(Reading time: 11 - 21 minutes)
Kaanpome ennaalum thirunaal
Kaanpome ennaalum thirunaal

தொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 04 - முகில் தினகரன்

ன்று சனிக்கிழமை.

கோயமுத்தூர் பிராஞ்சில் ரவீந்தர் பணி புரியும் கடைசி நாள்.  ஒவ்வொரு டேபிளாகச் சென்று எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தவன், காவ்யாவின் டேபிளுக்கு வந்ததும், “உட்காருங்க...உங்க கிட்டக் கொஞ்சம் பேசணும்!” என்றாள் அவள்.  அந்தக் கடைசி நிமிடத்திலாவது அவனிடம் தன் உள்ளத்தில் உள்ளதைச் சொல்லிவிடலாம், என்கிற எண்ணத்தில்.  அவள் முகத்தில் வெட்கம்.  மனத்தில் தவிப்பு. உடலெங்கும் இனம் புரியாதவொரு பூரிப்பு.

ஆனால் அவனோ, “ஸாரி...மேடம்...உட்கார்ந்து பேசவெல்லாம் நேரமில்லை மேடம்!.....எல்லோர் கிட்டேயும் சொல்லிட்டு...ஈவினிங் சீக்கிரமே ரூமிற்குப் போனால்தான் ஹவுஸ் ஓனரைப் பார்க்க முடியும்...அட்வான்ஸைத் திருப்பி வாங்க முடியும்!...ஓ.கே.மேடம்...தேங்க்ஸ் ஃபார் யுவர் கோ-ஆபரேஷன்!...பார்ப்போம் மேடம்!...நான் அங்க போனதும் போன் பண்றேன்...பேசுவோம்!.” மிகவும் சாதாரணமாய்ச் சொல்லி விட்டுச் சென்றவனை விசித்திரமாய்ப் பார்த்தாள்.

“ராஸ்கல்!...இந்த ஆபீஸ்ல...எத்தனை பேர் என்னை வட்டம் போடறாங்க...அவங்களையெல்லாம் ஒதுக்கித் தள்ளிட்டு...நான் உன்னைய வட்டம் போடறேன்!...ஆனா நீ எதையும் புரிஞ்சுக்காம...உன் பாட்டுக்குப் பேசிட்டுப் போறே!...ஹூம்..” என்று சத்தமில்லாமல் சொல்லிக் கொண்டு நெற்றியில் அடித்துக் கொண்டாள்.

அதுவரையில் தன் இருக்கையிலிருந்து அவர்களையே பார்த்துக் கொண்டிருந்த பரிமளா அவசர அவச்ரமாய் வந்து, “என்ன காவ்யா?...சொல்லிட்டியா?” கிசு...கிசு குரலில் கேட்க,

உதட்டைப் பிதுக்கினாள் காவ்யா.  “உட்காருங்க...உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்!னு நான் ஆரம்பிச்சேன்!...ஆனா அவன்.. “உட்கார்ந்து பேச நேரமில்லை மேடம்”ன்னு சொல்லிட்டு “பை...பை” சொல்லிட்டுப் போயிட்டான்!” கரகரத்த குரலில் சொன்னாள்.

“போச்சு...அவ்வளவுதான்!...இத்தோட உன் காதல் கோட்டையை அப்படியே இழுத்து மூடிட்டு...வீட்டுல யாரச்சும் ஒரு....ராகவனையோ...இல்லை...சுப்பிரமணியத்தையோ கட்டி வைப்பாங்க!..அவனைக் கட்டிக்கிட்டு....குடும்பம் நடத்து!...மூணு குழந்தைகளைப் பெத்துக்கோ...அதுகளைப் பக்கத்துல இருக்கற ஏதோவொரு பள்ளிக் கூடத்துல சேர்த்திட்டு....தெனமும் மத்தியானம் சாப்பாடு கொண்டு போய் ஊட்டிட்டு வா!” கோபமாய்ச் சொன்னாள் பரிமளம்.

“பரிமளம்...நான் ஏற்கனவே நொந்து போயிருக்கேன்...இதுல நீ வேற ஏன் ரணத்தைக் கிளர்றே?” அழுது விடுபவள் போலானாள் காவ்யா.

“பின்னே என்னடி?...நீயாய்ப் போய்...தைரியமாய்ச் சொல்ல மாட்டேங்கறே!...சரி... “உனக்காக நான்

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.