"அடடா இந்து இதுக்கா கோபம்... நியாயபடி பார்த்தால் சஞ்சீவ் மேல தான் உனக்கு கோபம் வரணும்? இங்கே வந்த பிறகு உன்னை இப்படி எங்க கூட தனியா விட்டுட்டு அவர் பாட்டுக்கு மாடிக்கு போயிட்டார்...."

"அது அப்படி இல்லை வீணா... சஞ்சீவ் இந்துவிற்க்காக மாடியில் ஸ்பெஷலா நிறைய வேலை செஞ்சு வச்சிருக்கார்.... அவர் ரூமை ரீமாடல் செய்து புதுசா ரூம் எல்லாம் கட்டி என்ன என்னவோ செய்து வைத்திருக்கிறார்..."

"ஏன் அக்கா என்னென்னவோன்னா உங்களுக்கு தெரியாதா?"

"ஹுஹும்.... எனக்கு மட்டும் இல்லை இங்கே வீட்டில் யாருக்கும் தெரியாது... அவரே தான் சூப்பர்வைசிங் வேலை செய்ததும்.... அத்தையும் அவர் விருப்பம் போல இருக்கட்டும்னு விட்டுட்டாங்க...."

கீதா சொல்வதை ஆர்வத்துடன் கவனித்துக் கொண்டிருந்த இந்துவை பார்த்த வீணா,
"இந்து உனக்காக சஞ்சீவ் மினி வசந்த மாளிகை கட்டி வச்சிருக்கார் போலும்.... என்ஜாய் என்ஜாய்...." என்றாள்.

இந்துவின் முகத்தில் முதன் முறையாக நிஜமாகவே புன்னகை மலர்ந்தது.

"வசந்த மாளிகை மட்டுமா பயங்கரமான மிஸ்ட்ரி மாளிகையும் தான்... அலங்காரம் செய்ய கூா யாருக்கும் அனுமதி இல்லை... ஒன்லி இந்து மேடம் தான் அலவுட்னு சார் தெளிவா சொல்லிட்டார்..."

அப்படி என்ன ரகசியம்? இது வேறு ஏதோ விஷயம் என்று இந்துவிற்கு தோன்றியது.

ருவழியாக கேலி கிண்டல், அலங்காரம் எல்லாம் முடிந்து இந்து சஞ்சீவின் அறையை அடைய இரவு வெகு நேரமானது. அறையினுள் வந்து பார்த்தவளை சினிமாவில் வருவது போல் வரவேற்க அவளின் கணவன் காத்துக் கொண்டிருக்கவில்லை. அவன் எங்கே இருக்கிறான் என்றே அவளுக்கு புலப் படவில்லை. என்ன செய்வது என்று புரியாது நின்றவள், வலது பக்கம் ஏதோ அரவம் உணர்ந்து திரும்பினாள். சஞ்சீவ் அங்கே இருந்த பால்கனியில் இருந்து உள்ளே வந்துக் கொண்டிருந்தான்.

நேராக அவளருகில் வந்தவன்,
"நான் சொன்னது எல்லாம் ஞாபகம் இருக்கு தானே?" என்றான்.

எந்த வித உணர்ச்சியும் இல்லாது கேட்கப்பட்ட அந்த கேள்விக்கு அவனை நேராக பார்த்து ஆமெனும் அர்த்தத்தில் தலை அசைத்தாள் இந்து.

"குட்....இந்த பக்கம் இருக்கும் ரூம் உன்னுடையது... சினிமாவில் கதையில் வருவது போல் ஒரே ரூமில் தங்கி இருந்தால் எனக்கு ப்ரைவசி இருக்காதுல... அதுக்காக தான் இந்த தனி ரூம்.. அதிலேயே எல்லா வசதிகளும் இருக்கு.... ஏதாவது பேசணும்னா... ரெண்டு ரூமுக்கு பொதுவா இருக்கும் இந்த இடத்தில் இருந்து பேசலாம்.... எந்த காரணத்திற்காகவும் நீ என் ரூம் உள்ள வர கூடாது..."

ஏதோ புதிதாக விடுதியில் தங்க வந்த பெண்ணிடம் விளக்கம் சொல்லும் வார்டன் போல் அவன் பேசவும் இந்துவின் மனதில் இருந்த இறுக்கம் சற்றே குறைந்தது. அவனுக்கு மட்டும் கோபம் இல்லையே, அவளுக்கும் கூட தான் அவனிடம் கேட்டு தெரிந்துக் கொள்ள விஷயங்கள் இருக்கிறது...

"உங்கள் வீட்டில் இருந்து எடுத்து வந்த பெட்டி எல்லாம் உன் ரூமில் வைத்திருக்கிறேன்..."

