(Reading time: 5 - 9 minutes)
Nalla Mudivu
Nalla Mudivu

சங்கிலியை பிரேமாவின் கழுத்தில் தன் கையாலேயே அணிவித்தார்.

 அவர் முகத்தில், மிகுந்த சந்தோஷம்.   " நிரஞ்சன்! செல்வத்துட் செல்வம், பெருஞ்சொல்வம், பிள்ளைச் செல்வம்! கடவுள் தரும் செல்வம். நீடித்திருந்து இன்பம் தரும் செல்வம்! நீ கொடுத்து வைத்தவன்! நல்ல மனைவி, பிள்ளைச் செல்வம் உனக்கு கடவுள் தந்துள்ளார். பணமென்ன பணம், அது ஒரு சுமை! அதனாலே நிம்மதி தரமுடியுமா? சந்தோஷம் தரமுடியுமா? நீங்க நல்லா இருக்கணும்!"

  " ஐயா! உங்க நல்ல மனசு எங்களை வாழ்த்துகிற பேறு சுலபமாக கிடைக்கக்கூடுமா கடவுள்தான் உங்களை இங்கு அனுப்பி பெரியவங்கன்னா யார்னு அடையாளம் காட்டி யிருக்கிறார்........."

" கலா! என் மனைவியை அடுத்த முறை அழைத்துக் கொண்டு வரேன், உன்னை அவள் ரொம்ப விரும்புவாள். அவளும் என்னைப்போல, நல்ல மனிதர்கள் உறவுக்காக ஏங்கறா! எங்களைச் சுற்றி வாழ்கிற உறவு இருக்கே, அம்மம்மா! பயங்கரமான பண ஆசை பிடித்தவங்க! இங்கே நான் சுவாசிக்கிற காற்றுதான் தூய்மையானது!

சேகர்! நீ நல்லா படித்து முன்னுக்கு வரணும். மேல் படிப்புக்கு, உன்னை யு.எஸ். அனுப்ப ரெடியா இருக்கேன். பிரேமா! நீ படிப்பைத் தவிர, பாட்டு, டான்ஸ் கற்று தேர்ச்சி பெறணும்! நான் அடிக்கடி உங்கப்பாவுக்கு போன் பண்ணி விசாரிப்பேன். நேரில் வந்து பாராட்டுவேன். சரியா?"

பிரேமாவும் சேகரும் செட்டியாரை வணங்கினர். " ஆரோக்கியமா நல்லா வாழணும்!" என வாழ்த்தினார்

  சாப்பிடும்போது, கலா வின் சமையலை ரசித்துப் பாராட்டினார்.

" இந்த வீட்டிலே, நானும் என் மனைவியும் ஏங்குகிற சந்தோஷம் நிறைந்திருக்கு! கடவுள் தந்த பிரசாதம்!"

" ஐயா! நீங்க அபரிமிதமா உளமார எங்களை வாழ்த்த, நாங்க ரொம்ப புண்ணியம் பண்ணியிருக்கோம். உங்க மனைவியை கட்டாயமா அழைத்துவாங்க!" " சரிம்மா! நீங்களும் எப்போ முடியுதோ, அப்போ திருச்சி வந்து எங்களோட தங்கணும். நம்ம ரெண்டு குடும்பம் இனி ஒரே குடும்பமாகி விடணும்! அதுதாம்மா என் ஆசை!

 நிரஞ்சன்! நீ அந்த வக்கீலை வைத்துக்கொண்டு வேலைகளை முடி! உனக்கு எல்லா அதிகாரங்களும் நான் தரேன். பணத்தைப்பற்றி கவலைப்படாதே!

அப்பப்போ, போன் பண்ணி எனக்கு தகவல் சொன்னால் போதும்! நான் கிளம்பட்டுமா?

நிறைய வேலை இருக்கு. திருச்சிக்குப் போகிறேன், இங்கிருந்து! வரட்டுமா?"

செட்டியாரை வழியனுப்பி விட்டு, நிரஞ்சன் வீட்டுக்குள் வந்ததும், கலா, சேகர், பிரேமா மூவரும் அவரை கட்டியணைத்தனர்.

தொடரும்

Next episode will be published on 17th Nov. This series is updated weekly on Tuesday mornings.

Go to Nalla Mudivu story main page

8 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.