(Reading time: 6 - 12 minutes)
Kaanpome ennaalum thirunaal
Kaanpome ennaalum thirunaal

“ஓ...அப்படியா?....சரி...சரி...நோட் பண்ணிக்கோ!” என்று சொல்லி விட்டு சில நிமிட அமைதிக்குப் பின் நெம்பரைச் சொன்னான் மணிவாசகம்.

அவசர அவசரமாய் மேஜை மீதிருந்த ஒரு பேப்பரில் அதைக் கிறுக்கிக் கொண்ட ரவீந்தர், “ஓ.கே.டா....தேங்க்ஸ்டா...மறுபடி கூப்பிடறேண்டா” என்று சொல்லி விட்டு உடனே இணைப்பிலிருந்து வெளியேறி, அந்த சுதாகர் எண்ணுக்கு கால் உடனே செய்தான்.

“ஹலோ...” எதிர் முனையிலிருந்து குரல் வர,  அந்தக் குரல் வித்தியாசமாயிருக்க,

“சுதாகரா?” சந்தேகமாய்க் கேட்டான் ரவீந்தர்.

“ஆமாம்...சுதாகர் ஸ்வாமிதான் பேசறேன்!...நீங்க யாருங்கய்யா பேசறது?” மிகவும் பவ்யமான...பவித்ரமான குரல் எதிர்முனையிலிருந்து வர,

“என்னது?...சுதாகர் ஸ்வாமியா?...என்னடா இது பொள்ளாச்சிக்கு வந்த சோதனை?” என்று தனக்குள் குழம்பிய ரவீந்தர், அதைக் காட்டிக் கொள்ளாமல்,

“சுதாகர்...நான்..ரவீந்தர்..பேசறேண்டா...கோயமுத்தூர்ல..பி.எஸ்.ஜி.காலேஜ்ல ஒண்ணா படிச்சோமே?” அறிமுகப்படுத்திக் கொண்டான்.

“அடடே...ரவீந்தர்?...எப்படிம்மா இருக்கே?....” அடையாளம் கண்டு கொண்ட சுதாகர் சந்தோஷமாய்க் கேட்டான்.

“நான் நல்லாயிருக்கேன்!...அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் சுதாகர்!...எனக்கு கோயமுத்தூர்ல இருந்து பொள்ளாச்சிக்கு டிரான்ஸ்பர் ஆயிடுச்சு!...இன்னும் மூணு நாள்ல அங்க வந்திடுவேன்!...பொள்ளாச்சில எனக்குத் தெரிஞ்ச ஒரே ஆளு நீதான்!...அதான் உனக்குப் போன் பண்ணினேன்” என்றான் ரவீந்தர்.

“அப்படியா ரொம்ப சந்தோஷம்!...பொள்ளாச்சில உனக்கு என்ன உதவி வேணும் சொல்லு...செய்யறேன்!...வீடு...கீடு...பார்க்கணுமா?...சொல்லு பார்த்திடலாம்” சுதாகர் சொல்ல,

“ஆமாம்டா....நீ இருக்கற ஏரியாவில்...உனக்குப் பக்கத்திலேயே பார்த்துத் தந்தா ரொம்ப வசதியாயிருக்கும்” என்றான் ரவீந்தர்.

“பிரச்சினையேயில்லை!...எங்க வீட்டிலிருந்து நாலு வீடு தள்ளி ஒரு வீடு காலியாய்த்தான் இருக்கு...நான் இன்னிக்கே அந்த ஹவுஸ் ஓனர் கிட்டே பேசி...அதை ரிசர்வ் பண்ணி வெச்சிடறேன்...போதுமா?”

“ரொம்பத் தேங்ஸ்டா...நான் அநேகமா வர்ற ஞாயிற்றுக்கிழமை வந்திடுவேன்”

“தாராளமா வா...ஆமாம்...நீ மட்டும்தானா?...இல்லை சம்சாரமுமா?” சுதாகர் கேட்க,

“வாட்?...சம்சாரமா?...இன்னும் கல்யாணமே ஆகலைப்பா!...ஓ.கே.பை...வெச்சிடட்டுமா?” கேட்டு விட்டு இணைப்பைத் துண்டித்த ரவீந்தருக்கு “அப்பாடா”என்றிருந்தது. “எப்படியோ வீட்டுப்

2 comments

  • Cool epi sir 👏👏👏👏👏 ivaru periya aalu no wonder he choose marketing field 😂😂 Pollachi poitta apo kavi :o :sad: <br />Look forward to see what happens next.<br />Thank u.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.