கேசவனோ கோபத்துடன் ஹரிஹரனிடம் கத்தினார்.
”இங்க பாருப்பா இது என் சின்ன பொண்ணு, நீங்க பார்க்க வேண்டிய பொண்ணு என் பெரிய பொண்ணுதான், அதோ அங்க இருக்கா பாரு” என தீப்தியை காட்ட அவளை பார்க்காமலே
”எப்படியும் உங்க சின்ன பொண்ணுக்கு கல்யாணம் செஞ்சி வைப்பீங்கள்ல அப்புறம் என்ன எனக்கு தாங்களேன்” என அவன் ஆசையாக கேட்க கேசவனோ நொந்துப் போய் அவன் தோளை தொட்டு
”முதல்ல என் பெரிய பொண்ணுக்கு கல்யாணம் ஆகட்டும், அப்புறம் தான் இன்னொருத்திக்கு“ என அவனை முறைத்துவிட்டு லஷ்மியை அழைத்துக்கொண்டு அந்த சாவு வீட்டிற்குள் சென்றார். அவர் சென்றதும் திருமால் வெங்கி வந்து ஹரியை திட்டினர்
”ஏன்டா நீ மாறவே மாட்டியா, பெரியவங்க நாங்க இருக்கோம் நாங்க முடிவு செய்வோம், அதை விட்டுட்டு நீயா முடிவு செய்வியா, நீ ஒண்ணும் பெரிய மனுசன் கிடையாது, அதை புரிஞ்சிக்க முதல்ல, அவர்கிட்ட வந்து மன்னிப்பு கேளு வா” என அவனை இழுத்துக்கொண்டு உள்ளே சென்றனர்.
உள்ளே கேசவன் தன் குடும்பத்துடன் தாத்தா பார்த்தசாரதியுடன் அமைதியாக ஒரு இடத்தில் நின்றுக்கொண்டிருந்தார். உள்ளே வந்த ஹரியோ லஷ்மியை பார்த்தான். அவள் முகம் அந்த பாட்டியின் மீதே இருந்தது கண்களால் அந்த பாட்டியை அளந்துக் கொண்டிருந்தாள்
”என்னப்பா இவள் பிணத்தை இப்படி பார்க்கறா, இவளைப் பார்த்தா பயந்த மாதிரி இல்லயே பாட்டியை எதுக்கு ஆராய்ச்சி பண்றா” என ஹரி ஆச்சர்யத்துடன் தன் தந்தையிடம் கேட்க அதற்கு அவரும்
”அவளை விடு அங்க பாரு நீ பார்க்க வேண்டிய பொண்ணு அந்தா இருக்கா பாரு” என சொல்ல ஹரியோ தன் தந்தையிடம்
”அப்பா நான் 2 பொண்ணுங்களையும் பார்த்துட்டேன், எனக்கு பெரிய பொண்ணு வேணாம் சின்ன பொண்ணுதான் வேணும்” என்றான் வீம்பாக
”அவங்க தரலைன்னா என்ன செய்றது”
“தரலைன்னா ஓகே, ஒரு வேளை தரேன்னு சொன்னா அவள் எனக்குதான் நான் இப்பவே சொல்லிட்டேன் அப்புறம் யாரும் சண்டைக்கு வரக்கூடாது” என சொல்ல அவனது தாய் அதைக் கேட்டு திட்டினார்
”டேய் மடையா அவளை பாருடா சாவுக்கு எந்த மாதிரி உடுப்புல வந்திருக்கான்னு யாராவது இப்படி துணியை போட்டுக்குவாங்களா அவள் அழகாவே இருக்கட்டும், இந்த சினிமாக்காரி நமக்கு வேணாம்” என சொல்ல அவன் தன் அம்மாவை பார்த்தான்