(Reading time: 11 - 22 minutes)
Priyamaanavale
Priyamaanavale

"சோ இப்போ எப்படி தமிழ்க்கிட்ட பேச போற?" அசோக் கேட்கவும், "அதை தான் யோசிச்சுகிட்டு இருக்கேன் அசோக். நான் இந்த மாதிரி தப்ப நினைச்சுகிட்டு இப்படி எல்லாம் பண்ணிட்டேன் அப்படினு நேராவே சொல்லிட்டா???" ராம் கேட்க, "உன் மூஞ்சியிலேயே குத்துவா.... பரவாலையா?" அசோக் சொல்லவும் "என்னடா இப்படி சொல்ற???" என்றான் ராம் சோகமாக.

"வேற என்ன பண்ணுவா? ஏண்டா ஏழை பொண்ணுனா பணத்தாசை பிடிச்சவங்களா இருப்பாங்க அதே வசதியான பொண்ணுனா பணத்தாசை இருக்காதா? என்னடா லாஜிக் இது??? இந்த மாதிரி பேசி அவளை வெறுப்பேத்தாம உன்னுடைய லவ்வை அவளுக்கு வெளிப்படையா காட்டு... போதும் போதும்னு சொல்ற அளவுக்கு காட்டு. அதை விட்டுட்டு எனக்கு உன்மேல பயங்கர லவ் ஆனா அதை வெளிய காட்டலன்னு சொல்றது எப்படி இருக்கு தெரியுமா, வெளிய பேஷண்ட் உயிருக்கு போராடும்போது நான் ரூம்குள்ள மெடிசினை லாக் பண்ணி வெச்சுட்டு எனக்கு உங்க மேல அக்கறை இருக்கு, என்கிட்டே மெடிசினும் இருக்கு ஆனா அதை வெளிய எடுக்க முடியலைன்னு சொல்ற மாதிரி இருக்கு. ரெண்டும் வெஸ்ட். சோ ஷோ யுவர் லவ்" என்றபடி சிரித்தான் அசோக்.

எப்படி எல்லாம் தமிழ் மேல் காதலை காட்டலாம் என்ற யோசனையுடன் காரில் சென்று கொண்டிருந்தவன் வழியில் தெரிந்த ஷாப்பிங் மாலை கண்டதும் காரை அதை நோக்கி செலுத்தினான். 

ஹாலில் அமர்ந்து விசாலம் பூ தொடுத்தபடி தமிழிடம் பேசி கொண்டிருந்தார். அவளை தனியே விட்டால் அவள் பாபாவை பற்றியே நினைத்து சோர்ந்து போகிறாள் என அவளை தன்னுடனே அமர்த்தி கொண்டிருந்தார் விசாலம். அவர்கள் அருகேயே புத்தகம் படிப்பதை போல அமர்ந்து நோட்டம் விட்டு கொண்டிருந்தாள் நித்யா.

"ரொம்ப சிம்பிள் செல்வி பூ தொடுக்கறது. நீ தான் ஸ்மார்ட்டான பொண்ணாச்சே. சீக்கிரம் கத்துக்குவ. இதோ பாரு இப்படி சுத்தி இப்படி எடுக்கணும் " விசாலம் சொன்னபடி செய்து கொண்டிருந்த தமிழ், இரண்டு கைகள் நிறைய பைகளுடன் உள்ளே நுழைந்த ராமை கண்டு எழுந்து நின்றாள். அவனை பார்த்த விசாலம் "எங்கடா போயிருந்த இவ்ளோ நேரம்? இதென்ன கைல இவ்ளோ பேக் ? எதுவும் ஷாப்பிங் போனியா என்ன?" எனவும் "ராம், என்ன வாங்கிட்டு வந்திருக்கீங்க?" என துள்ளிக்கொண்டு அவனிடம் சென்று அவன் கையில் இருந்த பையை வாங்க முற்பட்டால் நித்யா.

அவளிடம் பையை கொடுக்காமல் கையை பின்னால் இழுத்தவன் "அ...அது...இந்த தமிழ் இதெல்லாம் உனக்கு தான்" என்றபடி எல்லாவற்றையும் அவள் கைகளில் திணித்து விட்டு வேகமாக மாடிப்படிக்களில் தாவி ஓடிட, எதுவும் புரியாமல் திருதிருவென விழித்தபடி

10 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.