Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 10 - 20 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
Pottu vaitha oru vatta nila
Pin It

தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 56 - RR [பிந்து வினோத்]

குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா 💘!

ஸ்... யெஸ்... தேங்க்ஸ்... பை...” போனை கீழே வைத்த மனோஜ், அப்படியே தன்னுடைய லேப்டாப்பையும் மூடி வைத்து விட்டு நேரம் பார்த்தான்.

மணி இரவு ஏழை தாண்டி இருந்தது...

அன்று லீவ் என்று தான் பெயர்... ஆனாலும் காலையில் இருந்து ஒன்று மாற்றி ஒன்று என ஆபிசில் இருந்து போன் கால்கள் வந்துக் கொண்டே தான் இருந்தது...

அதனால் தொடர்ந்து ஐந்து நிமிடங்கள் கூட மஞ்சுவுடன் தனியாக நேரம் செலவிட முடியவில்லை... அவளை கண்களால் தேடிக் கொண்டே எழுந்து நடந்தான்... வீடே பேச்சு சத்தமில்லாமல் அமைதியாக இருந்தது...

“அம்மா, மஞ்சு எங்கேம்மா?”

வீட்டின் முன்னே இருந்த செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த நிர்மலா பரபரப்புடன் கேட்ட மனோஜை அமைதியாகப் பார்த்தாள்.

நிர்மலாவின் அமைதி மனோஜிற்கு புரியவில்லை. பொறுமையில்லாமல்,

“யாரையுமே காணோம். அண்ணன் தான் டிவி பார்த்துட்டு இருக்கான்” என்றான்.

“மஞ்சு மொட்டை மாடியில இருப்பா மனோஜ்” என நிர்மலா சொல்லி வாயை மூடுவதற்கு முன் திரும்பி இருந்தான் மனோஜ்.

“மனோஜ்...”

நிர்மலாவின் அழைப்பு அவனை தடுத்தது...

“என்னம்மா??”

“அங்கே மஞ்சு மட்டுமில்லை. அவ ஃபிரன்ட், அப்புறம் ஜோதியும் இருக்கா”

“ஜோதியுமா??”

“ஆமாம்... அதான் உன்னைக் கூப்பிட்டேன்... அவங்க கொஞ்சம் நேரம் கதை பேசிட்டு வரட்டுமே”

மனோஜ் புரியாமல் விழித்தான்.

“ஜோதி குழந்தை மனோஜ். அவளுக்கு நம்மளை தாண்டி யாரையும் தெரியாது, எதுவும் தெரியாது. உன் அண்ணன் கல்யாணம், உன் கல்யாணம்ன்னு உடனே உடனே நடந்ததுல அவ கொஞ்சம் குழம்பிப் போயிட்டா. இப்போ தான் கொஞ்சமா முன்னாடி மாதிரி மாறிட்டு வரா...”

நிர்மலா சொல்வதன் அர்த்தம் மனோஜிற்கு புரிந்தது. மஞ்சுவும், ஜோதியும் ஒரே இடத்தில் இருப்பதையும், சண்டைப் போடாமல் பேசுவதையும் தான் சொல்கிறார்கள் என்பது அவனுக்கும் புரிந்தது...

அது அவனுக்குமே தெரிந்த விபரங்கள் தான். எதற்கு அம்மா அதை இப்போது சொல்கிறார்கள்

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6 
  •  Next 
  •  End 
Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 56 - RR [பிந்து வினோத்]AdharvJo 2020-12-02 21:16
:yes: :yes: he will!! No gender bias madam ji 😁 Mr m' s love towards Mrs m is such that avarum adjust panuvaru vittukoduparu etc etc 😍😍😍😍😍 ninga kannupadama avara parthukonga 😜 cute update bindu ma'am 👏 👏👏👏👏👏 ammu no fuel pouring 🙏😁😁
Look forward to see what happens next. Thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 56 - RR [பிந்து வினோத்]Bindu Vinod 2020-12-06 06:58
Thank you Adharv :-)
Reply | Reply with quote | Quote
+1 # sisTamil Sri 2020-12-02 10:56
nice update :hatsoff:
Reply | Reply with quote | Quote
# RE: sisBindu Vinod 2020-12-06 06:58
Thank you Tamil :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 56 - RR [பிந்து வினோத்]SAJU 2020-11-30 20:36
NICE UD SIS
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 56 - RR [பிந்து வினோத்]Bindu Vinod 2020-12-06 06:57
Thank you Saju :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 56 - RR [பிந்து வினோத்]madhumathi9 2020-11-30 17:00
:clap: cute epi mam :grin: 56 epi vanthathu ellam kavalaiye illa.magizhchiyodu padithu kondu irukkirom.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 56 - RR [பிந்து வினோத்]Bindu Vinod 2020-12-06 06:57
Thank you Madhumathi :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 56 - RR [பிந்து வினோத்]Nithyamurugan 2020-11-30 13:49
Cute epi mam. Unga Epi kaga wait pannitu iruntha ,thank you.waiting next epi mam
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 56 - RR [பிந்து வினோத்]Sadhi 2020-11-30 13:22
Ji nenga vera level ..epi awesome
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 56 - RR [பிந்து வினோத்]Bindu Vinod 2020-12-06 06:57
Thank you Sadhi :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 56 - RR [பிந்து வினோத்]Bindu Vinod 2020-12-06 06:57
Thank you Nithya :-)
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
DKKV

KanKal

LD

PMM

IOK

NSS

IOKK2

NSS

NeeNaan

EU

KAM

KET

TTM

PMME

NSS

NSS

THAA

KDR

NY

VIVA

IROL

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top