கார்கள் இரு பக்கமும் பரபரப்பாக பறந்துக் கொண்டிருந்த தேசிய நெடுஞ்சாலையில் ஓரம் நின்றுக் கொண்டிருந்தான் பிரணய். எத்தனை திட்டம் போட்டாலும், எவ்வளவு அறிவாளியாக இருந்தாலும், சிறிதளவு அதிர்ஷ்டம் இல்லாமல் எதுவும் நடக்காது என்பது பிரணய்க்கு தெரியும். அவன் போட்டிருக்கும் திட்டம் வெற்றிப் பெற அந்த அதிர்ஷ்டம் கொஞ்சம் தேவை.
அவனுக்கு அந்த அதிர்ஷ்டம் இருக்கிறதா என்று இன்னும் சில நிமிடங்களில் தெரிந்து விடும். ஒரு வேளை இல்லாமல் போனாலும் கவலை இல்லை. அவனின் மூளை ப்ளான் பி யை தயார் செய்து விடும்.
எந்த பரபரப்பும் இல்லாமல் அமைதியாக வேடிக்கைப் பார்த்து கொண்டு நின்றான். தூரத்தில் அவன் எதிர்பார்த்த க்லோவிங் எல்லோ நிற கார் தெரியவும் அவனிடம் மெல்லிய பரபரப்பு தொற்றிக் கொண்டது.
அமுதவள்ளியின் காரின் நிறம் அது. அதற்காக அது அமுதவள்ளி பயணம் செய்யும் காராக இருக்க வேண்டும் என்றில்லை. வேறு யாராவதாக கூட இருக்கலாம். ஆனால் அதற்கு வாய்ப்புகள் குறைவு. இது மிகவும் தனித்துவமான கலர். இதை அதிக பேர் விரும்ப மாட்டார்கள். ஆனால் அமுதவள்ளி எல்லோரையும் போல இல்லையே! காரின் நிறம் தொடங்கி எல்லாவற்றிலும் அவள் தனியாக தான் இருந்தாள்!
பிரணயையும் மீறி அவனின் மனதில் புது உற்சாகம் எழுந்தது.
அமுதவள்ளியை பற்றி யோசிக்கும் ஒவ்வொரு முறையும் இப்படி ஒரு உணர்வு வர தான் செய்கிறது!
மனதை அடக்கி செய்ய வந்திருந்த காரியத்தில் கவனத்தை செலுத்தினான்.
ஹைவேயில் வேகமாக செல்லும் இடம் என்றால் இவன் சாலை ஓரம் நிற்பது காரில் இருப்பவர்களின் கண்ணில் படுவது கடினம். அதற்காக தான் வளைவு இருக்கும் இடமாக பார்த்து தேர்வு செய்திருந்தான். கட்டாயம் இந்த இடத்தில் காரின் வேகம் குறையும். அமுதவள்ளி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் அவளின் கண்ணில் கட்டாயம் அவன் படுவான்.
அவள் தூங்காமல் இருக்க வேண்டும்! அல்லது மொபைல் லேப்டாப் என எதையாவது பார்த்துக் கொண்டிருக்க கூடாது. பார்ப்போம் அவனின் அதிர்ஷ்டம் அவனுக்கு உதவுகிறதா என்று!
ஆயிர கணக்கான எண்ணங்கள் நொடிகளில் ஓட பக்கத்தில் வந்துக் கொண்டிருந்த க்லோவிங் எல்லோ காரை கவனிக்காதது போல காட்டிக் கொண்டு அமைதியாக நின்றான்.
கார் அவனின் பக்கம் நெருங்கவும் அவனின் மனம் அதிகமாக படபடத்தது.
as always nayandhara pic dhool
Look forward to see their upcoming meets...
Thank you.