I really hate it when we fight. I hate it even more when we realize that it was all my fault. I am so sorry. I love you so much. Please forgive me…
எத்தனை மணி நேரம் சுற்றினான், எங்கே எல்லாம் சுற்றினான் எதுவும் ஹரீஷ்க்கு தெரியாது. எதையுமே யோசிக்க அவனுக்குப் பிடிக்கவில்லை. ஏமாந்து போய் விட்டோமே என்ற ஆதங்கம் ஒரு பக்கம், நிலாவை அத்தனை பேர் முன்னிலையில் திட்டி விட்டோமே என்ற வருத்தம் ஒரு பக்கமாக அவனை வாட்டி வதைத்தது. எவ்வளவு யோசித்து, ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து அவனுடைய ரோபோட்டை டிசைன் செய்து இப்படி யாருக்கோ தாரை வார்த்து கொடுத்து விடும் படி ஆகி விட்டதே. நிலா டிசைன் ஃபைலை தூக்கிக் கொடுத்திருந்தாலும் அவனாவது யோசித்திருக்க வேண்டும். அதுவும் ப்ரோபஸர் அவனிடம் எச்சரிக்க வேறு செய்திருந்தார்.
நேரம் போக போக ஹரீஷின் மனம் மெல்ல மெல்ல தெளிவாக யோசிக்க தொடங்கியது.
அவன் மீது தவறோ, நிலா மீது தவறோ எப்படி இருந்தாலும் நடந்தது நடந்து விட்டது. அதற்காக இப்படி காரை எடுத்து சுற்றினால் எல்லாம் சரியாகி விடுமா? இல்லை நிலாவிடம் எரிந்து விழுந்தால் நடந்தது இல்லை என்று ஆகி விடுமா?
அவன் பேசிய பேச்சை கேட்டு நிலா என்ன நினைத்திருப்பாள்? இவனுக்கு போய் உதவலாம் என்று நினைத்தேனே என் தப்பு என்று நொந்துப் போயிருப்பாளோ?
நிலாவிடம் உடனடியாக பேச வேண்டும் என்று ஹரீஷுக்கு தோன்றியது. யோசிக்க இன்னொரு வினாடி கூட எடுத்துக் கொள்ளாமல் உடனே மொபைலை எடுத்து அவளை தொடர்புக் கொள்ள முயன்றான். ரிங் ஆகும் சத்தம் கேட்ட உடன் பரபரப்பு அவனைத் தொற்றிக் கொண்டது. ஆனால் நிலா அழைப்பை ஏற்கவில்லை. மொபைல் ரிங் ஆகி அமைதியாகிப் போனது. நிலா அவன் மேல் கோபமாக இருக்கிறாள் போலிருக்கிறது.
ஹரீஷின் விரல் மொபைலின் டச் ஸ்க்ரீனில் எதேச்சையாக பட, ஃபேஸ்புக் ஓபன் ஆனது. அவனுடைய ஃபேஸ்புக் ஃபீடில் இருந்த முதல் போஸ்ட்டில் 232 கமன்ட்ஸ் என்பது கண்ணில் பட்டு அவனுடைய ஆர்வத்தை அதிகமாக்கியது. அப்படி எதைப் பற்றி விவாதிக்கிறார்கள். அந்த போஸ்டை கவனத்துடன் பார்த்தான். அது சுபாஷ் போட்டிருந்த போஸ்ட்.
Should you erase your heart’s pleasant memories just because your ex is married?
படித்த உடனே ஹரீஷின் ப்ளட் ப்ரெஷர் எகிறி குதித்தது. எவ்வளவு கொழுப்பு இவனுக்கு?
இந்த கேள்விக்கா இத்தனை பேர் பதில் சொல்லி இருக்கிறார்கள்? கமன்ட்ஸில் இருந்தவற்றை படித்தான்.
அவளை மறந்துட்டு நீயும் வேற கல்யாணம் செய்துக்கோ, அவ தான் நீ வேண்டாம்னு
indha situation la kuda family understanding aga irupadhum and Sush Vida subi than mukiyamnu realize seithu harish varuvadhu awesome
Thank you.
Happy, healthy and prosperous new year to you and your family🎊🎊