(Reading time: 9 - 18 minutes)
Nalla Mudivu
Nalla Mudivu

  இங்கேயே வசிக்கின்ற பத்து ஓனர்களைப்போல, பத்து குடியிருப்போருக்கும் அதே தொகை தருவதுதானே நியாயம்?"

   " , மை காட்! என்ன சொல்றீங்க? எங்களுக்கு கிடைக்கிற ஊக்கத்தொகை முழுவதையும் உங்களுக்கு தாரை வார்க்கணுமா? என்ன பிதற்றல்? பேராசைக்கும் ஓர் அளவுண்டு!

 இப்படியெல்லாம் பேசி கலகம் செய்யவா இந்த மீட்டிங்? இது மீட்டிங் இல்லே சீட்டிங்!"

  " எங்களை வசை பாடி கேவலப்படுத்துகிறீர்களே தவிர, கேள்விக்கு பதிலைக் காணோமே! காரணம் ஒன்று ஊக்கத்தொகைமட்டும் வேறா? நாங்கள் காலிசெய்து அனுபவிக்கப் போகும் கஷ்டங்களுக்கு தரப்படுகிற நஷ்ட ஈடு இந்த ஊக்கத் தொகை! அந்தப் பணத்தை கேட்க, எந்தக் கஷ்டமும் படாத ஓனருக்கு என்ன அருகதை இருக்கு? நாங்கள் பேசுவது நியாயமா இல்லையா என்று தலைவர் சொல்லட்டும்......"

 " பொறுமை! பொறுமை! இரண்டு பக்கங்களிலும் நியாயம் உள்ளது. நியாயம் என்பதே, அவரவர்கள் பார்க்கும் பார்வையைப் பொறுத்தது.

 இந்தப் பிரச்னைக்கு தீர்வு, இந்த ஒரே மீட்டிங்கில் கண்டுவிட முடியாது.

  ஓனர்கள் தர, தயார் நிலையில் உள்ளது அதிகபட்சமாக ஒரு லட்ச ரூபாய்! நீங்கள் கேட்பதோ பல லட்சங்கள்! இல்லை, ஊக்கத்தொகை முழுவதும் கேட்கிறீர்கள்!

  அதனால், இரு சாராரும், நிதானமாக யோசித்து, நட்புமுறையில் பேசி, சமரசம் காணவேண்டிய அவசியம் உள்ளது.

  இன்றைக்கு இத்துடன் மீட்டிங்கை முடித்துக் கொண்டு, மீண்டும் நாளை காலை கூடுவோம்."

 " தலைவரே! நீங்கள் நியாயமாகப் பேசுகிறீர்கள். உங்களிடம் எங்களுக்கு பூரண நம்பிக்கை உள்ளது. ஒரு நாள் போதாது என்றால், ரெண்டு மூணு நாட்கள்கூட எடுத்துக் கொள்ளுங்கள். எங்களுக்கு அவசரமே இல்லை! அவசரம் உங்கள் பக்கத்தில்தான்!

  நாங்கள் சொல்வதை பிளாக்மெயிலாக கருதாமல் சிந்தியுங்கள் நிதானமாக! எங்கள் ஒத்துழைப்பு இல்லை என்றால், இந்த மனையும் பிளாட்டுகளும் விற்கமுடியாது நீங்கள் கோடீஸ்வரன்களாக முடியாது. தவிர, கூடுதலாக பல லட்சங்கள் நீங்கள் சம்பாதிக்கவும் முடியாது. இதை மனதில் இருத்தி, நல்லமுறையில் சிந்தித்து சிறந்த முடிவு எடுங்கள்! நீங்கள் எப்போது அழைப்பு விடுத்தாலும் நாங்கள் வரத் தயார்! எங்கள் முழுமையான ஒத்துழைப்பு உங்களுக்கு நிச்சயம் உண்டு. நன்றி"

" நாளை இதே நேரம் இதே இடத்தில் கூடுவோம். நன்றி!" 

தொடரும்

Next episode will be published on 22nd Dec. This series is updated weekly on Tuesday mornings.

Go to Nalla Mudivu story main page

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

7 comments

  • Achoda 😱😱 ivanga panchayat Hanuman tail madhiri poitte irukke :eek: ellarum greedy ya than uncle theriyaranga 😔 demanding few percentage is okay....but ivanga demand is too much....enathan justify pana tenants try panalum idhu konjam adhigam than :yes: of course who will accept for such demand 😈good going uncle 👏👏👏👏👏👏 ivanga ena and eppo than mudivu edupanganu parka waiting.<br />Thank you
  • Thanks, dear Madhumma! Good morning! இந்த கதை எழுதி ரொம்ப நாளாயிடுத்து. எனக்கே முடிவு மறந்துபோச்சு! நல்ல முடிவுதான்!

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.