மறுபக்கம் அபிநவ் தன் கம்பெனியில் உள்ள அனைத்து ஸ்டாப்களையும் வைத்துக் கொண்டு ப்ராஜெக்ட் வேலைகளில் மூழ்கினான், கம்பெனியில் 2 குழுக்கள் பிரிந்தது ஒன்று அபிநவ் உடையது, மற்றொன்று விஜய் உடையது. அபிநவ்விடம் வேலைக்கு ஆட்கள் அதிகமாக இருந்தார்கள், விழுந்து விழுந்து செய்தார்கள், அபி வெறும் மேற்பார்வை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தான்
விஜய் தனது நண்பன் கார்த்திக் மற்றும் அவனது மனைவி ஆனந்தியை வைத்துக் கொண்டு வேலை செய்துக் கொண்டிருந்தான், அவனே பாடுபட்டு உழைப்பதால் ப்ராஜெக்ட் வேலையும் முக்கால்வாசி அளவு சென்றது ஆனாலும் இன்னும் முடிந்தபாடில்லை.
அபி கஷ்டப்பட்டு எதையும் செய்யவில்லை மாறாக அனைவரையும் வேலை வாங்கினான், சம்பளம் 3 மடங்கு கொடுக்கிறேன் என சொல்லியதால் மற்றவர்களும் விழுந்து விழுந்து வேலை செய்தார்கள், என்ன செய்தாலும் ப்ராஜெக்டை முடிக்க இயலவில்லை, அக்கம்பெனியில் எப்படியும் 50 பேர் இருக்கலாம், 50 பேரும் விடாமல் வேலை செய்தும் பாதிகூட முடிக்க இலயவில்லை ஆனாலும் அவனுக்கு ஒரு அல்ப்ப சந்தோஷம் நிலவியது, அதற்கு காரணம் விஜய் 2 மாதங்களாக செய்ததை அபிநவ் வேலையாட்களை கொண்டு ஒரே வாரத்தில் செய்துவிட்ட திருப்தியுடன் இருந்தான்.
இதனால் அபிநவ் மற்ற கம்பெனியில் வேலை செய்யும் திறமையானவர்களை அழைத்து தனது கம்பெனியில் வேலையில் நியமித்தான், அவர்களுக்கு இங்குள்ளவர்களை விட அதிக சம்பளம் கொடுத்தான், எப்படியாவது இந்த ப்ராஜெக்ட் முடிக்க வேண்டும், கம்பெனி தன் கைக்கு வரவேண்டும் என்ற எண்ணம் அவனை விரட்டியது. அப்படி அவனிடம் கம்பெனி கிடைத்துவிட்டால் முதல் வேலையாக விஜயை விரட்ட வேண்டும் என்ற ஆசையுடன் காத்திருந்தான்.
அங்கு நடக்கும் அனைத்தும் தெரிந்திருந்த விஜயும் தனது 2 மாத உழைப்பு ஒரே வாரத்தில் அபி செய்து காட்டிவிட்டானே என நினைத்து ஒரு நொடி கலங்கினாலும் மறுநொடியே தனது முயற்சியை விடாமல் இருந்தான், தானும் தன்னுடன் இருக்கும் ஆனந்தி மற்றும் கார்த்திக் உதவியோடு ப்ராஜெக்ட் முடிப்பதில் வேகம் காட்டினான்.
ஆனந்தி அங்கேயே வேலை செய்துக் கொண்டு கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்துக் கொண்டதால் இருவருக்கும் அவர்களின் வேலையை பற்றியும் அதில் இருக்கும் பிரச்சனைகளையும் நன்கு தெரிந்திருந்த காரணத்தால் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் உறுதுணையுடன் வாழ்ந்து வேலையும் செய்தார்கள்.
ஆனால் விஜய்க்கு அப்படியில்லை, வேலை நேரத்திலும் அவனுக்கு வீட்டின் நினைவு வராமல்
utter misunderstanding, hight expectations and lack of trust
nice update ma'am 👏 👏👏👏👏 ivanga eppadi camera fix pana poranganu parkalam.....guess vijay might win their hearts 😍😍😍
Thank you. Happy and prosperous diwali to you and your family 🎉