(Reading time: 6 - 11 minutes)
Thoora theriyum megam
Thoora theriyum megam

தொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 07 - முகில் தினகரன்

பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை பணி புரியும் இடத்திற்கே சென்று, அர்ச்சனா அர்ச்சித்து விட்டு வந்த விஷயம் தரகர் மூலமாய் தேவநாதனுக்கும், பார்வதிக்கும் தெரிய வர, இருவரும் நிலைகுலைந்து போயினர். அவ்வப்போது வீட்டு ஓனரம்மாவிடம் வாயடித்துச் சண்டை போடும் அர்ச்சனா இப்படி வெளியிடத்திலும் சென்று ஒரு மூன்றாம் மனிதனை, நாலாந்தரமாய்த் திட்டி விட்டு வருவாள், என்று அவர்கள் எதிர்பார்க்கவே இல்லை.

“ஹூம்...என் வயித்துல பிறந்ததா இப்படி?” பார்வதி நொந்தே போனாள்.

“சின்னவ...சின்னவ...ன்னு அவளுக்கு அதிகமாய்ச் செல்லம் குடுத்து நாமதான் அவளைக் கெடுத்து வெச்சிருக்கோம்!...ஹூம்...இருக்கற இடம் தெரியாம அமைதியா குத்து விளக்காட்டம் இருக்கற மூத்தவளுக்கே ஒரு வரனும் குதிர மாட்டேங்குது!...இந்த பஜாரிக்கு என்னதான் நடக்கப் போகுதோ?...நெனச்சாலே பயமாயிருக்கு!” தேவநாதன் தொலை நோக்குப் பார்வையுடன் கவலைப் பட்டார்.

“அய்யா...நானும் என்னால முடிஞ்ச வரைக்கும் முயற்சி பண்ணித்தான் உங்க மூத்த பொண்ணுக்கு வரன்களைக் கொண்டு வர்றேன்!...என்னோட துரதிர்ஷ்டமோ..இல்லை இந்தப் பெண்ணோட துரதிர்ஷ்டமோ தெரியலை...ஒவ்வொரு தடவையும் ஏதோ ஒரு தடங்கல் வந்து வரண் அமையாமப் போயிடுது!..என்னோட சர்வீஸ்ல இந்தப் பொண்ணுக்கு அலைஞ்ச மாதிரி வேற எந்தப் பொண்ணுக்குமே நான் அலைஞ்சதில்லைன்னா பார்த்துக்கங்களேன்!...அதனாலதான் சொல்றேன்,...” என்று தரகர் இழுக்க,

“சொல்லுய்யா...அதனால.?.” தேவநாதன் “வெடுக்” கென்று கேட்டார்.

“நீங்க வேற யாராவது தரகர் மூலமாகவோ..இல்லைன்னா...இப்பத்தான் நிறைய திருமண தகவல் நிலையங்கள் வந்திருக்கே?...அதுல ஏதாவது ஒண்ணு மூலமாகவோ முயற்சி பண்ணுங்க!...என்னை விட்டுடுங்க!” கையெடுத்துக் கும்பிட்டு விட்டு, தரகர் புறமுதுகிட்டு ஓடிய பின்,

தேவநாதனும், பார்வதியும் மனம் தளர்ந்து, உடல் சோர்ந்து, ஆளுக்கொரு மூலையில் சென்று, உள்ளக் குமுறலோடு...உலையாய்க் கொதிக்கும் நெஞ்சோடு, சிலையாய் அமர்ந்தனர்.

அரை மணி நேரத்திற்குப் பின், வாசல் பக்கம் யாரோ வரும் நிழலாட, பார்வதி மட்டும் மெல்லத் தலையைத் தூக்கிப் பார்த்தாள். செருப்பைக் கழற்றி விட்டபடி, வீட்டிற்குள் நுழைந்தாள் அர்ச்சனா. அவளைக் கண்ட மாத்திரத்தில் அது வரையில் அடக்கி வைத்திருந்த ஆத்திரங்கள் அத்தனையும் கொத்தாய்ப் பீறிட்டுக் கிளம்ப, உள் அறை நோக்கிச் செல்லும் அவளைப் பார்த்து, “ஏய்...நில்லுடீ!” என்றாள் பார்வதி அதட்டலாய்,

அம்மாவின் அந்த அதட்டல் குரலையும், அப்பாவின் அந்த தளர்வான நிலையையும் பார்த்ததுமே

3 comments

  • அதே மாப்பிள்ளையை காதலிக்க ஆரம்பித்து விட்டால் மட்டும் கதைய கொண்டு போயிடாதீங்க

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.