“நீ அநாதை இல்லத்துல வளரல, சித்தி தொல்லை இல்லை, துளியும் பயம் தெரியலை. அப்போ வேற என்ன?” – கதிர் வேண்டுமென்றே அமுதவள்ளியை பார்த்துக் கொண்டே பேசினான்.
அமுதவள்ளி இப்போதும் அவனைக் கண்டுக்கொள்ளவே இல்லை.
“அப்போ உன் வயசுக்கு பார்த்தா - - - காதலா??? என்ன லவ் ஃபெயிலியரா? பாய் ஃபிரென்ட் ஓடி போயிட்டானா?” – கதிர்
கதிரின் கேள்வி அமுதவள்ளி மறக்க நினைப்பதை மீண்டும் நினைவுக்கு கொண்டு வந்தது.
“ஏன், பிரணய், ஏன்?”
“பிகாஸ் ஐ கேன்! அண்ட் ஐ வான்டட் டு”
அமுதவள்ளி தலையை சிலுப்பிக் கொண்டாள். வேண்டாதவற்றை நினைப்பதே தவறு.
பக்கத்தில் இருந்த கதிரை வெற்று பார்வை ஒன்று பார்த்தாள். உணர்ச்சிகள் எதுவுமில்லாத அந்த பார்வை கதிரின் ஆர்வத்தை அதிகமாக்கியது.
“என்ன இப்படி ஒரு பார்வை பார்க்குற?”
“நீங்க யாரு? நான் வேலை செய்ய வந்தது மிசர்ஸ் பானுமதி கிட்ட. அவங்க கேட்குற கேள்விக்கு பதில் சொல்வேன். உங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது”
“அப்படி போடுறா அருவாள! இல்லாத பொல்லாத பேச்செல்லாம் இப்போ பேசுறீயே ஜீப்ல ஏறுறதுக்கு முன்னாடி ஒரு வார்த்தை கேட்டீயா? நான் உன்னை அம்மா கிட்ட கூட்டிட்டு போறேன்னு உனக்கெப்படி தெரியும்? உன்னை கடத்திட்டு போறேன்” – கதிர் கண்களை உருட்டி வில்லன் போல காட்டிக் கொண்டான்.
அமுதவள்ளி இப்போதும் அலட்டிக்கொள்ளவில்லை.
“நீங்க சொன்ன அம்மா நேத்தே என் கிட்ட உங்களைப் பத்தி சொன்னாங்க”
“என்ன சொன்னாங்க?”
அமுதவள்ளி போனில் கேட்டதை அப்படியே ஒப்பித்தாள்:
“டெர்மினஸ்ல வந்து இறங்கி நில்லு. ரவுடி மாதிரி ஒருத்தன் வந்து பேசுவான். நீல கலர் சட்டை, அதுக்கு சம்மந்தமே இல்லாத பச்சை கலர் பான்ட் போட்ருப்பான். நிறைய பேசுவான். அவனோட வந்தா போதும். கரக்ட்டா வீட்டுக்கு வந்திரலாம்”
கதிர் முகத்தில் ஈயாடவில்லை. இதற்கு தானா கோமாளி போல கலர் காம்பினேஷனில் உடை போட வைத்தார்கள். பேசிக் கொள்கிறேன். உள்ளுக்குள் கருவிக் கொண்டாலும் கெத்தாகவே பதில் சொன்னான்.
ivarai heronu solidunga mam. pranay venam
.. so he took all wealth of amuthavalli .. pranav kill amuthavalli love be villain. Or kathir will amutha hero... Waiting
Thank you.