(Reading time: 5 - 10 minutes)
Nalla Mudivu
Nalla Mudivu

இல்லேன்னா, இந்தக் கேள்வியை என்னிடமே நேரிடையா கேட்பீங்களா? ஒண்ணு பண்ணுங்க, ஒரு டெஸ்ட் பண்ணுங்க! அதிலே நான் எப்படிப்பட்டவன்னு நீங்க நேரிடையா தெரிஞ்சுப்பீங்க!"

 " ஓ.கே. ஓ.கே. உன்னை நம்பறேன்.....இப்ப கொஞ்சம் அவசரமா வேற ஒருத்தரிடம் பேசணும், வச்சிட்டமா?"

 " சரி, தலைவா!" நிரஞ்சனுக்கு இந்தமாதிரி 'தலைவா' ன்னு முகஸ்துதி பண்றவன், பாம்பா பழுதா? ன்னு சந்தேகம்.

   " அப்பா! யாரிவர்? அரசியல்வாதி மாதிரி உன்னை 'தலைவா!'ன்னு கூப்பிடறாரு?"

  " அவர் வேறு யாரும் இல்லே, நம்ம எதிர் பிளாட் ஏகாம்பரம்தான்! அவரு ஏதோ திட்டம் போட்டுத்தான் இப்படி பேசறாருன்னு எனக்கு புரியுது, ஆனா எப்படி அவரை கழற்றிவிடறது?"

  " நாய்க்கு எலும்புத் துண்டு போடறமாதிரி, போகப் போக ஏதாவது போட்டு அவரை நம்ம வழிக்கு மடக்கிடுவோம்....."

  " ஐயையோ! அதுதான் டேஞ்சர்! அவங்கள்ளாம் நம்மை ப்ளாக்மெயில் பண்ணி அசலுக்கே வேட்டு வைச்சு நசுக்கிடுவாங்க! ஒரு வழி, யோசனை பண்ணி, கண்டு பிடிப்போம்......"

" சரிப்பா! பிரபாவுக்கு போன் பண்ணுங்க!"

நிரஞ்சன் புரோக்கர் பிரபாவுக்கு போன் செய்தார்.

 " பிரபா! குட் நியூஸ்! மீட்டிங் போட்டு மற்ற ஓனர்களை நம்ம வழிக்கு கொண்டு வந்துட்டேன். நீ உடனே நேரில் வந்து பார்!"

 பிரபாவை பேசவிடாமல் போனை கட் பண்ணினார்.

  சிறிது நேரத்தில், பிரபா வந்தான்.

" ரொம்ப குஷியா? எல்லாரும் ஒத்துக்கிட்டது பெரிய வெற்றி! மேலே நான் பார்த்துக்கறேன், கவலையை விடுங்க!"

  " பிரபா! இனிமே எது செய்தாலும், நாம ரெண்டு பேரும் சேர்ந்துதான் செய்யப் போறோம், முதல்லே அந்த வியாபாரி யாருன்னு எனக்குச் சொல்லு. ஆனா அதை மற்ற ஓனர்களுக்கு இப்ப சொல்லமாட்டேன்."

 " அவரு, திருச்சியிலே ஏ.ஆர்.சி. நகைக்கடை ஓனர் ரத்தினம் செட்டியார்! நல்ல வியாபாரம் பல வருஷமா! நூறு கோடிக்கு மேலே சொத்து இருக்கும். மதுரை யிலே ஒரு கிளை இருக்கு!"

 " வெரி குட்! உடனே அவருக்கு போன் பண்ணி நாளைக்கு நாம் அவரை மீட் பண்ண வரலாமான்னு கேள்!"

" ஐயையோ! காரியத்தை கெடுத்தீங்களே! அவரு பெரிய மனுஷன்! அவருடன் நான் எப்படி போனிலே பேச முடியும்? அவர் கடையிலே வேலை செய்கிற மேனேஜர் சாம்புவிடம் பேசி,

6 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.