(Reading time: 13 - 25 minutes)
Nenchangoodu yenguthadi
Nenchangoodu yenguthadi

 இவர்களின் சேட்டையை பார்த்த இன்டர்வியூ வந்தவர்களின் ஒருவன் கிண்டல் சிரிப்புடன் மொழியை நோக்க......

 அதனை பார்த்த மொழி ஒற்றை புருவத்தை உயர்த்தி முறைக்க....

அவன் சிறு சிரிப்புடன் வாயை மூடி சமாதானம் என்பது போல் சைகை செய்ய.......

அது...... என்ற அஜித் வசனத்தை உச்சரித்து கம்பீரமாக அவன் அருகில் உள்ள இருக்கையில் அமர,

ஹாய் ஐ அம் அர்ஜுன்.

 நைஸ் நேம்.

உங்க நேம் சொல்லலையே.

அவசியம் சொல்லனுமா.

அவன் தோள்களைக் குலுக்கி பிரண்ட்ஸ்.

ம்ம்ம்..........அப்ப சொல்லலாம் தேன்மொழி.

ஸ்வீட் நேம்.

 தேங்க்யூ.

நெடுநெடுவென்று வளர்ந்த உருவம் ஒன்று தனது கம்பீர நடையுடன் அந்த கம்பெனியின் நுழைவுவாயிலில் நுழைந்த நொடி இந்த சம்பாஷனைகள் அனைத்தையும் கவனித்தபடி கோபத்துடன் உள்ளே நுழைய.....

 குட் மார்னிங் சார்..... என்ற வரவேற்பாளினியின் வணக்கத்திற்கு பதில் வணக்கம் எதுவும் கூறாமல் இறுகிய முகத்தையே பரிசாக அளிக்க,......

 கார்த்திக்கை பார்த்த வரவேற்பாளினி சிறு குழப்பத்துடன் நின்றாள்.

 ஆம் அவன் எப்பொழுதும் சிரித்த முகத்துடன் இருப்பவன் பணியில் எந்த சந்தேகம் என்றாலும் சிறு முகச்சுளிப்பு இல்லாமல் பொறுமையாக நிதானமாக எடுத்துரைப்பதில் வல்லவன் என்று கூறலாம். அப்படிப்பட்ட கார்த்திக் இன்று கோபமாக செல்வது என்றால் யாராக இருந்தாலும் குழப்பம் வர தானே செய்யும். அதுபோல் அனைவரிடமும் அன்பாக பழகுவன்.

 ஆனால் அதற்கு நேர்மார் கதிர் அனைவரிடமும் கடுமையாக நடந்து கொள்வான் முக்கியமாக பெண்களை கண்டால் அவனுக்கு ஆகவே ஆகாது எங்கிருந்துதான் அவ்வளவு கோபம் வருமோ என்று நமக்கே தெரியாது. அவனுடைய பார்வையே எதிரில் இருப்பவர்களை இரண்டடி தள்ளி நிற்க வைக்கும். கார்த்திக் அன்பானவன். கதிர் முரடன்.

 இப்படி இருவேறு குணாதிசயங்கள் கொண்ட இருவரையும் இணைத்தது எது??.

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.