(Reading time: 13 - 25 minutes)
Nenchangoodu yenguthadi
Nenchangoodu yenguthadi

ஏன்... அப்படி...

அவனைக் கூர்ந்து நோக்கியவள். நாம அந்த அளவு இன்னும் க்ளோஸ் ஆகலனு நினைக்கிறேன்.  நீங்க தான் என்னிடம் பேச கூப்பிட்டதால் என் ஞாபகம்.

( இதுக்கு மேல என்ன பேச... எது கேட்டாலும் இவ பதில் சொல்லமாட்டா போலயே)

ஓ..... சாரி தேன்மொழி என்று கூறியவன். என்ன பேசுவது என்று தெரியாமல்... கதிர் சார் பத்தி என்ன நினைக்கிறீங்க..

ம்ம் ....என்று யோசித்தவள். ஒரு நாள் தான் பாத்திருக்கேன் எங்கிட்டகேட்கிறீங்க.

இல்ல உங்க ஃப்ரெண்ட் அனிதா கதிரை லவ் பண்றாங்க உங்களுக்கு தெரியுமா???

ம்ம்... தெரியும்.

அதப் பத்தி பேச தான் உங்களை கூப்பிட்டேன் தேன்மொழி.

(அப்பாடா கண்டன்ட் கிடைச்சிருச்சு)

கதிருக்கு அவங்க அம்மா பொண்ணு பார்த்திட்டு இருக்காங்க. நான் தான் அனிதாவ பொண்ணு கேப்போம்னு சொல்லிருக்கேன். அதுதான் அனிதா ஃபேமிலி பத்தி உங்களுக்கு தெரிஞ்சத சொன்னா எனக்கும் ஹெல்ப்பா இருக்கும்.

அவள் மலர்ந்த சிரிப்புடன் இதுதான் விசயமா இத நீங்க பர்ஸ்டே சொல்லியிருக்கலாமே சார்.

( இப்பதான் நமக்கு மரியாதையே கிடைக்குது)

இல்ல எப்புடி ஆரம்பிக்கிறது தெரியாம. சாரி தேன்மொழி.

இட்ஸ் ஓகே சார்....அனிதாவோட குடும்பம் திருச்சியில் இருக்காங்க. லோயர் மிடில்கிளாஸ் தான் சார். அம்மா டீச்சர் அப்பா ஆர்மி ,ஒரு அக்கா இருக்காங்க இப்ப தான் அவங்களுக்கு மேரேஜ் ஆகி பிரக்னண்டா வேற இருக்காங்க. ரொம்ப கெளரவமான குடும்பம். ஏனா அவுங்க அப்பா அவ்ளோ ஸ்டிரிக்ட். காதல் கல்யாணம் தெரிஞ்சதுனா  கண்டிப்பா ஏத்துக்க மாட்டாரு. அவ லவ் பண்றது உண்மைனாலும் அவ என்கிட்ட கூட இதை  சொன்னது இல்ல. அவ டைரி படிச்சு தான்  தெரிஞ்சுக்கிட்டேன்.

வாட்...

அவள் சிறு தயக்கத்துடன் அடுத்தவங்க டைரி படிக்கிறது அநாகரிகம் தான். எனக்கு மைண்ட் டிஸ்டர்பா இருந்தா கதை புத்தகம் தான் என்னோட ஆறுதல். அன்னைக்குன்னு பாத்து அலமாரிலா புக் தேடப் போனப்ப இந்த டைரி கண்ணுல மாட்டிருச்சி என்று அவள் சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு கூற,

ம்ம்... அப்புறம் என்று அவன் ரசனை மாறா விழிகளுடன் கேட்டான். (அழக ஆராதிக்கிறதுல தப்பு இல்லதானப்பா)

6 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.