(Reading time: 11 - 22 minutes)
Priyamaanavale
Priyamaanavale

நட்புடன் சிரித்து பேசுவதை சகிக்க முடியாமல் கோபம் கொண்டது, பரத் இலக்கியாவின் அவசர திருமண சூழ்நிலை என எல்லாவற்றையும் சொல்லி முடித்தான்.

"முட்டாள்!!!" அசோக் சொல்லவும் அதை ஆமோதிக்கும் விதமாக தலையசைத்த ராம் "உண்மை தான் டா. நான் ஒரு முட்டாள் தான். இவ்ளோ அருமையான பெண் எனக்கு மனைவியா இருந்தும் அவ அருமை புரியாம இவ்ளோ நாள் என்னுடைய ஈகோல வீணாக்கிருக்கேன்" ராம்  சொல்லவும் "நான் அதை சொல்லல. எந்த ஆம்பளையும் பழிவாங்கணும்னு ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டு அந்த பொண்ணு வாழ்க்கையோட அவனுடைய வாழ்க்கையையும் நாசமாக்க மாட்டான். நீ அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டது கோபத்துல இல்லை. அவ மேல இருக்கற காதலால. அவளை மறுபடியும் பார்த்தப்போ உன் மனசு அவ பக்கம் சாய்ஞ்சிருச்சு. அதுக்கும் அவ மேல கோவப்பட்டுருக்க. நான் தமிழோட சிரிச்சு பேசுனப்போ பொறாமைல உனக்கு என் மேலயும் தமிழ் மேலயும் கோபம் வந்துருக்கு. சந்தர்பப் சூழ்நிலையால் தமிழை கல்யாணம் பண்ணிக்க வாய்ப்பு வந்தப்போ அந்த வாய்ப்பை இழக்க மனம் இல்லாம அதுக்கு கோபம், பழி வாங்கும் படலம்னு நீயே ஒரு பேரை வெச்சுக்கிட்டு உன்னையே நீ ஏமாத்திட்டு இருக்க...அவளை உண்மையாவே பழி வாங்கணும்னு நெனைச்சிருந்தா பரத்துக்கும் இலக்கியாவுக்கும் நடக்க இருந்த கல்யாணத்தை நிறுத்தி இருந்தாலே போதும். அதை பண்ணல நீ. அதுக்கு பதிலா தமிழை கல்யாணம் பண்ணிக்கற ஆப்ஷனை சூஸ் பண்ணிருக்க. உன் மனசு உனக்கே புரியல. அதனால தான் முட்டாள்னு சொன்னேன்" அசோக் சொல்லி முடிக்க ஓடி சென்று அவனை கட்டி கொண்டான் ராம்.

"தேங்க்ஸ் டா மச்சான். என்னுடைய குழப்பத்தை தீர்த்தத்துக்கு" ராமின் உற்சாகத்தில் சிரித்த அசோக் "டேய் இது ஹாஸ்பிடல். கொஞ்சம் அந்த பக்கமா உக்காரு. யாரவது பார்த்தா நம்மை தப்பா நெனைக்க போறாங்க" என்றான் சிரித்தபடி.

மீண்டும் தன்னுடைய இருக்கையில் வந்து அமர்ந்த ராமை பார்த்த அசோக், "சோ என்கிட்டே மன்னிப்பு கேக்க வந்தது முதல் விஷயம்.ஹ்ம்ம்...உனக்காக இல்லைனாலும் தமிழுக்காக உன்னை மண்ணிக்கறேன். அடுத்த விஷயம் என்ன? " அசோக் கேட்க, ராம் தன்னுடைய அடுத்த முக்கியமான விஷயம் என்ன என்பதை சொல்லவும் அசோக்கின் முகம் நண்பனை கண்டு பெருமிதத்தில் ஒளிர்ந்தது.

"ராம், உண்மையாவே உன் லைப்ல நீ பண்ண போற மிகப்பெரிய நல்ல விஷயம் இதுவா இருக்கும். இது ரொம்ப பெரிய விஷயம். பட் இதுக்கு என்னுடைய முழு சப்போர்ட் இருக்கும். நீ தைரியமா தொடங்கு, இதுக்கு வேணும்ங்கற எல்லாம் சப்போர்ட்டும் நான் தரேன்" என்ற அசோக்கை பார்த்த ராம் "எவ்வளவு நல்ல நண்பனை இத்தனை நாள் ஒதுக்கி வைத்திருந்திருக்கிறோம்" என்று தன்னை தானே நொந்து கொண்டான்.

10 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.