(Reading time: 8 - 15 minutes)
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2

எனவும் கூறினர்.

வெளியே கிளம்பும்போது, சீனியர் மாணவி ஒருத்தர் ஒரு நிமிடம் நின்று, “இங்கே ரம்யா யாரு? எனக் கேட்க, நான் தான் என்று ரம்யா எழுந்து வந்தாள். என் கூட வெளில வா, உன்கிட்ட கொஞ்சம் பேசணும் என்று கூப்பிட்டார். எதுக்கு நம்மள மட்டும் தனியாக் கூப்பிடறாங்க என்று பயந்தவாறே சென்றாள். “ஹலோ ரம்யா! நான் அருணா! பைனல் இயர் ஏ செக்சன். நீ தான் கிளாஸ்ல கேர்ள்ஸ்க்கு ரெப்னு சொன்னாங்க. ஒரு சின்ன விஷயம். சிம்போசியம் ரெண்டு நாள் என்பதால், முதல் நாள் டிபார்ட்மென்ட்ல எல்லா மாணவிகளும் சாரி உடுத்தலாம்னு முடிவு பண்ணியிருக்காங்க. இது அபிசியல் கிடையாது. பட் எல்லாரும் கேட்டுத் தான் ஆகணும். உன் கிளாஸ்ல எல்லார்கிட்டயும் சொல்லி கண்டிப்பா சேலை உடுத்திட்டு வர சொல்லணும். இது உன் பொறுப்பு! யாராச்சும் மீறிட்டா சீனியர்ஸ் உன்னைத் தான் புடிப்பாங்க! ஓகே வா! வரேன்!”என்று லேசாக பயங்காட்டி விட்டு சென்றுவிட்டார். 

உள்ளே நுழைந்தவளை, உன் நோட்ஸ் என் கைல தான் இருக்கு, வா போவோம், லேபுக்கு லேட் ஆகுது, என்று கையைப் பிடித்து இழுக்காத குறையாக நடக்கத் தொடங்கினாள் தேவி. ஆமா அந்த சீனியர் அக்கா உன்னை மட்டும் தனியா கூட்டிட்டுப் போய் என்னடி சொன்னாங்க என்று கேட்டாள். சிம்போசியத்துக்கு நாம கேர்ள்ஸ் எல்லாரும் சாரி கட்டிட்டு வரணுமாம். இது சீனியர்ஸ் உத்தரவு.

என்னடி இப்படி அதிகாரம் பண்றாங்க? என்றாள் தேவி.

சீனியர்ஸ் நான் அப்படித் தான் இருப்பாங்க. ஏற்கனவே மெக்கனிக்கல் சீனியர் தன்னை  முந்திய செமெஸ்டரில் மிரட்டிய சம்பவத்தை நினைத்து அப்படி சொன்னாள் ரம்யா.

நான் சொன்னால் நம்ம கிளாஸ்ல கேப்பாங்களாடி தேவி என்றாள் சந்தேகத்துடன்.

நீ சொன்னா கேக்க மாட்டாங்க.

அப்போ யார் சொன்ன கேப்பாங்க?

மேம் சொன்னா கேட்டாலும் கேட்கலாம். அதுலயும் அந்த ரதியும் வாணியும் நீ சொன்னதைத் துளியும் கேட்கமாட்டங்கடி. ஆனால் மேம் இதை எப்படி சொல்லுவாங்க. இது சீனியர்ஸ் அன்அபிசியலா பண்ணுறாங்க. இரு எல்லாரையும் கன்வின்ஸ் பண்ண ஒரு வழி தேடுவோம். என்று தேவி அவளுக்குத் தைரியம் கொடுத்தாள்.

லேபில் சீக்கிரமே ப்ரோக்ராம் முடித்துவிட்டு, சிம்போசியத்துக்கு சேலை கட்டுவதைப் பற்றிய பேச்சு வந்தது. பாந்தினி சேலை, கட்டன் சேலை, பட்டு சேலை என்று சேலை ரகங்கள் பற்றி அவள் வகுப்புத் தோழிகள் ஆர்வமாய் பேசுவது ரம்யாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவளுக்குச் சேலை உடுத்தவும் தெரியாது, அதன் ரகங்கள் பற்றியும் தெரியாது. எப்படியோ அவர்களாகவே சேலை உடுத்தி வர முடிவெடுத்துவிட்டனர். சிலரை சீனியர் வேண்டுகோள் எனவும் மிரட்டல்

6 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.