(Reading time: 11 - 21 minutes)
Unakkaagave uyir vazhgiren
Unakkaagave uyir vazhgiren

தொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 15 - ஜெபமலர்

குயிலியை தொடர்ந்து ஆசீர்வாதம் தாத்தாவும் குகைக்குள் சென்றார். அவரை சிறு கல்லின் மேல் அமர வைத்த குயிலி தன் கைப்பையை திறந்து மேக்கப் போட்டு விட்டாள்.

 என்ன செய்கிறாள் என்று புரியாமல் இருந்தாலும் அமைதியாக அமர்ந்து இருந்தார் ஆசீர்வாதம். தாத்தா... கொஞ்சம் நேரம் இங்கே இருங்கள், நான் இப்போது வருகிறேன் என்றவள் சிறிது நேரத்தில் குகையில் இருந்த மற்றொரு பகுதிக்குள் சென்றாள்.

 குயிலி வெளிவர அரை மணி நேரத்திற்கும் மேலாக பொறுமையாக காத்திருந்தார் ஆசிர்வாதம். நேரம் ஆக ஆக தாத்தாவிற்கு பொறுமை போய் பயம் வந்துவிட்டது. இவ்வளவு நேரமாகியும் ஏன் வரவில்லை என்று யோசித்தவர் குயிலி குயிலி என்றார்...

 பதிலுக்கு உள்ளிருந்து சத்தம் வராததால்,  உள்ளே சென்று பார்க்கலாம் என்று எழுந்து உள்ளே செல்ல முயற்சிக்க குகையினுள் இருந்து ஒரு வயதான பெண்மணி வெளியே வந்தாள். அவளைப் பார்த்ததும் ஆசீர்வாதம் தாத்தாவின் பயம் அதிகரித்தது.

 யார்... யார்... யார்... நீ? இங்கே என்ன செய்கிறாய். என் பேத்தி எங்கே என்றவர் குரல் பதட்டத்தில் நடுங்கியது. அந்த வயதானவளை தள்ளி விட்டு உள்ளே செல்ல முயற்சிக்க, தாத்தா நான்தான் குயிலி என்றாள்.

 சத்தம் குயிலியின் சத்தமாக இருந்தாலும் உருவம் வேறாக இருந்ததால் குழம்பிப் போய் நின்றார் ஆசிர்வாதம்.

தாத்தா... நம் எதிரிகள் நம்மை கண்டு பிடித்து விடக்கூடாது என்றுதான் இந்த திட்டம். பக்கத்தில் உள்ள பாட்டியிடம் பணம் கொடுத்து இந்த புடவை வாங்கிக் கொண்டேன். மற்றதெல்லாம் இந்த மாய பெட்டியின் மந்திரம் வேலை என்று கையிலிருந்த மேக்கப் பெட்டியை காட்டினாள். 

அதிசயமாய் அவளைப் பார்த்துக் கொண்டிருந்த ஆசீர்வாதம் தாத்தாவின் முகத்தில் குழப்பம் மேலோங்கி இருந்தது. அவரது முகத்தில் இருந்த குழப்பத்தை உணர்ந்த குயிலி உடனே ஒரு கண்ணாடியை எடுத்து ஆசீர்வாதம் முன்னால் நீட்டினாள் குயிலி.

கண்ணாடியில் தன் முகத்தை பார்த்த ஆசிர்வாதம், அட நான் கூட ஆளே மாறிப் போய்விட்டனே என்றார்.

தாத்தா நாம் கிளம்பலாம், விறகு பொறுக்க வந்தவர்கள் என்று சொல்லி தான் இங்கிருந்து தப்பிக்க வேண்டும். அதனால் இந்த குச்சியை தலையில் வைத்துக் கொள்ளுங்கள். பார்க்க பருமனாக தெரியும், ஆனால் வெயிட் இருக்காது. அதனால் இதை தலையில் வைத்துக்கொண்டு கிழக்கு பக்கமாக செல்வோம். அங்கு ஒரு கிராமம் இருக்கிறது. அந்த கிராமத்துக்கு சென்று விடலாம். அங்கிருந்து பஸ் ஏறி தேனிக்கு சென்று விடலாம் என்று

14 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.