(Reading time: 6 - 11 minutes)
Thoora theriyum megam
Thoora theriyum megam

“ஏய்...நீ யாருடி என்னைய வீட்டுக்குள்ளார போய்க் கத்தச் சொல்றதுக்கு?...இது என் வீடு...நான் எங்க வேணாலும் நின்னு கத்துவேன்...அதைக் கேட்கற அதிகாரம் இங்க யாருக்கும் இல்லை!”

“எங்களுக்குத் தொந்தரவா இல்லாத வரைக்கும் நாங்களும் கேட்க மாட்டோம்...தொந்தரவுன்னு ஆயிட்டா கேட்காம இருக்க மாட்டோம்!...அது எங்க உரிமை!”

“தொந்தரவா இருக்குன்னா...ஏன் இங்க குடியிருக்கறே?...போக வேண்டியதுதானே வேற வீடு பார்த்துக்கிட்டு!” சம்பூர்ணம் இறுதியாய் அந்த அஸ்திரத்தை எடுத்து வீச,

தேவநாதன் ஓடி வந்து அர்ச்சனாவை அடக்கி வீட்டிற்குள் இழுத்து வருவார்.

“நீங்க ஏம்ப்பா அவளைக் கண்டு பயப்படறீங்க?...நாம் என்ன இங்க இலவசமாகவா குடியிருக்கோம்?...மாசமானா சொளைய வாடகையை எண்ணி வைக்கறோமல்ல?...அப்புறமென்ன பயம்?” தந்தையிடமும் வாதாடுவாள் அர்ச்சனா.

“அடியேய் இவளே!..இன்னிக்கு சிட்டில இந்த அளவுக்கு சௌகரியமான வீடு...இவ்வளவு குறைந்த வாடகைக்கு கிடைக்காதடி!...நீ வாய் விட்ட அது நமக்குத்தாண்டி நஷ்டம்!...”அர்ச்சனாவின் தாய் பார்வதி வந்து தங்களின் உண்மை நிலையை எடுத்திரைக்க,

முனகிக் கொண்டே சாந்தமாவாள் அர்ச்சனா. தான் பிளஸ்டூ படிக்கும் போது சம்பூர்ணம்மாவின் கத்தல் காரணமாகவே பல நாட்கள் படிக்க முடியாமல் புத்தகத்தை மூடி வைத்து விடுவதையும், அதன் காரணமாகவே அவளுடைய பிளஸ்டூ மதிப்பென் வெகுவாய்க் குறைந்து போய் விட்டதையும், மற்ற குடித்தனக்காரர்களிடம் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லிச் சொல்லிக் குமுறுவாள் அர்ச்சனா. “இந்தச் சனியனால என்னோட வாழ்க்கையே கெட்டுப் போச்சு தெரியுமா?”

ஒவ்வொரு முறை சுலோச்சனாவைப் பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வரும் போதெல்லாம், தேவநாதன் குடும்பத்தினர் அந்த மாப்பிள்ளை வீட்டாருக்கு பயப்படுகிறார்களோ இல்லையோ...இந்த சம்பூர்ணம்மாவை நினைத்து நினைத்து ஒவ்வொரு விநாடியும் அஞ்சுவர். எங்கே அவர்கள் வந்திருக்கும் நேரத்தில் இந்தப் பெண்மணி வேண்டுமென்றே ஏதாவது ஒரு காரணத்தைக் கையிலெடுத்துக் கொண்டு மாப்பிள்ளை வீட்டார் எதிரில் கத்திக் களேபரம் பண்ணி தங்களை அசிங்கப் படுத்தி விடுவாளோ? என்று நெருப்பின் மீது அமர்ந்திருப்பது போல் தவிப்புடன் இருப்பர்.

****

முந்தின நாள் முழுவதும் தேவநாதன் குடும்பத்தினர் எல்லோருமாய் உழைத்து, வாசலையும், முன் கூடத்தையும் ஓரளவிற்கு அழகு படுத்தி வைத்திருந்தனர்.

பக்கத்துப் போர்ஷன்காரர்களிடம் சென்று நாலைந்து பிளாஸ்டிக் சேர்களையும், ஒரு

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.