நிரஞ்சன் முதல் வேலையாக மற்ற ஓனர்களுக்கு நடந்ததை தெரிவித்தார். " நமது மனையை வாங்கிக் கொள்ள விருப்பம் தெரிவித்த நபர் 'பல்டி' அடித்துவிட்டார். அவருக்கு தி.நகர் உஸ்மான் ரோடில் பெரிய மனை இதே விலைக்கு கிடைத்துவிட்டது. நமக்கு இது பெரிய ஏமாற்றம் என்பதை ஏற்கிறேன். ஆனால் நம்பிக்கையை கைவிடாதீர்! எதிர்காலத்தில் இதைவிட சிறந்த விலை கிடைக்கலாம். எல்லா ஓனர்களும் முயற்சி செய்யுங்கள்!"
இதற்கு ஓனர்கள் பலர் பதிலே அளிக்கவில்லை. சில ஓனர்கள் நிரஞ்சனுக்கு நன்றி தெரிவித்ததோடு யோசனை ஒன்றையும் கூறினர். " இனிமேல் நமக்கு அருகில் உள்ள பெரிய கடை ஓனர்கள் தங்கள் கடைகளை விரிவு படுத்தவோ, தங்கள் ஊழியர் இருப்பிடத்துக்காகவோ, நம் மனையை வாங்க விரும்புவது சாத்தியமே! அந்த நோக்கில் நாம் கூட்டுமுயற்சி செய்யத் துவங்குவோம்." " இல்லாத ஆசையை தூண்டி இப்போது ஏமாற்றியது பெரிய குற்றம். இதற்கு தண்டனை தலைக்கு ஒண்ணரை கோடி வாங்கித்தர முயற்சி செய்து விரைவில்வெற்றி பெற எமது வாழ்த்துக்கள்!" " குடித்தனக்காரனுக்கு காலி பண்ணச்சொல்லி முன்பணம் திருப்பித் தந்துவிட்டேனே, இப்போது என்ன செய்வது?"
'கிணறு வெட்ட பூதம் புறப்பட்ட' கதையாகிவிட்ட நிலையை நினைத்து, நிரஞ்சன் வருந்தினார்.
உருப்படியாக யோசனை சொன்னான், சேகர்! " அப்பா! முதல் காரியமா, பட்டா வாங்குகிற வேலையை கவனிக்கணும். எப்போது விற்க முனைந்தாலும், பட்டா நிச்சயம் தேவை! ஏன்னா, புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டியிருப்போமோ என்ற சந்தேகம் எழுவது இயற்கை!"
" சேகர் சொல்றது, கரெக்ட்! பட்டா வாங்குகிற வேலையை மற்ற ஓனர்களின் பொறுப்பாக்கி விடுங்கள். இந்த சங்கத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர், வேலைக்காரன் எல்லாமே நீங்க ஒருத்தர்! மற்றவங்க, மாதாமாதம் வாடகையைப் பெற்றுக்கொண்டு ஜாலியா இருக்காங்க! பட்டா வாங்க, மனையை வாங்கறவனை தேடிப்பிடிக்க, பேரம் பேச, மற்றவங்களிடம் பொறுப்பை கொடுங்க! செய்தால், பலன் எல்லார்க்கும் கிட்டும். நமக்கு ஒன்றும், உடனடியா பிளாட் விற்கணுங்கிற அவசியமில்லே புரிஞ்சிதா?"
நிரஞ்சன் கலாவின் யோசனையை ஏற்று, உடனே அதை செயல்படுத்த ஒரு சுற்றறிக்கை தயார் செய்து அனுப்பினார்.
கலாவின் யோசனை, வேறொரு காரணத்துக்காக நிரஞ்சனால் ஏற்கப்பட்டு உடனடியாக செயற்படுத்தப் பட்டது.
மறுபடியும் புரோக்கர் சொல்கிற தவறான வழியில் அதிகப் பணம் பெறுகிற தவறு தான் செய்ய, வாய்ப்புக்கள் இருக்காது என்பதே!
சுற்றறிக்கை அனுப்பிய பிறகு எந்த ஓனரும் வாயைத் திறக்கவில்லை! அவரவர் வேலைகளே
Look forward to see what happens next.
Thank you and have a great day.