மக்கள் பரபரப்பாக தங்கள் அலுவலகங்களுக்கு பறந்து கொண்டிருக்கும் அந்த பிசியான புத்தம் புது காலையில் சென்னை இ.சி.ஆர் ரோடில் தன் பெர்ராரியை 180 கிலோ மீட்டர் வேகத்தில் லாவகமாக செலுத்தி கொண்டிருந்தான் துஷ்யந்த்...
அந்த கார் ம் அவன் கைகளில் தவழும் காதலியாய் அவனுக்கு கட்டு பட்டு அவன் இழுத்த இழுப்புக்கு மயங்கி அவன் செலுத்திய வேகத்தில் பறந்து கொண்டிருந்தது.....
துஷ்யந்த் பைத்தியமாக இருக்கும் சில விசயங்களில் இந்த கார் ம் ஒன்று... எல்லா விதமான மாடல் கார்களையும் ஒட்டி அனுபவித்து ரசித்து மகிழ்வதில் அலாதி பிரியம்..
எந்த ஒரு புது மாடல் கார் மார்க்கெட்டில் வந்தாலும் முதல் ஆளாக அதை ஆர்டர் பண்ணி தனக்கு சொந்தமாக்கி அதை ஒட்டி அனுபவித்து ரசிப்பவன் அடுத்து ஒரு மாதத்தில் அது போரடித்து விட்டால் உடனேயே வேற மாடலுக்கு தாவி விடுவான்..
அந்த மாதிரி பல கார்களை மாற்றிவிட்டவன் தற்பொழுது தான் தனக்கு மிகவும் பிடித்த இந்த ஃபெர்ராரி ஐ கடந்த ஒரு வருடமாக வைத்திருக்கிறான்.. அதுவும் அவனிடம் மயங்கி அவனுக்கு போரடித்து விடாமலிருக்க சில பல அனுபவங்களை வாரி வழங்கிக் கொண்டுதான் இருக்கிறது..
அந்த காரில் இன்று வழக்கத்தை விட இன்னும் வேகமாக பறந்து கொண்டிருந்தான் துஷ்யந்த்..
இப்பொழுது ஹைவே தாண்டி சிட்டிக்குள் நுழைந்திருக்க அவன் வேகம் படிப்படியாக குறைந்தது..
இன்று அதிகாலையில் வெளுத்து வாங்கியிருந்த மழையினால் ஆங்காங்கே சாலையில் சிறு சிறு இன்ஸ்டன்ட் குளங்களாக நீர் தேங்கி இருக்க, அது தெரியாமல் வழக்கமான சாலை தானே என்று வேகமாக வந்த சில வாகனங்கள் இடுப்பளவு நீரில் மாட்டிக்கொண்டன.
அதனால் பின்னால் வந்த வாகனங்களும் தடைப்பட்டு போக டிராபிக் ஜாம் ஆகி இருந்தது.. அதை கண்டதும் ஒரு நொடி தன் முகத்தை சுளித்தான் துஷ்யந்த்...
“சே.. இந்த நாட்டில் இது ஒரு தொல்லை.. கொஞ்சம் அதிகமாக மழை பெய்து விட்டால் போதும்.. இந்த மாதிரி ட்ராபிக் ஜாம் அதிகம் ஆகிவிடுகிறது கொஞ்சம் நீரில் நனைந்தாலே நின்று போய் விடுகிற டப்பா காரை எல்லாம் ஏன் தான் வைத்திருக்கிறார்களோ?
அதையும் அலவ் பண்ணுது இந்த கவர்ன்மென்ட்...அந்த மாதிரி கார்களை எல்லாம் தடை செய்ய வேண்டும்..கூடவே சாலையை பராமரிக்க இன்னும் நல்ல சிஸ்டம் கொண்டு வரவேண்டும்..
இதுதான் இங்கே இருக்கும் மிகப்பெரிய ட்ராபேக்.. இதுக்குத்தான் சீக்கிரமே நான் கனவு கண்டு கொண்டிருக்கும் என்னுடைய டவுன்ஷிப் ஐ சீக்கிரமே உருவாக்க வேண்டும்..