(Reading time: 8 - 15 minutes)
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2

தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 08 - பூர்ணிமா செண்பகமூர்த்தி

ஹெச்ஓடி என்ன சொல்ல போறாரோன்னு யோசனையில் இருவரும் உள்ளே சென்றார்கள்.

இவர் வந்து பேப்ரிக் ஆர்டர் எடுக்க வந்திருக்காரு. நீங்க இரண்டு பேரும் உங்கள் கிளாஸ் கேர்ள்ஸ் கிட்ட அவங்களுக்கு எவ்வளவு மீட்டர் வேணும்னு லிஸ்ட் எடுத்து இவர்கிட்ட கொடுத்திருங்க என்றார்.

சார்! பேப்ரிக் எதுக்கு சார் என்றாள் ரம்யா தயங்கிவாறே.

உங்கள் டிபார்ட்மென்ட் யூனிபார்முக்கு என அவர் சொல்லவும்

பள்ளியில் தான் சீருடை அணியவேண்டும் இங்கே வண்ணவண்ணமாக உடையணியலாம் என்றெண்ணி இருந்தவர்கள் அதிர்ச்சியாக, யூனிபார்மா என்று ஒரே குரலில் கேட்டனர்.

ஏன் உங்க சீனியர்ஸ் சொல்லலையா?

ஆமா, வாரத்துல ரெண்டு நாள் லேபுக்கு போட்டுட்டு வரணும். லேப் மூணு மணிநேரம் தொடர்ச்சியாக இருக்கிறதால், நிறைய பேர் கட் அடிச்சிட்டு கேண்டீன், லைப்ரரி, இல்லை ஹாஸ்டல் போய் தூங்கறதுனு பண்ணிட்டு இருக்காங்க. அதைத் தடுக்கத் தான் இந்த யூனிபார்ம் எல்லாம். அவர் தேர்ந்தெடுத்து இருப்பதாகத் காட்டிய துணியில் நேவி ப்ளூ கலர் நிறத்தில் வெள்ளை நிறத்தில் குட்டிகுட்டியான புள்ளிகள். இருவருக்கும் அது அவ்வளவாகப் பிடிக்கவில்லை. சார் வேற பேப்ரிக் என்று ஆரம்பிக்க, “ ஐ ஆம் நாட் கிவிங் யூ சாய்சஸ்! இந்த பேப்ரிக் தான்! போய் லிஸ்ட் ரெடி பண்ணுங்க! பாய்ஸ் ப்ளைன் வைட் புல் ஸ்லீவ் ஷர்ட் அண்ட் ப்ளாக் பேன்ட் போட்டு வரணும்! சொல்லிருங்க! டூ வீக்ஸ் டைம் ல லேப் ல எல்லாரும் யூனிபார்ம்ல தான் இருக்கணும்! நீங்க போலாம்!” என்று அனுப்பி வைத்தார்.

வகுப்புக்குள் நுழைந்த ரம்யா, ஹெச்ஓடி சொன்ன தகவலை அறிவிக்கவும், “ஐயோ இங்கேயும் யூனிபார்மா! ஓ!வென்று குரல் எழுப்பினர்.மற்ற மாணவிகளிடம் பேப்ரிக் சாம்பிளை நீட்ட, வகுப்பில் பிற பெண்களுக்கும் அது பிடிக்கவில்லை.எனினும் அவர்கள் எவ்வளவு மீட்டர் தேவை என எழுதவும், அந்த லிஸ்ட்டைக் கொண்டு போய், அந்த பேப்ரிக் ஆர்டர் எடுப்பவரிடம் கொடுத்து வந்தாள். மறுநாளே, எல்லாருக்கும் தேவையான அளவு பேப்ரிக் கொண்டு வந்து வகுப்பில் கொடுத்து விட்டார். மாணவர்கள்  சிலரின் கைகளுக்கும் அது போனதும், “ஹே இவங்க எல்லாரும் புள்ளி ராணிங்க மாதிரி வரப்போறாங்க!” என்று கிண்டல் செய்து சிரிக்கத் துவங்கினர்.

அன்றைய கம்ப்யூட்டர் ப்ராக்டிஸ் லேபுக்குத் தயாராகிக் கொண்டிருந்தனர்.  நான்காம் ஆண்டு மாணவர்கள் சிலர் வந்தனர். அவர்கள் சிம்போசியம் பற்றிய அறிவிப்புகளைத் தெரிவிக்க, ஆர்வத்துடன் ரம்யாவின் வகுப்பில் கவனித்துக் கொண்டிருந்தனர். பல்வேறு போட்டிகளில் பங்குபெற தங்கள் பெயர்களைப் பதிவு செய்ய டிபார்ட்மென்ட் நோட்டிஸ் போர்டில் குறிப்பிடப்பட்டு இருக்கும் இறுதி ஆண்டு மாணவர்களிடம் பேசி விவரம் தெரிந்து கொள்ளலாம்

6 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.