(Reading time: 11 - 21 minutes)
Kaanpome ennaalum thirunaal
Kaanpome ennaalum thirunaal

தூது போறேன்!...நான் போய்ச் சொல்றேன்”னு சொன்னாலும் “வேண்டாம்!”னு தடுக்கறே!...ம்ஹ்ஹும்..நீயெல்லாம் காதலிக்க லாயக்கில்லை!...கத்தரிக்காய் கூட்டு வைக்கத்தான் லாயக்கு!...கட்டில்ல கண்ணை மூடிக்கிட்டுக் குடக்கத்தான் லாயக்கு!” பொரிந்து தள்ளினாள் பரிமளா.

“இப்பவும் ஒண்ணும் முடிஞ்சு போகலை பரிமளம்!...அவர் எப்படியும் ஈவினிங் வரைக்கும் இருப்பார்...அதுக்குள்ளார சான்ஸ் கிடைச்சா சொல்லிடப் போறேன்” தைரியம் வந்தவளாய்ப் பேசினாள் காவ்யா.

“கூரை ஏறி கோழி பிடிக்காதவன்...வானம் ஏறி வைகுண்டம் போறேன்!னு சொன்னானாம்!...உன்னோட சீட்டுக்கே வந்து எதிர்ல உட்கார்ந்தான்...அப்பச் சொல்ல முடியலை...சாயந்திரத்துக்குள்ளார சொல்லிடறாளாம்!...ம்..பார்ப்போம்...பார்ப்போம்” உதட்டைச் சுழித்து எள்ளலுடன் சொன்னாள் பரிமளம்.

மதிய உணவு நேரம்.

ஹோட்டலிலிருந்து வாங்கி வந்த உணவுப் பொட்டலத்தை எடுத்துக் கொண்டு வரப் போகும் ரவீந்தருக்காக வேண்டுமென்றே மெதுவாக சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். 

“என்ன காவ்யா...உன்னோட ஆள் வருவதற்காக வெய்ட் பண்றியா?” பரிமளம் கேட்க,

“யெஸ்” என்றாள் காவ்யா.  அவள் முகத்தில் இதுவரையில் இல்லாத தைரியமும், துணிச்சலும் கூடியிருந்தன.

“ஸாரி...உன்னோட ஆள் வர மாட்டார்!...அவரை அவரோட கொலீக்ஸ் ஹோட்டலுக்குக் கூட்டிட்டுப் போயிட்டாங்க ஃபேர்வெல் லன்ச் குடுக்கறாங்களாம்!” என்று பரிமளம் சொன்னதும், முகம் வாடிப் போன காவ்யா, “ஆமாம்...அதுக்கு நம்மையெல்லாம் ஏன் கூப்பிடலை?” கோபமாய்க் கேட்டாள்.

“மார்க்கெட்டிங் செக்‌ஷனும்...சேல்ஸ் செக்‌ஷனும் சேர்ந்து அவனுக்கு பார்ட்டி குடுக்கறாங்களாம்” என்றாள் பரிமளா.

“இருந்தாலும் ஒரே ஆபீஸ்ல இருக்கோம் என்கிர காரணத்தினால் கூப்பிட்டிருக்கலாம்!” என்றாள் காவ்யா.

அவளைப் பரிதாபமாகப் பார்த்த பரிமளம், “கடைசியா ஒரு ஐடியா சொல்றேன்!...பேசாம ஒரு லவ் லெட்டர் எழுதி...அவர் கைல திணிச்சிடு!...அதை அவர் இங்க படிச்சாலும் சரி!...இல்லை...பொள்ளாச்சிக்குப் போய்ப் படிச்சாலும் சரி!...உன்னோட மனசை அவர் புரிஞ்சுக்கட்டும்” நம்பிக்கையோடு சொன்னாள் பரிமளா.

“ம்ம்ம்...இது பிளாக் அண்ட் ஒயிட் படங்கள்ல வர்ற மாதிரி ஓல்ட் ஃபார்முலாவா இருக்கே?...ஆனாலும் பரவாயில்லை...ஓல்ட் ஈஸ் கோல்ட்!....நல்லாவே இருக்கு!...இதையே

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.