(Reading time: 11 - 21 minutes)
Unakkaagave uyir vazhgiren
Unakkaagave uyir vazhgiren

எதிர்பார்த்த புத்தர் சிலையையும் கண்டு கொண்டாள்.

 அந்த ஓவியத்தைப் பாருங்கள் தாத்தா என்று சொல்ல ஓவியத்தை பார்த்து ஆசீர்வாதம் தாத்தா பிரமித்துப் போய்விட்டார். குறிப்பு தாளில் வரையப் பட்டிருந்தத அதே சிலையும் அதன் பக்கத்தில் அதேபோன்று மாலை வளர்ந்து கம்பீரமாய் காட்சி தந்து கொண்டிருந்தது.

 அதே நேரத்தில் சென்னையில்...

 ரெடி ஆகிட்டியா ராகவ்.... என்றாள் புஷ்பா.

 நான் ரெடி என்றவன் அறையில் இருந்து வெளியே வர அதே நேரத்தில் பிரதாபனும் தன் அறையிலிருந்து வெளியே வந்தார்.

 மூவரும் பேசிக் கொண்டே ஹாலுக்கு வர அங்கே புஷ்பாவின் தாயார் அமர்ந்து டிவி நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தாள்.

 அம்மா இன்னும் பார்த்து முடிக்கவில்லையா என்று புஷ்பா கேட்க, புஷ்பாவின் தாயோ தேனி மலை கோவில் நடக்கிற திருவிழா நேரடி ஒளிபரப்பு என்று சொல்ல பிரதாபன், ராகவ் இருவரின் கண்களும் டீவியின் மீது பதிந்தது.

டிவியை பார்த்த பிரதாபன் கண்கள் ஒரு நொடி கோபத்தில் சிவக்க மறுநொடி தன்னை இயல்பாக்கி கொண்டவராக ராகவ்வை திரும்பிப் பார்த்தார். அவனோ தன் பேக்கில் எதையோ வைத்துக் கொண்டிருந்தான்.

 அத்தை நாங்க மும்பைக்கு கிளம்புகிறோம் என்று பிரதாபனின் உதடுகள் உச்சரிக்க கண்களோ பார்வையாலே புஷ்பாவிடம் டிவியை அணைக்க கட்டளையிட்டது.

 ஒரு நொடியில் புஷ்பாவிற்கு கட்டளை புரிய அடுத்த நொடி டிவி அணைக்கப் பட்டு இருந்தது. அம்மா அவரும் ராகவ்வும் மும்பை கிளம்புகிறார்கள். வாங்க... ஏர்போர்ட்டுக்கு போய்விட்டு வரலாம் என்று தாயின் கையை இழுத்துக்கொண்டு புஷ்பா நடக்க அந்த அம்மாவும் ஒன்றும் புரியாமல் பின்னே நடந்தார்.

 அப்பா கொடுங்க... நான் லக்கேஜ் எடுத்து வருகிறேன் என்றவன் பிரதாபனின் லக்கேஜ் எடுத்துக் கொண்டு வெளியேறினான்.

 பின்னால் வந்த பிரதாபன், சத்யா அந்த குயிலி தேனி மலை கோவில் திருவிழாவில் இருக்கிறாள். நீ உடனே ஆட்களை அனுப்பு என்று டெக்ஸ்ட் மெசேஜ் செய்தான்.

ராகவ் காரில் வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க பிரதாபன் மனமோ உள்ளே தகிடதாம் ஆடிக்கொண்டிருந்தது.

 ஏர்போர்ட் வந்ததும் தன் மொபைலை மீண்டும் எடுத்துப் பார்த்தான் பிரதாபன்.

 அண்ணா.. ஆட்களை அனுப்பி விட்டேன் என்ற சத்யாவின் மெசேஜை பார்த்ததும் நிம்மதியுடன் பிளைட் ஏற உள்ளே சென்றான்.

14 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.