(Reading time: 13 - 25 minutes)
Nenchangoodu yenguthadi
Nenchangoodu yenguthadi

பேப்பர்ஸை திருப்பிக் கொண்டிருந்தாள்.

அவன் அருகில் நின்றதால் அவனுடைய பெர்ஃபியுமின் வாசனை அவளை இன்பமாக தாக்க ....தடுமாறும் மனதை கட்டுபடுத்த தெரியாமல் அவஸ்தையுடன் நின்றுக் கொண்டிருந்தாள்.

அனைத்திலும் கையெழுத்திட்டவுடன் அவனை திரும்பியும் பார்க்காது வேக நடையுடன் அறையை கடந்து சென்றாள்.

      அவனின் நெற்றியை சுருக்கி அவள் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்தவன். பிறகு  அலட்சிய பாவத்துடன் தன்நிலை  மீட்டுக் கொண்டான்.  நண்பன் எங்கு சென்றான் என்ற யோசனை அப்பொழுது தான் அவனுக்கு வந்தது.

அவனை அழைத்து அவன் சீக்கிரம் வரும்படி கூறிவிட்டு தன் வேலைகளில் மூழ்கிப் போனான்.

எக்ஸ்கியூஸ் மி சார்.

எஸ்.

சார் ஒன் பேப்பர் மட்டும் மிஸ் ஆயிடுச்சி. இதுலயும் சைன் பண்ணிடுங்க ப்ளீஸ்.

ஓகே.......

(இது நம்ம பாஸ் தான சாந்த சொருபமா இருக்காரு. ம்.....)

அவன் டேபிளின் ஓரத்தில் அமர்ந்தபடியே பேப்பர் - யை கேட்க,

தன் சிந்தனையில் இருந்து மீண்டவள் அவனிடம் பதற்றத்துடன் பேப்பரை நீட்டுகையில், அவனின் ஷீ தடுக்கி அவன் மேலே விழுந்தாள்.

ஒரு நொடியில் நடந்து விட்ட இந்நிகழ்வில் இருவரும் நிலை தடுமாற... நல் வேலையாக அவன் மேலே விழுந்தவள் அவனை தொடாதவாறு நாற்காலியின் இருமுனைகளையும் இருக்கமாக பற்றிக் கொண்டாள்.

யு இடியட் என்று அவளை தள்ளுவதற்கு போனவன் அவள் இடையில் கை வைக்க........

ஆடவனின் தொடுகையில் நிலைகுழைந்தவள் நாற்காலி மேல் வைத்திருந்த கைகள் இரண்டும் வழுவிழக்க...... அவன் மேலே முழுவதுமாக விழுந்தாள்.

பெண்ணவளின் மென்மையை உணர்ந்தவன். தன்னிலை மறக்க......அவள் இடை மேல் இருந்த அவன் கரம் அவள் இடையை இறுக்க.......

          அவனது தோலில் விழுந்த அவளது முகம் செம்மை பூச.... அவள் உடம்பில்  உள்ள செல்கள் எல்லாம் உயிர்பெற்று நடுக்கமெடுக்க..... அவனது காலரை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள். ஒரு வித நாணத்துடன் அவள் நெளிய,

     அவளது அவஸ்தையை கண்டவன் முகம் அவள் முகம் அருகில் கொண்டு சென்றான்.

6 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.