(Reading time: 13 - 25 minutes)
Nenchangoodu yenguthadi
Nenchangoodu yenguthadi

தொடர்கதை - நெஞ்சாங்கூடு ஏங்குதடி!!!!!! - 04 - தனுசஜ்ஜீ

ன்ன வார்த்தை சொல்லி விட்டாயாடா....... வார்த்தைகளில் கூட நெருப்பை அள்ளி வீச முடியுமா இதோ என்னவன் வீசி விட்டானே.......

என்னவன் வாயிலிருந்து இவ்வார்த்தையைக் கேட்ட பின்பும் நான் உயிரோடு இருக்க வேண்டுமா? இன்று அழுகையில் களைந்து கொண்டிருந்தாள் அனிதா.

அந்த ஓய்வு அறையின் கதவு தட்டப்பட்டது ம் தன்னை ஒருவாறு நிலைப்படுத்திக் கொண்டவர் அறையை விட்டு வெளியேறினாள் இறுகிய முகத்துடன்.

சிறிது நேரம் முன்புதான் மலர்ந்த முகத்துடன் கதிரையில் நுழைந்தாள்.

அவன் யாரிடமோ அலைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தான் டார்க் ப்ளூ கலர் பேண்ட் லைட் ப்ளூ கலர் ஃபுல் ஹேண்ட் சர்ட் அணிந்து கை முட்டி வரை முடித்து விட்டிருந்தான் டார்க் புளூ கலர் கோர்ட் அவன் அமரும் நாற்காலி மேல் இருந்தது. மாநிறத்திற்கும் சற்று கூடுதல் நிறம் கம்பீரமான உடற்கட்டு சிகரெட்டை உதடுகள் அளவான மீசை கூர்மையான மூக்கு, கட்டி இழுக்கும் காந்த விழிகள். ஜன்னல் ஓரமாக நின்று திரைசீலையை விலக்கி வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டே அலைபேசியில் பேசும்போது தவழ்ந்து வந்த காற்று அவன் சிகையை கலைக்க கைபேசியை ஒரு கையும், மற்றொரு கை பேண்ட் பாக்கெட்டில் இருக்க கேஷுவலாக அவன் நின்று கொண்டிருந்த தோரணை அவளை இன்னும் அவன் பால் ஈர்த்தது. மங்கையவள் மயங்கி நின்றிருந்த வேளை, வந்த வேலையை மறந்து தான் நின்று கொண்டிருந்தாள்.

பேசியபடியே திரும்பியவன் பார்வை இவளை தான் அளவெடுத்தது. அவளுடைய பால் நிறத்திற்கு எடுப்பாக அடர் நீல நிற ஷிபான் சாரி அணிந்திருந்தாள். வட்ட வடிவ முகம், நெற்றியில் குட்டி பொட்டு, அதன் மேல் சந்தன கீற்று, திரு திருவென்று  முழிக்கும் இரண்டு கோழி குண்டு கண்கள், குட்டி மூக்கு, சுண்டியிழுக்கும் உதடுகள், காதில் சிறிய வளையம், மெல்லிய செயின் அதில் K என்று பொறிக்கப்பட்ட டாலர் அதுவரை ரசித்துக்கொண்டிருந்தவன். K என்ற டாலரை  பார்த்ததும் முகத்தை இறுக்கி தன்னை மீட்டெடுத்து கொண்டான்.

ஆனால் அவள் நின்ற தோரணை மாறாமல் அவனை இரசித்துக் கொண்டே இருக்க, அலைபேசியில் பேசி முடித்து கீழே வைத்தவன், அவள் முகத்திற்கு முன் சொடுக்கு போட்டான்.  அதில் தன்நிலை மீண்டவள்.

எஸ் சார்.

வாட் யூ வாண்ட்.

இந்தப் பேப்பர்ஸ்ல சிக்னேச்சர் சார்.

ஓ எஸ் ப்ளீஸ் என்று அவன் அமர, அவனருகில் சென்று கையெழுத்து பண்ணவேண்டிய

6 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.