(Reading time: 8 - 15 minutes)
Lock Down
Lock Down

கிளம்பறேன்... எதுனானா போன் போடு... உன் வீட்டுக்காரரும்  வெளிய வர முடியாம மாட்டிக்கிட்டாரு...”

“என்னா பண்ணம்மா... அவங்க இருக்கற தெருவுல ஒரே வீட்டுல எட்டு பேருக்கு கொரோனாவாம்... அதால அந்த தெருவையே அடைச்சு வச்சுட்டாங்க... அவசரத்துக்கு கூட வெளிய வர முடியலைன்னு சொல்லிட்டு இருந்தாரு...”

“எப்போதான் இந்த கிருமி சனியன் ஒழியுமோ... வேலைக்கும் போவ முடியாம, கடையும் திறக்க முடியாம எல்லா ஜனங்களுக்கும் அல்லாட்டமா இருக்கு...”

“நீ வேலை செய்யுற வீட்டம்மா நல்லவங்களா போய்ட்டாங்கம்மா... சம்பளத்த பிடிக்காம கொடுத்துட்டாங்க...”

“ஆமாண்டி... இல்லைன்னா கஞ்சிக்கே வழியில்லாம போயிருக்கும்... புள்ளத்தாச்சி பொண்ணு உன்னை வச்சுட்டு என்னா பண்ணி இருப்பேன் நானு... உன் வீட்டுக்காரரும் வேலைக்கு போவலை...”

“இந்தா தெறப்போம், அந்தா தெறப்போம்ன்னு சொல்றாங்களே தவிர டாஸ்மாக்கைத் தவிர ஒண்ணையும் தொறக்க மாட்றாங்க... சாராயம் எப்போ அத்தியாவஸ்ய சாமானா மாறிச்சுன்னு தெரியலை... இவரு வேற மூணு மாசம் சம்பளம் இல்லை... கைல இருக்கற காசெல்லாம் காலி ஆவுதுன்னு ஒரே புலம்பிட்டு இருக்காரு... ஏதோ என் மாமியா ரோடு கூட்டுற வேலைக்கு போவுதோ பசியில்லாம குடும்பம் தப்பிக்குது...”

“யாராண்ட பேசினாலும் இப்படித்தாண்டி ஒரு கதை சொல்றாங்க... இந்த நோயால சாவாட்டாலும், பசி பட்டினிலையே நிறைய உசிரு போய்டும் போல... சரி பேசிட்டே இருக்கேன் பாரு... நான் கிளம்பறேன்... போனை பக்கத்துலையே வச்சுக்கோ... எதுனாச்சும்ன்னா உடனே சொல்லு... நான் பக்கத்துல முத்தம்மாக்கிட்ட உன்னைய மதியம் வந்து பார்க்க சொல்லுறேன்....”

“சரிம்மா, நீ கவனமா போயிட்டு வா...”, சாந்தியின் அன்னை கிளம்ப, மெதுவாக கதவை பூட்டிவிட்டு வந்து அமர்ந்தாள்...

சாந்திக்கு இது ஒன்பதாவது மாதம்... முதல் முறை கருவுற்றபோது வந்த காய்ச்சலால் நான்கு மாதத்தில் கரு கலைந்துவிட்டது.... அதனால் இந்த முறை அவளின் மாமியார் வீட்டிலும் சரி, அம்மா வீட்டிலும் சரி மிக கவனமாக அவளை பார்த்துக்கொள்கிறார்கள்... மருத்துவர் குறித்த தேதிக்கு இன்னும் இரண்டு வாரம் இருக்கிறது....

தன் கணவரிடம் அடுத்து அரை மணி பேசியவள் பசியெடுக்க குளித்து சாப்பிடலாம் என்று குளியலறை நோக்கி சென்றாள்... குளித்துக் கொண்டிருக்கும்போதே தொடர்ந்து அலைபேசியில் அழைப்பு வந்து கொண்டிருக்க யாருக்கு என்னவோ என்ற பதற்றத்தில் ஒரு நைட்டியை மாட்டிக்கொண்டு சற்று வேகமாக வர, கால் வழுக்கி தரையில் விழுந்தாள் சாந்தி...

தொடரும்

Next episode will be published on 23rd Dec. This series is updated weekly on Wednesdays.

Go to Lock down story main page

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

13 comments

• :GL: story moving next next part very nice ma your way of communication very nice ma very realistic. great dr eagerly waiting next episode ma congrats dr
• 6 masam muna kettadhukku ippo execute panuringala👍 unga style la lockdown feel eppadi irukkumnu kattungal!!

Ungalai nambi me read panuren....but next time entertainer series oda kandipa varanum nattamai ji.....
Good night.
• Thanks for your comments AdharvJo... Aah coronavai vida periya mirattalaa irukke... yegapatta per enkitta intha karu vaithu yezhuthiye aaganumnnu kittathatta oru aaru maadhamaa sollittu irukkaanga... So mannichu... vera vazhiye illai... Neenga padichu comments potte aaganum... Romba azhugaachiyaa irukkaadhu... Kavalaipadaatheenga... ungalukkaaga aduthu sakthi, gayathriyai koottittu varen... adhula comedy kalakkalaam
• Lockdown ullagirkku selvom :eek: :eek: :eek: Nattami lockdown ullagirku selvom aanal corona irukura ullagam vendame :no: :no: Adhuvum ninga ithanai family kanbithal athanai peroda suffering-um padikanume :sad:
Nice start jayanthi ma'am :clap: :clap: Wish you good luck.

Thank you.
• Nalla thodakkam mam :Q: kaazhe vizhuntha pennukku enna aagumo endru thavippaaga irukku.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:
• துவக்கமே தூள் கிளப்பியது! சூப்பர்! இன்றைய யதார்த்த நிலையை அப்படியே படம் பிடித்துக் காட்டுது! முதல் கதை போலவே, இதுவும் தங்களுக்கு அமோக வெற்றி தரும்!

Leave your comment

In reply to Some User

Popular Reads

Recent Updates

Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.