(Reading time: 11 - 22 minutes)
Priyamaanavale
Priyamaanavale

தொடர்கதை - பிரியமானவளே - 20 - அமுதினி

எனக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி
நீ ஒரு பௌர்னமி பௌர்னமி பேசும் பைங்கிளி

னது காரை அந்த மருத்துவமனையின் முன் நிறுத்திய ராம் உள்ளே இருந்த வரவேற்பறை பெண்ணிடம் சென்றான்.

"சார் சொல்லுங்க. உங்களுக்கு யாரை பாக்கணும்?" - அந்த பெண் பவ்யமாக கேட்க, "டாக்டர் அசோக்கை பார்க்கணும்" என்றான் ராம்.

"சார் அப்பாயின்மென்ட் இருக்கா? இல்லைனா கொஞ்ச நேரம் வெயிட் பண்ண வேண்டி வரும்" அந்த பெண் ராமின் பணக்கார தோரணையை கண்டு சொன்னாள்.

"நான் அசோக்குடைய பிரென்ட். பேரு ராம்.  நீங்க அசோக் கிட்ட இன்போர்ம் பண்ணிட்டு சொல்லுங்க. நான் வெயிட் பண்றேன்" என்றவன் அங்கிருந்த காத்திருப்போருக்கான இருக்கையில் அமர்ந்தான்.

அந்த வரவேற்பாளர் அங்கிருந்த டெலிபோனில் அஷொக்கை அழைத்து விவரத்தை சொன்னாள்.

"சார் நீங்க உள்ள போகலாம். நேரா போயி லெப்ட் டர்ன்ல செகண்ட் ரூம்" அந்த பெண் சொல்லவும் அவளுக்கு ஒரு நன்றியை தெரிவித்து விட்டு அந்த அறையை நோக்கி சென்றான்.

!அந்த அறையின் முன்னே அசோக்கின் பெயர் பலகை மாற்றப்பட்டிருந்தது. மெல்ல அந்த அறையின் கதவை தட்டியவன் அதன் கதவை திறந்தான்.

"ஹாய் ராம் வாட் எ சர்ப்ரைஸ்!!! சத்தியமா நீ வருவேன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. " எழுந்து சென்று அவனை கட்டிக்கொண்டான் அசோக்.

ஒரு புன்னகையுடன் "நைஸ் ஹாஸ்பிடல்" என்று சொன்னவனை ஆச்சர்யமாக பார்த்தான் அசோக்.

தன்னையே பார்த்து கொண்டிருப்பவனை கண்ட ராம், "உக்கார சொல்ல மாட்டியா?" எனவும் "சே...மறந்தே போய்ட்டேன். உக்காருடா..." என்றவன் அவன் எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்தான்.

சில நிமிடங்கள் எதுவும் பேசாமல் அங்கிருந்த பேப்பர் வெயிட்டை உருட்டி கொண்டிருந்தவனையே பார்த்து கொண்டிருந்த அசோக்கிற்கு ஆச்சர்யம் இன்னும் மறையவில்லை. அவனாக இவனை தேடி வந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. வந்தது மட்டும் இல்லாமல் அவனின் நடவடிக்கைகளிலும் சில மாறுதல்கள் தெரிந்தது. சில நிமிட யோசனைக்கு பின் அசோக்கை நோக்கி நேராக அமர்ந்தான் ராம்.

"அசோக், ரெண்டு முக்கியமான விஷயம் பேசறதுக்காக நான் இங்க வந்துருக்கேன்" ராம்

10 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.