(Reading time: 11 - 21 minutes)
Unakkaagave uyir vazhgiren
Unakkaagave uyir vazhgiren

அந்த நேரத்தில் ஒரு பஸ் வர ஏறி ஒருவழியாக தேனி வந்து சேர்ந்தனர். அங்கிருந்து வழிகேட்டு பெரியகுளம் சென்றவர்கள் இனி அந்த டி.கள்ளிப்பட்டிக்கு எப்படி செல்ல வேண்டும் என்று தெரியவில்லையே என்று யோசித்தவர்கள்... அருகில் யாரிடமாவது கேட்கலாம் என்று சொல்லிக் கொண்டே அருகில் இருந்த ஒரு பெண்ணிடம் தன் குரலை வயதான பெண் போல மாற்றிக் கொண்டு பேசினாள் குயிலி.

அம்மா.... அம்மாடீ கள்ளிப்பட்டி போகிற பஸ் எப்போ வரும் என்று தெரியுமா என்றாள் குயிலி.

 நானும் அங்கதான் போறேன் பாட்டி... இந்த தள்ளாத வயசுல வீட்டில் இருக்காமல் திருவிழா பார்க்க வந்துவிட்டாயா... சரி என் கூட வா நானும் அங்கதான் திருவிழாக்கு செல்கிறேன் என்றாள் அந்தப் பெண்மணி.

 திருவிழாவா... என்று யோசித்த குயிலி நான் இந்த வருடம் தான் முதல் தடவையாக வந்திருக்கிறேன்... நீங்க எல்லாம் வருஷாவருஷம் வருவீங்களா என்றாள்.

ஆமா பாட்டி.... வருஷா வருஷம் திருவிழா பார்க்க வந்து விடுவோம் என்றவள்... ஆமா, பாட்டி கோயில் மலைமேல் இருக்கிறது. நீ எப்படி ஏறி வருவே என்றாள்.

 நான் கீழ இருந்து பாத்துக்குவேன் தாயீ...  அங்கு ஏதாவது புத்தர் கோவில் இருக்கா.

இல்லையே.... இந்த ஊர்ல புத்தர் கோவில் எதுவுமில்லையே என்றவள் ஆனால் திருவிழா நடக்கிற மலைக்கு அடுத்த பக்கத்தில் ஒரு குன்று இருக்கிறது. அங்க நிறைய படங்கள் எல்லாம் வரைந்திருக்கும். அங்கே எல்லாம் கடவுள் படமும் இருக்கும். ஒருவேளை அங்க நீங்க கேட்கிற புத்தரும் இருக்கலாம் என்றாள்‌.

 நீ பார்த்திருக்கியா தாயீ...

 இல்லை பாட்டி... மலையிலிருந்து பைனாகுலர் மூலம் பார்க்கலாம். மற்றபடி யாரும் பக்கத்துல போக முடியாது. அந்த குன்று ஆபத்தானது. செங்குத்தாக இருக்கும். அந்த பக்கம் யாரும் போக முடியாது என்று சொல்ல அதைக் கேட்ட குயிலி யோசிக்க ஆரம்பித்தாள்.

 மெதுவாக ஆசிர்வாதம் தாத்தாவிடம் தாத்தா நாம அந்த ஊருக்கு சென்ற பிறகு தோற்றத்தை பழைய மாதிரி மாத்திக்கணும். அப்பதான் நாம மலை மீது ஏற முடியும் என்றாள்.

சரி என்று ஆசிர்வாதம் சொல்ல தாத்தா உங்களால மலை மேல் ஏற முடியுமா....

 முடியும் குயிலி...  படிகட்டு இருக்கிறதாம். அதனால மேல ஏறிடுவேன். 

சிறிது நேரத்தில் இருவரும் தங்களை யாருக்கும் தெரியாமல் பழைய உருவத்துக்கு மாற்றிக்கொண்டு திருவிழாவில் கலந்து கொண்டனர். திருவிழா மிகவும் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. பல டிவி சேனல்கள் திருவிழாவை படம்பிடித்து லைவ் டெலிகாஸ்ட் செய்துகொண்டிருந்தனர். பைனாகுலர் மூலம் அந்த ஓவியத்தைப் பார்த்தவள் அவள்

14 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.