எனக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி
நீ ஒரு பௌர்னமி பௌர்னமி பேசும் பைங்கிளி
அந்த வரவேற்பறையில் நடுவே பட்டுபுடவையும் நகைகளும் மின்ன தாய்மைக்கே உண்டான பூரிப்புடன் அமர்ந்திருந்த இலக்கியாவை கண்ட தமிழ்செல்வியின் மனம் நிறைந்து போனது.
"மாறா நம்ம தங்கை நல்ல குடும்பத்துல சந்தோசமா வாழறா பார்த்தியா?" மனதிற்குள் தன் நண்பனிடம் கேட்டு கொண்டிருந்தாள் தமிழ். அவள் கண்கள் கலங்கியது. அதை உணர்ந்ததைப் போல அவளின் கையை பற்றினார் கலைவாணி. அவரின் முகத்தில் இருந்த நிம்மதியும் சந்தோஷமும் தமிழுக்கு நிறைவை தந்தது.
மஞ்சள் நிற பட்டு புடவையில் மங்களகரமாக நின்று கொண்டிருந்த தமிழையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தான் ராம். அவள் முகத்தில் தெரிந்த உண்மையான அந்த சந்தோஷம் கண்டு அவன் மனம் மகிழ்ந்தது. இங்கு நடப்பதை எல்லாம் எனோ தானோவென பார்த்து கொண்டிருந்த நித்யாவிற்கு ராமின் இந்த பார்வை வெறுப்பை தந்தது.
யாருடைய வேண்டாத பேச்சையும் கேட்க வேண்டாம் என எளிய முறையில் நடத்த சொல்லியிருந்தார் கலைவாணி. பெரிய அளவில் நடத்த ஆசை இருந்தாலும் கலைவாணியின் கவலையை உணர்ந்திருந்த விசாலமும் சம்மதித்திருக்க, இலக்கியாவிற்கு தான் இதில் மிக பெரும் மனவருத்தம். பரத் தான் அவளை ஏதேதோ பேசி சமாதானப்படுத்தி இருந்தான்.
ஒவ்வொருவராக இலக்கியாவிற்கு நலங்கிட்டு வளையல் பூட்ட அதை எல்லாம் தன்னுடைய கேமராவில் படம் பிடித்து கொண்டிருந்தான் பரத்.
"தமிழ், வா நீயும் இலக்கியாவுக்கு நலங்கு வெச்சு வளையல் போடு. கடைசியா உனக்கும் ராமக்கும் நலங்கு வெக்கணும். சீக்கிரமே நல்ல சேதி வரட்டும் உங்க பக்கம் இருந்தும்" விசாலம் சொல்ல, இயல்பாகவே சிவந்த தமிழின் கன்னங்களை ஆசையாக பார்த்தான் ராம்.
முகத்தில் புன்னகையுடன் கைகளில் வளையல்களை எடுத்தவள் அதை பூட்ட இலக்கியாவின் கையை பற்ற, அதை பட்டென உதறிய இலக்கியா, "இவ கையால வளையல் போட்டா எனக்கு நல்ல படியா பிரசவம் ஆனா மாதிரி தான்" எனவும் தமிழின் முகம் புன்னகையை தொலைத்தது.
"எனக்கு கல்யாணம் பேச போயி இவளுக்கும் சேர்த்து கல்யாணம் பண்ணி வெச்சது பத்தாது இதுல நலங்கு வெக்கணுமாம்" இலக்கியா மீண்டும் நெருப்பை கக்க,
கண்களில் திரண்ட கண்ணீர் வெளியே வராமல் கட்டுப்படுத்தியவள் மெல்ல வளையல்களை அங்கேயே வைத்து விட்டு பின்னால் நகர, தமிழின் கையை பற்றிய கலைவாணியை பார்த்த தமிழ், எதுவும் பேச வேண்டாம் என்பதை போல தலையை அசைத்து விட்டு அங்கிருந்து
Continuosly checking for the updates on every Saturday
Hereafter dnt use chillzee
One of my favourite story. Ever Saturday I look forward for this story... Please update mam
Thank you and take care.