(Reading time: 11 - 21 minutes)
Kaanpome ennaalum thirunaal
Kaanpome ennaalum thirunaal

பொள்ளாச்சி பிராஞ்ச் பற்றிய டீட்டெய்ல்ஸ் குடுக்கணும்!னு காலையிலேயே சொன்னியே அதை இப்பத்தான் குடுக்கறியா?” கேட்டாள்.

“ஆ...மா...ம்” என்றாள் காவ்யா திக்கித் திணறி.

“ஓ...அந்த டீட்டெய்ல்ஸா?...இட்ஸ் ஓ.கே...”என்ற மேனேஜர், ரவீந்தர் பக்கம் திரும்பி, “இவங்க அந்த பொள்ளாச்சி பிராஞ்சோட அட்ரஸ்...அங்கிருக்கற ஆளுங்களோட போஸ்டிங் டீட்டெய்ல்ஸ் போன் நெம்பர்...எல்லாம் குடுத்திருக்காங்க!...அது உனக்கு ரொம்ம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும் பத்திரமா வெச்சுக்கோ” சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

ரவீந்தரும் அந்தக் காகிதத்தை மடித்து தன் பாண்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு, “தேங்க்யூ மேடம்ஸ்” என்று அவர்கள் இரண்டு பேரையும் பார்த்துச் சொல்லி விட்டு நகர்ந்தான்.

ஆபீஸை விட்டு வெளியே வந்து, பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது காவ்யா சொன்னாள், “நல்லவேளை சரியான நேரத்துல நீ வந்து என்னைக் காப்பாத்தினே?...இல்லேன்னா...அந்த ஆபீஸ்ல எனக்கு இருந்த மானம்...மரியாதை எல்லாமே போயிருக்கும்!...ஆமாம்...நீதான் ரொம்ப நேரத்துக்கு முன்னாடியே கிளம்பிப் போயிட்டியல்ல?...அப்புறம் எப்படி மறுபடி வந்தே?...”

“அதையேன் கேட்கறே?...மொபைலை சார்ஜ் போட்டு வெச்சிருந்தேன்!...அதை எடுக்க மறந்திட்டுப் போயிட்டேன்!...அதை எடுக்க திரும்பி வந்தப்பதான் அந்தக் காட்சியைப் பார்த்தேன்!... “ரவீந்தர் கையில் காகிதம்....மேனேஜர் அதைக் காட்டி ஏதோ கேட்கிறார்...நீ பேய் முழி முழிச்சிட்டு நிற்கறே...”...சட்டுன்னு புரிஞ்சுக்கிட்டேன்!...உடனே உள்ளார பூந்து ஒரு டயலாக் பேசி உன்னைக் காப்பாத்திட்டேன்”

“அந்த ஆண்டவன்தான்...என்னைக் காப்பாத்துவதற்கென்றே உன்னை அந்த நேரத்துல அனுப்பியிருக்கான்” என்றாள் காவ்யா.

“ஓ.கே...இப்ப உன் சைடிலிருந்து நீ லெட்டர் குடுத்திட்டே!...அந்தப் பக்கமிருந்து பதில் வரணும்!...அப்படித்தானே?” பரிமளம் கேட்க,

“ஆமாம்!..எப்படியும் அது லேட்டாய்த்தான் வரும்!...ஏன்னா...நாம வேற  “அந்தக் காகிதத்துல பொள்ளாச்சி பிராஞ்ச் டீட்டெய்ல்ஸ் இருக்கு!”ன்னு சொல்லி வெச்சிட்டோம்!...இனி அந்த ரவீந்தர் அதை எப்பப் பிரிச்சுப் படிக்கப் போறானோ?” வருத்தமாய்ச் சொன்னாள் காவ்யா.

“சொல்ல முடியாது!...இன்னிக்கு நைட் ரூம்ல போய்ப் படிச்சாலும் படிக்கலாம்!...இல்லேன்னா..பொள்ளாச்சி போய்ப் படிக்கலாம்!...ஒருவேளை படிக்காமலே விட்டாலும் விட்டுடலாம்” என்று பரிமளா சொல்ல,

“அய்யோ...ஏண்டி இப்படி அபசகுனமா சொல்றே?...”

“ஆமாம்டி!...நீ ஏற்கனவே ஃபுல் டீட்டெய்ல்ஸை வேற பேப்பர்ல பிரிண்ட் அவுட் எடுத்துக்

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.