மீண்டும் சரி என்று தலை அசைத்து விட்டு, எதுவும் பேசாது, அவன் சுட்டி காட்டிய பக்கம் இருந்த அறைக்குள் சென்றாள் இந்து. உள்ளே வந்து கதவை சாத்தியவள் ஏதோ தோன்றவும் கதவில் இருந்த ஆட்டோ லாக்கை உபயோகித்து கதவை பூட்டினாள். சஞ்சீவ் சொன்னது போல் அறை நன்றாக தான் இருந்தது... சற்றே சிறியது என்ற போதும், ஒருவர் தங்குவதற்கு வசதியாக கட்டப் பட்டிருந்தது. இந்த் அளவிற்கு திட்டம் தீட்டி அறையை கட்டியவன், நிஜமாகவே வாழ்க்கை முழுவதும் இப்படியே இருக்க விரும்பிகிறானா? இந்த கேள்வியின் தாக்கத்தில் அவளுக்கு மனதில் வலித்தது.

ன்றும் இல்லாத சிறிய விஷயத்தை அவன் ஏன் இப்படி பூதாகரமாக்குகிறான் என்று அவளுக்கு புரியவில்லை. உண்மையில் அவனுடைய கோபம் அவனுடைய அன்னை சொன்னதை பற்றி இல்லை, அதை அவள் அவனிடம் சொல்லாது வீணாவிடம் சொல்லியதாக அவன் நினைத்துக் கொண்டிருப்பது தான் என்று தோன்றியது. எல்லாம் சரி ஆகி விடும். சஞ்சீவ் கட்டாயம் அவளை விரைவில் புரிந்துக் கொள்வான்...

இந்த எண்ணம் தோன்றிய உடனேயே, அப்புறம்.....எல்லாஆஆஆஅம் சரியான பின்,  இந்த அறையை என்ன செய்வது என்ற கேள்வி எழுந்தது. ரொம்ப முக்கியமான விஷயம் தான் என்று அவளின் எண்ண ஓட்டத்தை குறித்து அவளுக்கே சிரிப்பும் வந்தது!

பெட்டிகளில் இருந்த துணிகளை பொறுமையாக எடுத்து அங்கே இருந்த வார்ட்ரோபில் அடுக்கி விட்டு, தூங்க சென்றாள் இந்து. தூக்கம் உடனே வரவில்லை... ஆனால் கடந்த சில நாட்கள் போல் மனதை அழுத்திய பாரமும் இல்லை... ஏனோ, சஞ்சீவின் மனதை மாற்றி விடலாம் என்ற ஒரு நம்பிக்கை பிறந்திருந்தது. அவன் அன்று காலையில் கட்டிய தாலியை  கைகளில் தொட்டு பார்த்தாள்... ஏனோ மெய் சிலிர்த்தது...

 

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# alljones 2013-07-20 10:27
manam virumputhe unnai
Reply | Reply with quote | Quote
+1 # MVUManam Virumbuthey un 2013-02-21 07:34
eagerly waiting for the next episode aadi,,,,,,,,,,, :cry:
Reply | Reply with quote | Quote
+1 # Manam Virumbuthey unnaiShri 2013-02-21 00:41
I have to wait ah ? its interesting cant wait until next update so eager :sad:
Reply | Reply with quote | Quote
+1 # RE: மனம் விரும்புதே உன்னை... - 26Ponni 2013-02-20 13:04
Hi adhi,

Your story going really well...
I read all the updates at the same time...
I like most of your situation songs...
Waiting for your update
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 26Thenmozhi 2013-02-21 00:56
Thanks Ponni :-)
Reply | Reply with quote | Quote
# Manam virumbuthey unnaiSathyapriya 2013-02-20 10:41
Hi Aadhi. I like tis story :-) nice going when will you update next part. Eagerly am waiting .
Reply | Reply with quote | Quote
# RE: Manam virumbuthey unnaiThenmozhi 2013-02-21 00:55
Thanks Sathyapriya :-) Episode 27 is on its way :-)
Reply | Reply with quote | Quote
# storyAnu_sha 2013-02-20 08:47
Hi Aadhi,
Hw r u dear??
Superp story so sweet... carry on..
I luv it dear.....
Reply | Reply with quote | Quote
-1 # RE: storyThenmozhi 2013-02-21 00:54
Thanks Anusha :-)
Reply | Reply with quote | Quote
+1 # மனம் விரும்புதே உன்னைPriya valar 2013-02-19 17:45
My life is going like this friends circle but we are single now. we expect to get like this mother-in-law. :eek: i like very much sanjeev character. Vena's character is also like my friend jothi.
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னைThenmozhi 2013-02-21 00:53
:eek:
Reply | Reply with quote | Quote
+1 # RE: மனம் விரும்புதே உன்னை... - 26harithaa 2013-02-18 17:49
next part when sir....we are eagerly waiting
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 26Thenmozhi 2013-02-21 00:52
Harithaa, no sir, onky madam :-)

Next episode should be here very soon!
Reply | Reply with quote | Quote
+1 # RE: மனம் விரும்புதே உன்னை... - 26mala 2013-02-16 15:26
hi aaadhi
next upate eppopa
ungaludaiya story ippothuthan padiththen,
super ma
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 26Thenmozhi 2013-02-21 00:51
Thanks a lot Mala :-)

Next update should be online in another few hours :-)
Reply | Reply with quote | Quote
+1 # manam virumputhe unnai-26natrayan.R 2013-02-15 10:40
manam virumputhe unnai-27 eppa varum i am waiting
Reply | Reply with quote | Quote
+1 # RE: manam virumputhe unnai-26Admin 2013-02-16 12:07
Hi,
Aadhi kadaisi pakkathil solli iruppathu pol, 21st andru adutha paguthi veliyaagum
Reply | Reply with quote | Quote
+1 # 26natrayan 2013-02-14 15:25
I like your story
Reply | Reply with quote | Quote
+1 # 26natrayan 2013-02-14 15:24
story sup :-) er...
Reply | Reply with quote | Quote
# RE: 26Thenmozhi 2013-02-21 00:50
Thanks Natrayan :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: மனம் விரும்புதே உன்னை... - 26shilpy 2013-02-14 11:10
super pa :-)
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 26Thenmozhi 2013-02-21 00:50
Thanks Shilpa :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: மனம் விரும்புதே உன்னை... - 26vadhana 2013-02-13 22:44
very nice update. :-) going good. let to go like this. dont make them to fight
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 26Thenmozhi 2013-02-21 00:49
Sure Vadhana :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: மனம் விரும்புதே உன்னை... - 26Admin 2013-02-13 20:53
super update madam aanal sanjeev react seiyum logic puriyalai... ;-)
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 26Thenmozhi 2013-02-21 00:48
:lol:
Reply | Reply with quote | Quote
+1 # RE: மனம் விரும்புதே உன்னை... - 26Sasireka 2013-02-12 23:04
chance-y illa.story is moving smoothly. super aadhi.:) :-)
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 26Thenmozhi 2013-02-21 00:47
Thanks Sasireka :-)
Reply | Reply with quote | Quote
+1 # MVUSKARTHIKEYANSHAN 2013-02-12 17:46
Hai Adhi sir,

Story super. 27 part eppo varum. waiting.....

Karthik
Reply | Reply with quote | Quote
# RE: MVUThenmozhi 2013-02-21 00:46
Thanks Karthuk! Next episode should be updated in another few hours :-)
Reply | Reply with quote | Quote
+1 # hai aathi sirkauvery 2013-02-12 15:15
manam virumbuthe unnai story really veri nice... Keep it up... Next updateku wait panikitu iruken...
Reply | Reply with quote | Quote
# RE: hai aathi sirThenmozhi 2013-02-21 00:45
Thanks Kauvery! Next episode is on its way! :-)
Reply | Reply with quote | Quote
-1 # mvuiniyaa 2013-02-12 10:43
Sanjeev reaction konjam too much aadhi.next episode indhu sanjeev mela koba patta nalla irukum aadhi
Reply | Reply with quote | Quote
# RE: mvuThenmozhi 2013-02-21 00:44
Sure will keep in mind Iniyaa :-)
Reply | Reply with quote | Quote
+1 # Super..MAGI.S 2013-02-11 18:54
Hi Athi,

thanks a lot for the update...ur story really super... :lol:
Reply | Reply with quote | Quote
# RE: Super..Thenmozhi 2013-02-21 00:44
Thanks Magi :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: மனம் விரும்புதே உன்னை... - 26Ramya Balaji 2013-02-11 15:48
Hi Aadhi
Thanks.. Indhuva sirika vachathukuku..
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 26Thenmozhi 2013-02-21 00:43
:roll:
Reply | Reply with quote | Quote
+2 # RE: மனம் விரும்புதே உன்னை... - 26shanmugapriya 2013-02-10 14:34
hi aathi,
story is very superp,nice update. roma nalaiku appuram indhu sirithathu nalla irukku.thanks.
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 26Thenmozhi 2013-02-21 00:43
Thanks Shanugapriya :-)
Reply | Reply with quote | Quote
+1 # manam virumbuthey unnaimalathimarianandan 2013-02-10 12:11
Hi Aadhi,

Manasula indhu mela ivvalavu aasai vaiththirukkinraai sanjai. Appuram yen kobamaga iruppathu pola nadikkinraai sanjai.
Too baddddddddddddd........................ 8)
Reply | Reply with quote | Quote
# RE: manam virumbuthey unnaiThenmozhi 2013-02-21 00:42
Hero'la Malathi athu thaan konjam bandha :-)
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

 

Go to top